விமானியாக வேண்டும் என்பது பலரின் கனவு. ஆனால், அந்த விமானத்தையே தாக்குதலுக்குப் பயன்படுத்தியதாக flydubai துணை விமானி மீது குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. அதுவும் 2001-ம் ஆண்டு அமெரிக்காவை உலுக்கிய 9/11 தாக்குதல்களால் ஈர்க்கப்பட்ட அவர் விமானியாக விரும்பியதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தெரிவிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

29 வயதான ஹமாம் அல்-ஹம்மாமி, கடந்த செப்டம்பர் 30-ம் தேதி துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்குச் சென்ற விமானத்தில் துணை விமானியாகப் பணியாற்றியவர். அந்த விமானத்தைக் கைப்பற்றி, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையப் பயணிகள் முனையத்தில் மோதச் செய்ய அவர் திட்டமிட்டதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆரம்பகட்ட விசாரணை அறிக்கை தெரிவிக்கிறது. இந்தத் திட்டத்தின் பின்னணியில் 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதல் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதலுக்கும் இவருக்கும் என்ன தொடர்பு?

2001 செப்டம்பர் 11-ம் தேதி, அமெரிக்காவில் நான்கு பயணிகள் விமானங்கள் கடத்தப்பட்டன. அவற்றில் இரண்டு விமானங்கள் நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டடங்கள் மீதும், மற்றொன்று அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் மீதும் மோதின. நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விழுந்து நொறுங்கியது. இந்தச் சம்பவங்களில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.

Flydubai துணை விமானி

அந்தத் தாக்குதலைப் போன்றதொரு சம்பவத்தை விமானத்தைப் பயன்படுத்தி நிகழ்த்த வேண்டும் என்ற எண்ணம் ஹமாமியின் மனதில் உருவானதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைமை வழக்கறிஞர் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. அந்த எண்ணத்துக்கும் விமானியாக வேண்டும் என்ற அவரது முடிவுக்கும் தொடர்பு இருந்ததாகவும் விசாரணையில் அவர் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கை முன்கூட்டியே தெரிந்துகொண்டாரா?

செப்டம்பர் 30-ம் தேதி அவர் சென்ற விமானம், பென் குரியன் விமான நிலையத்துக்குச் சென்ற முதல் பயணம் அல்ல. அதற்கு முன்பே இரண்டு முறை அந்த விமான நிலையத்துக்குச் சென்றுள்ளார். விமானப் பாதை மற்றும் விமான நிலையத்தைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொள்ளவே அந்தப் பயணங்களை மேற்கொண்டதாக விசாரணை அறிக்கை கூறுகிறது.

விமான நிறுவனங்களுக்குத் தெரியவில்லையா?

2017-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் படி்துக்கொண்டிருந்தபோது ஹமாமி தீவிரவாதச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. பயங்கரவாதக் குழுக்களைப் புகழும் இணையப் பதிவுகள், தற்கொலைத் தாக்குதல்களை ஆதரிக்கும் தகவல்கள் ஆகியவற்றைப் பார்த்ததுடன், தனிப்பட்ட பயிற்சியாளர் ஒருவரிடம் குத்துச்சண்டையும் கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

2020 முதல் 2024 வரை ஓமன் ஏர் நிறுவனத்தில் பணியாற்றிய அவர், பின்னர் 2025-ல் ராயல் ஏர் மராக் நிறுவனத்தில் மூன்று மாதங்கள் பயிற்சி பெற்றார். ஆனால், அங்கு பணிக்குத் தேர்வாகவில்லை. 2026 ஜனவரியில் Flydubai நிறுவனத்தில் சேர்ந்தார்.

