இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலியப் பிரதமர் ஜார்ஜியா மெலோனியும் நல்ல நண்பர்கள்.

தற்போது மெலோனி ‘இத்தாலியின் பிரதமராக நீண்ட காலம் பதவி வகிப்பவர்’ என்கிற பெருமையை அடைந்துள்ளார்.

இதையொட்டி மெலோனிக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார் மோடி.

“இரண்டாம் உலகப்போருக்குப் பிந்தைய இத்தாலிய வரலாற்றில், மிக நீண்ட காலம் பிரதமராகப் பணியாற்றிய பெருமையைப் பெற்ற எனது தோழி, பிரதமர் மெலோனிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மோடி,  மெலோனி
மோடி, மெலோனி

இந்த மைல்கல், இத்தாலி மக்கள் அவரது தலைமையின் மீது வைத்துள்ள ஆழமான நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.

இந்தியா – இத்தாலி இடையிலான சிறப்புமிக்க மூலோபாயக் கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் அவரது நட்புறவு மிக முக்கியப் பங்காற்றியுள்ளது.

நம் இரு நாட்டு மக்களின் வளமான எதிர்காலத்திற்காக அவருடனான இந்த நெருங்கிய கூட்டுப்பணியைத் தொடர்ந்து முன்னெடுக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.

வரவிருக்கும் ஆண்டுகளில் அவர் தொடர்ந்து வெற்றிகளைப் பெற எனது உளம் கனிந்த நல்வாழ்த்துகள்.”

2022-ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் இத்தாலி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் மெலோனி.

ஆனால், இரண்டாம் உலகப் போருக்குப் பின், இத்தாலியை 1,413 நாட்கள் தொடர்ச்சியாக ஆண்டதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More in TamilNews
இந்து அமைப்பினர் வருகையால் வெடித்த சர்ச்சை.. ஊழியர்கள் ஸ்டிரைக்! மூடப்பட்ட பாரிஸ் ஈபிள் டவர் இந்து அமைப்பினர் வருகையால் வெடித்த சர்ச்சை.. ஊழியர்கள் ஸ்டிரைக்! மூடப்பட்ட பாரிஸ் ஈபிள் டவர் September 8, 2026 தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?.. வானிலை மையம் ஜில் அப்டேட் தமிழகத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?.. வானிலை மையம் ஜில் அப்டேட் September 8, 2026 திமுக மேலதான் விஜய்க்கு கண்..ஜெயலலிதா தப்பே பண்ணலையா! அதையும் பேசுங்க சிஎம்! ஹிண்ட் கொடுத்த டாக்டர்! திமுக மேலதான் விஜய்க்கு கண்..ஜெயலலிதா தப்பே பண்ணலையா! அதையும் பேசுங்க சிஎம்! ஹிண்ட் கொடுத்த டாக்டர்! September 7, 2026 சீனுக்குள் வந்த விஜய் வசந்த்.. மிகப் பெரிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த ராகுல் காந்தி! பின்னணி என்ன? சீனுக்குள் வந்த விஜய் வசந்த்.. மிகப் பெரிய பொறுப்பை தூக்கிக் கொடுத்த ராகுல் காந்தி! பின்னணி என்ன? September 7, 2026 சுத்த வேஸ்ட்.. 'பதிலுரையில்' எந்த பதிலும் இல்ல! அமலாக்கத்துறை கொடுத்தது ஆதாரமா? சிபிஐஎம் காட்டம்! சுத்த வேஸ்ட்.. 'பதிலுரையில்' எந்த பதிலும் இல்ல! அமலாக்கத்துறை கொடுத்தது ஆதாரமா? சிபிஐஎம் காட்டம்! September 7, 2026 ஆளுதான் பார்க்க டம்மி மாதிரி இருப்பாங்க.. செஞ்சது பலே வேலை! 15000 பேரை ஏமாற்றிய ‘ஃப்ராடு’ Couple! ஆளுதான் பார்க்க டம்மி மாதிரி இருப்பாங்க.. செஞ்சது பலே வேலை! 15000 பேரை ஏமாற்றிய ‘ஃப்ராடு’ Couple! September 7, 2026

See all 828 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *