இந்தியத் தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்திருந்தன.

ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டெல்லி முழுவதும் பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

அரவிந்த் கெஜ்ரிவால் கைது
அரவிந்த் கெஜ்ரிவால் கைது

டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர்.

டெல்லியில் விமானத்தில் வைத்தே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே மற்றும் கட்சி நிர்வாகிகள் சௌரவ் தாஸ், அஷுதோஷ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

தவிர டெல்லியில் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கைக்கு எதிராகப் போராட்டம் நடத்த முயன்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் டெல்லி போலீசார் குண்டுகட்டாகக் கைது செய்திருக்கின்றனர்.

அதேபோல் டெல்லி சவுத் அவென்யூ பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், டோலா சென் உள்ளிட்டோருடன் போராட்டத்தில் ஈடுபட்ட மம்தா பானர்ஜியும் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

இதனிடையே சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கேவின் பாட்டி உடல்நலக்குறைவால் காலமானதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அபிஜித் தீப்கே.
அபிஜித் தீப்கே

இதை அபிஜித்-க்குத் தெரியப்படுத்தி உள்ளதாகவும், காவலில் இருந்தபடியே போராட்டத்தைத் தொடர விரும்புகிறாரா? அல்லது மகாராஷ்டிரா செல்ல விரும்புகிறாரா? என்பதை அவரே முடிவு செய்யலாம் எனப் போலீசார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவரும் அடுத்த ஓராண்டுக்கு போராட்டங்களில் ஈடுபட முடியாதா? பிணைப் பத்திரத்தால் எழும் கேள்வி சிஜேபி முக்கிய தலைவர்கள் மூவரும் அடுத்த ஓராண்டுக்கு போராட்டங்களில் ஈடுபட முடியாதா? பிணைப் பத்திரத்தால் எழும் கேள்வி October 12, 2026 2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! 2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! October 12, 2026 ஜென் ஸி இளைஞர்களை ஈர்ப்பது பாஜகவுக்கு சவாலாக உள்ளதா? போராட்டக் களத்தில் வெளிப்படும் கோபம் பற்றிய ஒரு பார்வை ஜென் ஸி இளைஞர்களை ஈர்ப்பது பாஜகவுக்கு சவாலாக உள்ளதா? போராட்டக் களத்தில் வெளிப்படும் கோபம் பற்றிய ஒரு பார்வை October 12, 2026 230 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கி 5 வயது குழந்தையை காப்பாற்றிய 11 வயது சிறுவன் 230 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் இறங்கி 5 வயது குழந்தையை காப்பாற்றிய 11 வயது சிறுவன் October 12, 2026 ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் – சொந்தக் கட்சியினரே எதிர்ப்பது ஏன்? ரஷ்யாவிடம் டீசல் வாங்கும் டிரம்ப் – சொந்தக் கட்சியினரே எதிர்ப்பது ஏன்? October 12, 2026 காணொளி: நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள் காணொளி: நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்; அடித்துச் செல்லப்பட்ட கட்டடங்கள் October 12, 2026

See all 663 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *