கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் குமாரபுரத்தைச் சேர்ந்தவர் மருத்துவர் கே.எம்.பினு. பேரூர்க்கடை மாவட்ட மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்துவந்த இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்புதான் நெடுமங்காடு மாவட்ட அரசு மருத்துவமனைக்குப் பணியிட மாற்றம் பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை காலை மருத்துவமனையில் மருத்துவர் பினு வகுப்பெடுத்துக் கொண்டிருந்தபோது, அங்குப் பயிற்சி (ஹவுஸ் சர்ஜன்சி) பெற்று வரும் முதுநிலை பெண் மருத்துவர் தனது உடலில் ஏற்பட்டுள்ள தடிப்பு குறித்து அவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, வகுப்பு முடிந்ததும் மருத்துவமனைக்கு அருகிலுள்ள தனது தனியார் சிகிச்சை அறைக்கு வருமாறு மருத்துவர் பினு அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி மதியம் 12.30 மணியளவில் தனியார் சிகிச்சை அறைக்குச் சென்ற மாணவியிடம், உடல் பரிசோதனை செய்தபோது மருத்துவர் பினு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, சிகிச்சை அறையிலிருந்து வெளியே ஓடிவந்து மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சுமியிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து முறையிட்டார்.

மருத்துவமனை கண்காணிப்பாளர் உடனடியாக நெடுமங்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்த போதிலும், பல மணி நேரமாகியும் போலீஸ் தரப்பில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்தது. மாலையில் பாதிக்கப்பட்ட மாணவியை காவல் நிலையத்திற்கு வரவழைத்து போலீஸார் வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதற்கிடையே, தகவலறிந்த அமைச்சர் ஜி.ஆர். அனில் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். மேலும், போலீஸாரின் மெத்தனப் போக்கைக் கண்டித்து டி.ஒய்.எஃப்.ஐ அமைப்பினர் காவல் நிலையம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

பாலியல் புகார்
பாலியல் புகார்

இதைத் தொடர்ந்து குமாரபுரத்தில் உள்ள மருத்துவர் பினுவின் வீட்டுக்குச் சென்ற போலீஸார் அவரைக் காவலில் எடுத்தனர். விசாரணையில், சிகிச்சை உதவி கோரியே அந்தப் பெண் மருத்துவர் தனது அறைக்கு வந்ததாகவும், முறையான உடல் பரிசோதனை மட்டுமே செய்ததாகவும் கூறி தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.

பின்னர் மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆதாரங்கள் சேகரிக்கும் பணிகளை முடித்த போலீஸார், மருத்துவர் பினுவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ரிமாண்ட் செய்தனர்.

பயிற்சி மருத்துவருக்கு பாலியல் தொல்லைகொடுத்த வழக்கில் கைதான டாக்டர் பினு

பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக இருக்க வேண்டிய நேரத்தில், அவரை மாலையில் காவல் நிலையத்திற்கு வரவழைத்து வாக்குமூலம் பெற்ற போலீஸாரின் அணுகுமுறை மிகவும் கண்டிக்கத்தக்கது என அமைச்சர் ஜி.ஆர். அனில் தெரிவித்துள்ளார்.

மேலும், தனது கோரிக்கையை ஏற்று மருத்துவர் பினுவை சஸ்பெண்ட் செய்த சுகாதாரத்துறையின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றும் அவர் கூறினார்.

More in TamilNews
விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ் விஜயபாஸ்கரால் விஜய்க்கு நெருக்கடி.. பிடியை இறுக்கும் ஈடி! 2வது முறையாக பறந்த சம்மன்! பரபர பாலிடிக்ஸ் November 15, 2026 சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை! சிக்கல் சிங்கார வேலவர் கோயிலில் சக்திவேல் வாங்கும் நிகழ்வு! முருகன் திருமேனியெங்கும் வியர்வை! November 15, 2026 "நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை "நான் சாகல".. கொலையான 8ம் ஆண்டில் உயிருடன் வந்த பெண்.. அப்பாவியை சிறையிலடைத்த போலீசுக்கு ஷாக்.. செல்போனால் வந்த வினை November 15, 2026 உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்! உ.பியிலும் வேலையை காட்டும் ராகுல் காந்தி! சீட் பிரிப்பதில்.. அகிலேஷை டென்ஷனாக்குகிறது காங்கிரஸ்! November 15, 2026 பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது! பாகிஸ்தானில் இருந்து விரிக்கப்பட்ட வலை.. காதல் மயக்கத்தில் ரயில் தண்டவாளத்தை தகர்த்த இருவர் கைது! November 15, 2026 மதுரை தனிஷ்க்கில் நகை கொள்ளையன் நிஷாந்த் குறித்து போலீஸுக்கு காட்டி கொடுத்த "பறவை- கொம்புள்ள மான்" மதுரை தனிஷ்க்கில் நகை கொள்ளையன் நிஷாந்த் குறித்து போலீஸுக்கு காட்டி கொடுத்த "பறவை- கொம்புள்ள மான்" November 15, 2026

See all 801 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *