மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், தி.மு.க எம்.எல்.ஏக்கள் செந்தில்குமார், கார்த்திகேயன், த.வெ.க ஆதரவு எம்.எல்.ஏ நேரு, ல.ஜ.க எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் உள்ளிட்டவர்கள் புதுச்சேரி சட்டப்பேரவையில் தனிநபர் தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதை அரசுத் தீர்மானமாக ஏற்றுக்கொண்டு முன்மொழிந்து பேசிய முதல்வர் ரங்கசாமி, “புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிராகவும், உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்புக்கு மாற்றாகவும் மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. மேலும், அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கைகளுக்கு இந்த சட்டப்பேரவை தனது கண்டனத்தையும், எதிர்ப்பையும் பதிவு செய்கிறது.

மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுத்துள்ள நடவடிக்கை, புதுச்சேரி மாநில மக்களின் நலனுக்கு எதிரானது. புதுச்சேரி உள்ளிட்ட காவிரி பாசன மாநிலங்களின் முன் அனுமதி பெறாமல் மேகேதாட்டுவில் அணை கட்டுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
அதனால் இந்த விவகாரத்தில் கர்நாடக அரசு மேலும் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் இருக்க, மத்திய அரசு உடனடி தடை விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், காரைக்கால் பகுதி விவசாயிகள் நலனைப் பாதுகாக்கவும், காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீராதார உரிமைகளைப் பாதுகாக்கவும், அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஆதரவு அளிப்பதென்று இந்த சட்டப்பேரவை ஒரு மனதாக தெரிவித்துக் கொள்கிறது” என்றார்.
சிஎஸ்கே கேப்டனை மாற்றப் போறீங்களா.. சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிக்கணும்.. முன்னாள் வீரர் அட்வைஸ்!
September 5, 2026
குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
September 5, 2026
உன் மகனால் தான் அறந்தாங்கி தொகுதியில் தோற்றோம்.. திமுக செயற்குழு கூட்டத்தில் கொந்தளித்த ரகுபதி!
September 5, 2026
நதியை தூய்மையாக்கிய பிட்டுவுக்கு நெதர்லாந்தில் வேலை.. ஐரோப்பாவில் செட்டில் ஆக அழைப்பு
September 5, 2026
Bigg boss season 10…முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்களா?…வெளியான லிஸ்ட்!
September 5, 2026
பள்ளிக்கல்வி முதல் வனத்துறை வரை… கைமாறும் இலாகாக்கள்…அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஷாக்?
September 5, 2026
தமிழ்நாடு, கர்நாடாக, ஆந்திராவை விட்டு தெலுங்கானாவுக்கு போன TCS.. சும்மாயில்ல பாஸ்.. ரூ.70000 கோடி மெகா திட்டம்
September 6, 2026
முதலிரவு காட்சியில் எல்லை மீறிய ரச்சிதா? சீரியல்ல கூட விட்டுவைக்கலையா?கொதிக்கும் நெட்டிசன்கள்!
September 6, 2026
GOAT 2 எப்போ அண்ணா?.. சட்டென வந்த கேள்வி.. வெங்கட் பிரபு ரியாக்ஷன் சூப்பர்
September 6, 2026
மாரி செல்வராஜின் மஞ்சணத்தி.. கயாடு லோஹரை தொடர்ந்து பிக்பாஸ் பிரபலம் இன்
September 6, 2026
பிக்பாஸ் 10.. எவிக்ட் செய்யப்பட்ட பிரசாந்த்.. அதற்கு பின் பிளான் இருக்கா?.. காரணம் அதுதானா?
September 6, 2026