ஒரு பதவியை அடைவது சாதனை. ஆனால், அந்தப் பதவியை அடையும் பாதையிலேயே பல “முதல்”களை உருவாக்குவது… அதைவிட பெரிய சாதனை!
அப்படியொரு வரலாற்றுப் பயணத்தைப் படைத்திருக்கிறார், Air Vice Marshal சக்தி சர்மா. இந்திய பாதுகாப்புப் படைகளில் மருத்துவப் பிரிவைச் சேராத பெண் அதிகாரிகளில் Air Vice Marshal என்கிற இரண்டு நட்சத்திரப் பதவியை அடைந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார். செப்டம்பர் 1, 2026 அன்று Air Headquarters-ல் Assistant Chief of the Air Staff (Education) பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார்.
1994-ல் தொடங்கிய பயணம்!
சக்தி சர்மாவின் -வின் பயணம் இன்றோ நேற்றோ தொடங்கியது கிடையாது. 1994-ம் ஆண்டு ஜூன் 18-ம் தேதி, இந்திய விமானப்படையின் Education Branch-ல் அதிகாரியாக இணைந்தார்.

அதன் பிறகு Training Establishments, Field Stations, Command Headquarters, Air Headquarters என விமானப்படையின் பல்வேறு முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியுள்ளார். மூன்று தசாப்தங்களுக்கும் மேலான சேவைதான் இன்று அவரை இந்த உயரத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது.
“First” என்ற வார்த்தை புதிதில்லை!
Air Vice Marshal ஆவதற்கு முன்பே சக்தி சர்மா -வின் career-ல் பல முக்கியமான milestones இருந்திருக்கின்றன.
2015-ல் Sainik School, Kapurthala-வின் முதல் பெண் Principal ஆனார். அதுமட்டுமல்லாமல், Army, Navy, Air Force ஆகிய Tri-Services-ல் இருந்து ஒரு Sainik School-ஐ வழிநடத்திய முதல் பெண் அதிகாரி என்ற பெருமையையும் பெற்றார்.
அவருடைய பணியின் இன்னொரு முக்கியப் பகுதி கல்வி மற்றும் பாதுகாப்புத் துறைக்கு இடையிலான இணைப்பு. IIT Kanpur மற்றும் Pune University-ல் IAF Chairs of Excellence அமைப்பதிலும் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார். இதன் மூலம் கல்வி நிறுவனங்களுக்கும் பாதுகாப்புத் துறைக்கும் இடையிலான academic மற்றும் strategic collaboration-ஐ வலுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

சக்தி சர்மா -வின் சாதனை ஒரு தனிப்பட்ட பதவி உயர்வாக மட்டும் பார்க்கப்படவில்லை. 1990-களில் விமானப்படையில் இணைந்த பெண்கள் இன்று senior leadership positions-க்கு வருவதற்கான பாதை எப்படி மாறியுள்ளது என்பதற்கும் இது ஒரு முக்கிய எடுத்துக்காட்டு.
“மருத்துவப் பிரிவுக்கு வெளியே ஒரு பெண் இவ்வளவு உயர்ந்த இரு நட்சத்திரப் பதவியை அடைய முடியுமா?” என்ற கேள்விக்கு, தன் 32 ஆண்டுகளுக்கும் மேலான சேவையால் பதில் சொல்லியிருக்கிறார் சக்தி சர்மா!
இப்போது அவர் வகிக்கும் Assistant Chief of the Air Staff (Education) பொறுப்பு, விமானப்படையின் கல்வி சார்ந்த பணிகளுக்கு இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறது.
1994-ல் Education Branch-ல் தொடங்கிய பயணம்… 2026-ல் Air Vice Marshal என்ற வரலாற்றுப் புள்ளியைத் தொட்டிருக்கிறது.
“Touch the Sky with Glory” — இந்திய விமானப்படையின் இந்த வாசகத்தை, Shakti Sharma-வின் பயணம் இன்னும் ஒரு முறை நினைவுபடுத்துகிறது!
முதல்வர் விஜய் உரை: "கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது" – தங்கம் தென்னரசு
September 7, 2026
LIC-ன் 70வது ஆண்டு விழா கோலாகலம்… பயனாளிகளுக்கு நல உதவிகள்!
September 7, 2026
மணிரத்னத்தின் அடுத்த காதல் காவியம் ! வெளியானது ஃபர்ஸ்ட் லுக்!
September 7, 2026
செவ்வாய் ராகுகால வழிபாடு! துர்கா ஸ்லோகம் சொன்னால்..!
September 7, 2026
By-Election: மதராந்தகம், தாராபுரம் சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம்!
September 7, 2026
ரூ.1,020 கோடி முறைகேடு? கே.என்.நேரு உள்ளிட்ட 13 பேர் மீது வழக்குப்பதிவு.. வெளியானது FIR..!
September 7, 2026
3 years on, Morocco earthquake victims still wait for help
September 7, 2026
Top Honour For Goa Police As Amit Shah Presents President's Colour
September 7, 2026
Tigress Tranquilised After Killing 4, Dies On Way To Rescue Centre
September 7, 2026
Blood Dungeon Is A Survivors-Like For People Who Don’t Like Vampire Survivors
September 7, 2026
Man Kills Wife In Guwahati, Chops Fingers, Stores Severed Head In Fridge
September 7, 2026