ஓமன் ஏர் நிறுவனத்தில் அவரது தீவிரவாதச் சிந்தனைகள் குறித்த கவலை எழுந்ததால், விமானிப் பயிற்சியிலிருந்து அவர் மாற்றப்பட்டதாகச் செய்தி நிறுவனம் ஒன்றிடம் தகவல் தெரிவித்தவர் கூறியுள்ளார். ஆனால், ஃப்ளைதுபாய் நிறுவனத்தில் சேர்வதற்குத் தேவையான விமானி உரிமம், நன்னடத்தைச் சான்றிதழ் உள்ளிட்ட தகுதிகளை அவர் பெற்றிருந்ததாக ஐக்கிய அரபு அமீரகத்தின் விசாரணை தெரிவிக்கிறது. தேவையான தேர்வுகளிலும் அவர் தேர்ச்சி பெற்றிருந்தார். அப்போது அவரது நோக்கம் குறித்த சந்தேகத்தை ஏற்படுத்தும் அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

விமானத்தின் கேப்டனும் சில பயணிகளும் ஹமாமியைக் கட்டுப்படுத்தியதால், விமானத்தைக் கைப்பற்றும் முயற்சி தடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் தனியாகவே செயல்பட்டதாக அவர் கூறியிருந்தாலும், அந்தத் தகவலை அதிகாரிகள் இன்னும் விசாரித்து வருகின்றனர்.

விமானத்தை இயக்குவதற்கான தகுதிகளைப் பெற்றிருந்த ஒருவர்மீது இத்தகைய குற்றச்சாட்டு எழுந்திருப்பது, விமானப் பாதுகாப்பு நடைமுறைகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் ஆரம்பகட்ட விசாரணையில் வெளியானவை என்பதால், இறுதி விசாரணை முடிவுகளுக்குப் பிறகே முழு விவரங்களும் தெரியவரும்!

More in TamilNews
விருந்துக்கு போனவர்களுக்கு நேர்ந்த கதி.. கங்கையில் படகு விபத்தில் 11 பேர் பலி! நள்ளிரவில் சோகம்! விருந்துக்கு போனவர்களுக்கு நேர்ந்த கதி.. கங்கையில் படகு விபத்தில் 11 பேர் பலி! நள்ளிரவில் சோகம்! October 13, 2026 நன்றி..மீண்டும் வராதீங்க! திடீரென ராஜினாமா செய்த எல்.முருகன்! செய்தாரா? செய்ய வைக்கப்பட்டரா? பின்னணி நன்றி..மீண்டும் வராதீங்க! திடீரென ராஜினாமா செய்த எல்.முருகன்! செய்தாரா? செய்ய வைக்கப்பட்டரா? பின்னணி October 13, 2026 ஆந்திராவில் அள்ளிட்டு வந்த CM விஜய்! சென்னைக்கு 3 TMC கிருஷ்ணா நதிநீர்! சந்திரபாபு கொடுத்த சர்ப்ரைஸ் ஆந்திராவில் அள்ளிட்டு வந்த CM விஜய்! சென்னைக்கு 3 TMC கிருஷ்ணா நதிநீர்! சந்திரபாபு கொடுத்த சர்ப்ரைஸ் October 13, 2026 தமிழ்நாடு வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது.. சில்லறை பணவீக்கம் 6.81% ஆக உயர்வு.. தங்கம் தென்னரசு வேதனை தமிழ்நாடு வீழ்ச்சிப்பாதையில் செல்கிறது.. சில்லறை பணவீக்கம் 6.81% ஆக உயர்வு.. தங்கம் தென்னரசு வேதனை October 13, 2026 விலைவாசி உயர்வில் உச்சம் தொட்ட தமிழ்நாடு.. நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்! விலைவாசி உயர்வில் உச்சம் தொட்ட தமிழ்நாடு.. நிதியமைச்சர் மரிய வில்சன் கொடுத்த விளக்கம்! October 13, 2026 கடலை மிட்டாய் இருக்கு.. கேக் எதுக்கு? குழந்தைகளுக்கு ஸ்வீட்.. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை! கடலை மிட்டாய் இருக்கு.. கேக் எதுக்கு? குழந்தைகளுக்கு ஸ்வீட்.. தமிழக அரசுக்கு பறந்த முக்கிய கோரிக்கை! October 13, 2026

See all 708 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *