தூத்துக்குடியில் இயங்கி வந்த வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த 22.05.2018 அன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியதை அடுத்து, போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பெண்கள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் தொடர்பாக 20 பேர் தொடர்ந்த வழக்கு விசாரணை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நடந்து வருகிறது.

இந்த வழக்கு, நீதிபதிகள் சி.வி. கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 20-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டதா? பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ. 30 லட்சம் இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டதா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அரசு வழக்கறிஞர், “அறிக்கையின் ஒரு பகுதி ஏற்றுக்கொள்ளப்பட்டு அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டுள்ளது. அதில் பரிந்துரைக்கப்பட்ட அதிகாரிகள் மீதான துறை ரீதியான நடவடிக்கைகள் பரிசீலனையில் உள்ளன.
நிவாரணத் தொகை, அரசு வேலை வழங்கப்பட்ட விவரங்கள் மற்றும் அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விளக்கமான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய ஒரு வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கேட்டிருந்தது. அதைத் தொடர்ந்து வழக்கின் அடுத்தகட்ட விசாரணை இன்று (ஆகஸ்ட் 31) நடந்தது.
இந்த விசாரணையின் போது அரசு தரப்பு வழக்கறிஞர், “தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் காவல்துறை அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை கைவிடப்பட்டது.” எனத் தெரிவித்திருந்தது. அதைத் தொடர்ந்து நீதிபதிகள், “நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய பரிந்துரைப்படி மீண்டும் நடவடிக்கை எடுப்பது பற்றி அரசு பரிசீலிக்குமா?” என்பது குறித்து பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றனர்.
சிஎஸ்கே கேப்டனை மாற்றப் போறீங்களா.. சஞ்சு சாம்சன் பெயரை பரிசீலிக்கணும்.. முன்னாள் வீரர் அட்வைஸ்!
September 5, 2026
குடிக்க தண்ணீர் கூட இல்லை! 10 நாட்களாக சுரங்கத்தில் சிக்கிய நபர்! உயிருடன் மீட்கப்பட்ட அதிசயம்
September 5, 2026
உன் மகனால் தான் அறந்தாங்கி தொகுதியில் தோற்றோம்.. திமுக செயற்குழு கூட்டத்தில் கொந்தளித்த ரகுபதி!
September 5, 2026
நதியை தூய்மையாக்கிய பிட்டுவுக்கு நெதர்லாந்தில் வேலை.. ஐரோப்பாவில் செட்டில் ஆக அழைப்பு
September 5, 2026
Bigg boss season 10…முதல் ஐந்து போட்டியாளர்கள் இவர்களா?…வெளியான லிஸ்ட்!
September 5, 2026
பள்ளிக்கல்வி முதல் வனத்துறை வரை… கைமாறும் இலாகாக்கள்…அமைச்சர்களுக்கு காத்திருக்கும் ஷாக்?
September 5, 2026
Taylor Swift Says She Tried to Channel Randy Newman on ‘I Knew It, I Knew You’
September 5, 2026
How Crystal Palace exposed Fulham's defence
September 5, 2026
Tears, blood & triumph – Taylor's iconic career in pictures
September 5, 2026
Jones stuns Trump to set up final against Selby
September 5, 2026
Fritz and Cobolli shocked as men's seeds tumble
September 5, 2026