த.வெ.க-வில் திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளராக இருப்பவர் எம்.சத்யா என்கிற சத்தியராஜ். செய்யாறு தொகுதியைச் சேர்ந்த சத்யா, ஆரணி தொகுதியை உள்ளடக்கிய மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு வந்ததில் இருந்தே நிர்வாகிகள் சிலருடன் மோதல் நீடித்து வருகிறது.
இந்த நிலையில், பெண் நிர்வாகிகள் சிலரிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், தகாத வார்த்தைகளால் பேசுவதாகவும், பணம் வாங்கிக்கொண்டு திருப்பித் தர மறுத்து மிரட்டுவதாகவும் சத்யா மீது குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. இதனால், ஆத்திரமடைந்த பெண் நிர்வாகிகள் ஆரணியில் அமைந்துள்ள மாவட்டச் செயலாளர் சத்யாவின் அலுவலகத்தை இன்று முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். போராட்டத்தின்போது, அலுவலக பேனரில் இடம்பெற்றிருந்த சத்யாவின் புகைப்படத்தை கருப்பு மை பூசி அழித்தும், அலுவலகத்தை இழுத்து மூடியும், `ஆரணியை விட்டு வெளியேறு’ என்று ஆவேசமாக கோஷமிட்டதாலும் பரபரப்பான சூழல் நிலவியது.

இதுகுறித்து பெண் நிர்வாகிகள் கூறுகையில், “மாவட்டச் செயலாளர் சத்யா பெண் நிர்வாகிகளை `வாடி, போடி’ என்று ஒருமையிலும், `கெட்ட’ வார்த்தைகளாலும் இஷ்டத்துக்கு திட்டி பேசி வருகிறார். ஆரணிக்கு டப்பா காரில் வந்தார். நிர்வாகிகள் எல்லோரிடமும் `ரூ.1 லட்சம் கொடு, ரூ.2 லட்சம் கொடு’ என்று பணம் வசூலித்து இன்றைக்கு சொகுசு கார், 4 மனைகளை வாங்கிவிட்டார்.
மகளிரணி நிர்வாகிகள் ஒவ்வொருத்தருக்கும் போன் செய்து `நான் உன்னை என்னோட தங்கச்சிபோல நெனைக்கிறேன். உன்னையும், என்னையும் தொடர்புப்படுத்தி மற்ற நிர்வாகிகள் தவறாக பேசுறாங்க. என்னை தவறாக நெனைக்காதீங்க. இந்த அண்ணன் உங்களுக்கு எப்போதுமே சப்போர்ட்டாக இருப்பேன்’ என்று இவராகவே 20 நிமிடங்கள், 30 நிமிடங்களுக்கு நல்லவர்போல பேசி அவரது வழிக்குக் கொண்டுவருவார். அவரை அனுசரித்து செல்பவர்களுக்கு மட்டுமே கட்சியில் பதவி வழங்குகிறார்’’ என்று சரமாரியான குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர்.
வடக்கு நகரப் பொறுப்பாளரான ராதா என்ற பெண் நிர்வாகி பேசும்போது, “மாவட்டச் செயலாளர் சத்யா என்னிடம் தவறாக நடந்துகொள்ள முயன்றார். என்னுடைய குடும்பச் சூழல் காரணமாக ஆரம்பத்தில் என்னால் வெளியில் சொல்ல முடியவில்லை. ஒருக்கட்டத்தில் பொதுச்செயலாளர் ஆனந்த்தையும் சந்தித்து புகார் கொடுத்துவிட்டு வந்தேன். அதன்பின்னர், என்னை கட்சிப்பதவியில் இருந்து விலகிச் செல்லுமாறு மிரட்டினார் மாவட்டச் செயலாளர் சத்யா. இதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கும் முயன்றேன்.
இதையடுத்து, என்னுடைய பர்சனல் விவகாரங்களை எல்லோரிடம் தெரியப்படுத்தி என்னுடைய நடத்தையை தவறாக சித்திரித்து வந்தார். என்னுடைய பர்சனலை பற்றி பேசுவதற்கு யாருக்கும் உரிமையோ, தகுதியோ கிடையாது. இவரால் என் மாமியார் வீட்டிலும் எனக்கு ஏகப்பட்ட பிரச்னை வந்தது. இப்போதுதான் மற்ற பெண் நிர்வாகிகளும் சத்யாவுக்கு எதிராக வெளியே வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மாதிரி ஒரு ஆளு கட்சியில் இருக்கக் கூடாது. விஜய்க்கு ரொம்ப ரொம்ப அவமானத்தை கொடுத்துக் கொண்டிருக்கிறார். அந்த அளவுக்கு கேவலமான ஒரு ஜென்மம்.

ஏற்கெனவே, நான் முதலமைச்சரின் தனிப்பிரிவிலும் புகாரளித்துள்ளேன். போலீஸார் என்னை அழைத்து விசாரித்தபோது, `கட்சிரீதியாக கொண்டு போங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டார்கள்’’ என்றார்.
இன்னொரு பெண் நிர்வாகியான தமிழ்ச்செல்வி என்பவர் பேசும்போது, “இரண்டு நாளைக்கு முன்பு நள்ளிரவு 2 மணிக்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் ஒரு பெண்ணுடன் சத்யா தனிமையில் இருந்தார். அதுதொடர்பான சிசிடிவி வீடியோ காட்சிகளை கைப்பற்றி வைத்திருக்கிறோம்’’ என்றார்.
தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற போலீஸார், போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அங்கிருந்து கலைந்து செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து, ஆரணி டி.எஸ்.பி அலுவலகத்துக்குச் சென்ற பெண் நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர் சத்யா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகாரளித்தனர். குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் கேட்க மாவட்டச் செயலாளர் சத்யாவை தொடர்புகொண்டபோது, அழைப்பை அவர் ஏற்கவில்லை. பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கும் இந்த விவகாரம் குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ்
November 15, 2026
சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை!
November 15, 2026
"நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை
November 15, 2026
உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்!
November 15, 2026
பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது!
November 15, 2026
மதுரை தனிஷ்க்கில் நகை கொள்ளையன் நிஷாந்த் குறித்து போலீஸுக்கு காட்டி கொடுத்த "பறவை- கொம்புள்ள மான்"
November 15, 2026
விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ்
November 15, 2026
சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை!
November 15, 2026
"நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை
November 15, 2026
உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்!
November 15, 2026
பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது!
November 15, 2026
மதுரை தனிஷ்க்கில் நகை கொள்ளையன் நிஷாந்த் குறித்து போலீஸுக்கு காட்டி கொடுத்த "பறவை- கொம்புள்ள மான்"
November 15, 2026