கடந்த ஆகஸ்ட் 05- ம் தேதி முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நாள்தோறும் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அத்துறை தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே, தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், தமிழ்நாடு சட்டப்பேரவையின் விதி எண் 110- ன் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் 110 விதியைப் பயன்படுத்தி அரசின் திட்டங்கள் பலவற்றை தமிழ்நாடு முதல்வர் விஜய் அவர்கள் அறிவித்து வருவது மக்களாட்சிக்கும், அதனை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எதிரானதாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நடைபெற்று வரும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 2026-27 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் குறித்த நிறை – குறைகள் குறித்து விவாதித்து முடிவெடுக்கக் கடந்த ஒரு மாத காலமாகச் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. ஆனால், 110 விதியின் கீழ் சிறப்பு அறிவிப்புகள் என்ற பெயரில், நிதிநிலை அறிக்கையில் இல்லாத புதிய திட்டங்களை ஒவ்வொரு நாளும் தமிழ்நாடு முதல்வர் அவர்கள் அறிவித்து வருவது ஏன்?

எல்லாத் திட்டங்களும் 110 விதியின் கீழே அறிவிக்கப்படும் என்றால் தனியாக நிதிநிலை அறிக்கை என்ற ஒன்று எதற்கு? அதன் மீதான விவாதங்கள்தான் எதற்கு? சட்டப்பேரவையில் முதலமைச்சர் வெளியிடுவது அனைத்தும் முக்கியத் திட்டங்கள் என்றால் அதன் நன்மை தீமைகள் குறித்து அவையில் விவாதங்கள் நடைபெற வேண்டாமா? மக்களுக்குத் தேவையான இன்றியமையாத திட்டங்கள் என்றால் அவை ஏன் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறவில்லை?

பொது முக்கியத்துவம் வாய்ந்த அரசு முடிவுகள் மற்றும் புதிய திட்டங்களைப் பேரவைத்தலைவர் அனுமதியுடன் சட்டப்பேரவையில் அறிவிக்கவும், அறிவிக்கும் நேரத்தில் அதன் மீது விவாதம் நடைபெறாமல் இருக்கவும் கடந்த திமுக அதிமுக அரசுகள் விதி 110யை பயன்படுத்தினார்கள்.

எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின், விஜய்
எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின்

அதை, மாற்றம் எனச் சொல்லி வந்த தவெக அரசு, விளம்பர வெற்று அறிவுப்புகளுக்குப் பயன்படுத்துவது நம்பி வாக்களித்த மக்களுக்குச் செய்யும் துரோகமல்லவா? இதுதான் மாற்றமா?

சட்டங்களை உருவாக்கவும், விவாதிக்கவும், நிறைவேற்றவும் அமைக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அவையான சட்டப்பேரவையில் இவ்விதியை பயன்படுத்தி நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாத திட்டங்களை ஒவ்வொரு நாளும் வெளியிடுவதும் அதன் மீது விவாதமில்லாமல் கடந்து போவதும் சட்டப்பேரவை உருவாக்கப்பட்டதற்கான நோக்கத்தையே சிதைக்காதா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் நிறைந்திருக்கும் அவையில், மக்களுக்காக அறிவிக்கப்படும் திட்டங்கள் குறித்து, சட்டமன்ற உறுப்பினர்கள் கருத்தும் தெரிவிக்கும் வாய்ப்பை பறிப்பது கொடுங்கோன்மை அல்லவா? முதலமைச்சரின் பொறுப்பிலிருந்த துறைகளையே, மற்ற அமைச்சர்களுக்கு ஒதுக்கிவிட்ட நிலையில், மற்ற அமைச்சகம் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு மட்டும் முதலமைச்சர் எதற்கு? அமைச்சர்கள் வெளியிட வேண்டிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிடுவது, அமைச்சர்களின் தனித்துவத்தைக் குறைக்காதா? இதன் மூலம் தவெக அரசு தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்ல வரும் செய்தி என்ன?

சீமான்
சீமான்

அனைத்து முக்கியத் திட்டங்களும் முதலமைச்சரின் மூளையில் உதித்தது என்பதையா? கடந்த ஆகஸ்ட் 17ஆம் தேதியிலிருந்து இன்று வரை தவெக அரசு விதி 110-ன் கீழ் வெளியிடப்பட்ட திட்டங்களுக்கான மதிப்பு மட்டும் ஏறத்தாழ ரூ.73,900 கோடி. அதற்கு மேலாக எரிகாற்று உருளை, இலவச பேருந்து, பால் கொள்முதல் உள்ளிட்டவற்றுக்கு ஆண்டுதோறும் தொடர் செலவாக 10,720 கோடி ரூபாய் வரை தேவைப்படுகிறது. இத்தனை ஆயிரம் கோடிகள் செலவிடப்படும் திட்டங்களின் வரவு செலவுகள் நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது ஏன்?

நிதிநிலை அறிக்கையின்படி ஏற்கனவே இந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடி கடன் வாங்குவதாக அறிவித்திருக்கிறீர்கள். இப்பொழுது புதிதாக 110 விதியின் கீழ் அறிவித்திருக்கிற திட்டங்களுக்கான ரூ.73,900 கோடிக்கான நிதியை எப்படி பெறுவீர்கள்? யாரிடம் கடன் வாங்குவீர்கள்? இதுதான் கடன் சுமையை குறைக்கும் முறையா? இதுதான் தமிழ்நாட்டை முன்னேற்றுவதற்கான மாற்றமா? மக்களாட்சிக்கு எதிரான, நிதி ஆதாரமில்லாத வெற்று விளம்பர திட்டங்களை 110 விதியின் கீழ் அறிவிப்பதை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More in TamilNews
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும் புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும் September 7, 2026 SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்? SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்? September 7, 2026 Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ் September 7, 2026 Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம் Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம் September 7, 2026 உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம் உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம் September 7, 2026 கரண்ட் பில் திடீரென டபுள் மடங்கா? இனி உடனே கட்ட வேண்டாம்.. 3 நாளில் ஆய்வு: தமிழக மின்சார வாரியம் கரண்ட் பில் திடீரென டபுள் மடங்கா? இனி உடனே கட்ட வேண்டாம்.. 3 நாளில் ஆய்வு: தமிழக மின்சார வாரியம் September 7, 2026

See all 737 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *