Best Automobile Channel விருதை Motowagon சேனலின் ரெஜினுக்கு வழங்க மேடையேறிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் பேசுகையில், “தங்கள் நலனை காட்டிலும் மக்கள் நலனை முன்னிலைப்படுத்தி வெளிப்படையான ஆட்சி நடத்த வேண்டும் என்பதுதான் எம்.ஜி.ஆர், அம்மா, விஜய் என மூவருக்குமான பொதுவான விஷயம்.

இந்த அரிய வாய்ப்பை எனக்கு அளித்திருக்கிற மக்கள் மனங்களில் நீக்கமற நிலைத்திருக்கும் முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி. இறைவன் அருளால் அவர் கொடுத்த வாய்ப்பை சிறப்பாக செய்து வருகிறேன். I’m Enjoying It.

M.SC B.ed பட்டதாரி என்னுடைய மனைவி. பொது வாழ்வில் இருக்கும் என் மூலம் அவர் நிறைய படித்து முன்னேற நினைத்தார். ஆனால், எனக்காக அவர் எல்லாவற்றையும் தியாகம் செய்தார்.

எல்லா சபாநாயகர்களுக்கும் சில தனிச் சிறப்புக் குணங்கள் உண்டு. அந்த வகையில் பழனிவேல் ராஜனை எனக்குப் பிடிக்கும். செஸ் பெடரேஷனின் தலைவராக இருந்தேன். அம்மா ஆட்சிக்காலத்தில் விஸ்வநாதன் ஆனந்துக்கும் கார்ல்சனுக்கும் நடந்த உலக செஸ் போட்டியை சென்னையில் நடத்த முக்கிய காரணமாக இருந்தேன்.

விளையாட்டுகளின் மீது எனக்கு ஆர்வம் உண்டு” என்றார்.

விகடனுடைய தனிச்சிறப்பு அவர்களின் கார்ட்டூன் தான். உங்களுடைய கார்ட்டூனால் ஒரு காலத்தில் என்ன நடந்தது என்பது மக்களுக்கே தெரியும்.

சமீபத்தில் கூட மத்திய அரசு குறித்து நீங்கள் வரைந்த கார்ட்டூனை உதாரணமாக சொல்லலாம்.

இந்த கம்பெனி சார்ந்து இதை வாங்குங்கள் என்றால் அவர் விளம்பரதாரர் ஆகிவிடுவார்.

ஆனால், தரத்தை பொறுத்து எதை வாங்கலாம்… கூடாது என மக்கள் மொழியில் சொல்வதால்தான் ரெஜினுக்கு இந்த விருது.

அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அம்மா இருந்த போது, என்னை சென்னை மேயர் ஆக்கப் போவதாக கூறினார். உடனே என்னுடைய மகன், மேயரான பிறகு புதிய கார் வாங்க வேண்டாம்.

அதற்கு முன்பாகவே வாங்கிவிடுவோம் என Ford Endeavor வாங்கிக் கொடுத்தார். அதேமாதிரி இப்போது ஆயிரம் விளக்கில் போட்டியிடும் போதும், ‘அப்பா நீங்கள் ஆயிரம் விளக்கில் வென்றுவிடுவீர்கள்.

ஜெயித்த பிறகு கார் வாங்கினால் தவறாக பேசிவிடுவார்கள். அதனால் இப்போதே வாங்கிவிடலாம்’ என ஒரு காரை வாங்கிக் கொடுத்தார். எனக்கு பெயர் ஞாபகம் வரவில்லை. காரை பொறுத்தவரைக்கும் என் பிள்ளைகளின் சாய்ஸ்தான்.

ஆனால், எனக்கு பழைய அம்பாசிடர் கார்தான் பிடிக்கும்” என்றார்.

More in TamilNews
MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ September 6, 2026 “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? September 6, 2026 நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் September 6, 2026 இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி September 6, 2026 சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் September 6, 2026 புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் September 6, 2026

See all 767 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *