டெல்லி பல்கலைக்கழகத்தின் ஸ்ரீராம் வர்த்தகக் கல்லூரியின் (SRCC) நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.

அப்போது, “காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பான ‘சாத்ரோன் கி கூஞ்ச்’ இயக்கம் ‘பொய்களின் கூச்சல்’ (ஜூட் கி கூஞ்ச்). உண்மையின் கம்பீரமான கர்ஜனைக்கு முன்னால் பொய்யான உரத்த சத்தங்கள் நிலைத்து நிற்க முடியாது.

கடந்த 2013-ம் ஆண்டு இதே கல்லூரி மேடையில் எதிர்க்கட்சித் தலைவராக நான் பேசினேன். அன்று நான் அளித்த வாக்குறுதிகளையும், நாட்டின் தற்போதைய வளர்ச்சியையும் ஒப்பிட்டுப் பார்க்க எனக்குத் தைரியம் இருக்கிறது.

 பிரதமர் மோடி
பிரதமர் மோடி

2013-ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடைந்து, பணவீக்கம் 10 சதவீதமாக உயர்ந்து, ஊழல்களும் பயங்கரவாதத் தாக்குதல்களும் நிறைந்திருந்தது. இன்று உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரச் சக்தியாக உருவெடுத்துள்ளது. சமீபத்தில் தான் குறிப்பிட்ட ‘சிந்தனைவாதி நக்சல்கள்’ (திமாகி நக்சல்) என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது.

அந்த மருந்து அளிக்கப்பட்டவுடன், நோயின் அறிகுறிகள் வெளியே வருவது போல, நாட்டின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் இப்போது தங்களின் உண்மையான முகத்தைக் காட்டத் தொடங்கியுள்ளனர்.

பாகிஸ்தானின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தும் அளவுக்கு இந்தியாவின் பாதுகாப்புத்துறை பலமடைந்துள்ளதுடன், நாட்டில் மாவோயிஸ்ட் பயங்கரவாதம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது” என்றார்.

More in TamilNews
MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ September 6, 2026 நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் September 6, 2026 இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி September 6, 2026 சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் September 6, 2026 புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் September 6, 2026 திமுகவினர் நிறைய லட்டு சாப்பிட்டுள்ளனர்.. எங்களுக்கு லட்டே வேண்டாம்.. அமைச்சர் விஜயலட்சுமி திமுகவினர் நிறைய லட்டு சாப்பிட்டுள்ளனர்.. எங்களுக்கு லட்டே வேண்டாம்.. அமைச்சர் விஜயலட்சுமி September 6, 2026

See all 793 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *