மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினர் சுப்புலட்சுமி, உயர் நீதிமன்றக் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். “மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வருகின்ற 17ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவிற்காக அச்சிடப்பட்ட பத்திரிகையில் மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு பெயர் நீக்கப்பட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு நிகழ்வுகளில் கோயில் அறங்காவலர் குழுவின் கடமைகளைச் செய்ய தடையோ, இடையோறோ செய்யாமல் ஒத்துழைப்பை அளிக்க உத்தரவிட வேண்டும். மதச்சார்பற்ற பணிகளில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி சரவணன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அறங்காவலர் குழு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் திலக்குமார், “அறங்காவலர் துறையின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு முன் நடைபெற்ற அனைத்து கோயில் குடமுழுக்கிலும் அறங்காவலர் குழு பெயர் உள்ளது அதனையே பின்பற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார்.
இதை கேட்ட நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவில், “இந்து சமய அறநிலையத்துறை செயலாளர், அறநிலையத்துறை ஆணையாளர் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என தெரிவித்துள்ளார்கள். கோயில் செயல் அலுவலர் தான் அறங்காவலர் பெயரை நீக்கி உள்ளார். அவர் சுயமாக இந்த முடிவை எடுத்து உள்ளார். இணை ஆணையர் செல்லத்துரை தனது பெயரை பத்திரிகையில் பதிவு செய்து உள்ளார். குடமுழுக்கு விழாவில் அறங்காவலர் குழு பெயர் விடுபட்டது தவறு” என்றார்.

அப்போது குறுக்கிட்ட அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் பாலசுப்பிரமணியம், “3000 பத்திரிகைகள் அடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தாலும் மீண்டும் பத்திரிகை கொடுக்க முடியாத சூழலில் உள்ளோம்” என தெரிவித்தார்.
தொடர்ந்து நீதிபதி பேசுகையில், “அறங்காவலர் பெயர் விடுபட்டது தவறு. அதே நேரத்தில் குடமுழுக்கு முடிந்தபின் கோயிலில் வைக்கப்படும் கல்வெட்டில் கண்டிப்பாக அறங்காவலர் குழு பெயர் இடம் பெற வேண்டும். கோயில் என்பது மக்கள் அமைதியை தேடி வரக்கூடிய இடம். இந்த இடத்தில் இந்து சமய அறநிலையத்துறை அரசியல் செய்துள்ளது, இது மிகவும் வருந்தத்தக்க செயல்.
இங்கு அரசியல் செய்வது ஏற்கத்தக்கது அல்ல. வருங்காலங்களில் மத வழிபாட்டு தலங்களில் எந்தவிதமான அரசியல் நிகழ்வும் இல்லாமல் விதிப்படி நடைபெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தார்.
தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?.. வானிலை மையம் ஜில் அப்டேட்
September 8, 2026
திமுக மேலதான் விஜய்க்கு கண்..ஜெயலலிதா தப்பே பண்ணலையா! அதையும் பேசுங்க சிஎம்! ஹிண்ட் கொடுத்த டாக்டர்!
September 7, 2026
சீனுக்குள் வந்த விஜய் வசந்த்.. மிகப் பெரிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த ராகுல் காந்தி! பின்னணி என்ன?
September 7, 2026
சுத்த வேஸ்ட்.. 'பதிலுரையில்' எந்த பதிலும் இல்ல! அமலாக்கத்துறை கொடுத்தது ஆதாரமா? சிபிஐஎம் காட்டம்!
September 7, 2026
ஆளுதான் பார்க்க டம்மி மாதிரி இருப்பாங்க.. செஞ்சது பலே வேலை! 15000 பேரை ஏமாற்றிய ‘ஃப்ராடு’ Couple!
September 7, 2026
திடீர் திடீர்னு உடையுதாம்.. பள்ளமாகுதாம்! மக்களை பயமுறுத்தும் சென்னை சாலைகள்! என்னதான் பிரச்சினை?
September 7, 2026
தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?.. வானிலை மையம் ஜில் அப்டேட்
September 8, 2026
Macklemore Responds to Backlash Over “Free Palestine” Plea: “Wanting All Humans to Be Treated Equal Should Never Be Controversial”
September 8, 2026
Venice Home Crowd Gives Italian Horror ‘The Spiral’ 9-Minute Standing Ovation
September 7, 2026
AI cancer cures slowed by chip shortage, says UK's biggest tech boss
September 7, 2026
‘Hombre Al Agua’ Review: Gael García Bernal’s Chaotic Mexican Dramedy Has a Hard Time Staying Above Water
September 7, 2026
Liam and Noel Gallagher Soak Up London Love at U.K. Premiere of ‘Oasis: Don’t Look Back in Anger’
September 7, 2026