தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து மின்வெட்டு பிரச்னைகள் நீடிக்கின்றன. ஆரம்பத்தில் கிராமங்களில் தொடங்கிய மின்வெட்டு, நகரங்களுக்கும் நீண்டது. அதைத் தொடர்ந்து, அமைச்சர் ஆய்வு செய்யும் இடங்கள், முக்கிய அமைச்சர்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் என மின்வெட்டு பிரச்னை நாளுக்குநாள் பூதாகரமானது. இந்த நிலையில், இன்று காலை தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் ஏற்பட்ட மின்தடையால், முதல் தளத்தில் உள்ள அமைச்சர்களின் அலுவலக அறைகள் இருளில் மூழ்கின. இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அரசு மீதான விமர்சனங்களுக்கு வழிவகுத்தது.

தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு
தலைமைச் செயலகத்திலும் மின்வெட்டு

இந்த நிலையில், தமிழ்நாடு மின்வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில்,“சென்னை தலைமைச் செயலகத்தின் பிரதான கட்டடத்தின் முதல் தளத்தில் சில பகுதிகளில் மட்டும்  இன்று (12.10.2026) காலை மின் விநியோகத்தில் தற்காலிகத் தடை ஏற்பட்டது. மற்ற அனைத்து தளங்களிலும் மின் விநியோகம் எவ்விதத் தடையுமின்றி இயல்பாக இருந்தது. தலைமைச் செயலக வளாகத்திற்குள் உள்ள மின் விநியோகக் கட்டமைப்புகள் பொதுப்பணித் துறையின் (கட்டடங்கள்) பராமரிப்பில் உள்ளன.

முதல் தளத்திற்கு மின்சாரம் வழங்கும் நான்கு மின் சுவிட்சுகளில், ஒரு சுவிட்சின் பி-பேஸ் (B-Phase) மின் விநியோகத்தில் மட்டும் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து, பொதுப்பணித் துறை (கட்டடங்கள்) அலுவலர்கள் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு, சம்பந்தப்பட்ட மின் சுவிட்சில் ஏற்பட்ட பழுதை சரிசெய்து, மின் விநியோகத்தை மீண்டும் சீரமைத்தனர். இதனையடுத்து, காலை 11.25 மணியளவில் முதல் தளத்தில் இயல்பான மின் விநியோகம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது. தலைமைச் செயலகத்தின் அனைத்து தளங்களிலும் தற்போது மின் விநியோகம் சீராக உள்ளது.” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

See all 693 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *