ஈரான் போர் முடிவு இல்லாமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்கவிருக்கும் மிட் டேர்ம் தேர்தலுக்காக எல்லாம் போரைச் சீக்கிரம் முடிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறிவிட்டார்.

போர் எப்போது தான் முடியும் என்கிற கேள்வி உலக நாடுகளிடம் எழுந்துள்ளது. இந்தப் போர் காரணமாக உலக நாடுகளின் எரிசக்தி போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால்தான், இந்தக் கேள்வி இந்தப் போர் தொடங்கியதில் இருந்து வலுவாக ஒலித்துகொண்டு இருக்கிறது.

அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா
அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா

இதற்கான விடையை ‘The Guardian’ செய்தி நிறுவனத்திற்குத் தந்திருக்கிறார் அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் லியோன் பனேட்டா.

“ஈரான் போர் இன்னும் ஆறு மாதங்களுக்குக்கூட தொடரலாம். இன்னொரு பக்கம், இது மத்தியக் கிழக்கில் நடக்கும் தொடர்ச்சியான போராகக் கூட மாறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதற்கு காரணம், இந்தப் போர் முடிவுக்கான தெளிவான பாதை இன்னும் தெரியவில்லை.

மூன்று ஆப்ஷன்ஸ்

இப்படி நடக்காமல் இருக்க வேண்டுமானால், மூன்று ஆப்ஷன்கள் மட்டுமே உள்ளன.

ஒன்று, அமெரிக்கா இந்தப் போரில் இருந்து பின்வாங்கி, இது தோல்விகரமான போர் என்று ஒப்புக்கொள்ள வேண்டும். இந்த ரூட்டை ட்ரம்ப் எடுப்பது மிக மிக கடினம்.

இரண்டாவது, தாக்குதலுக்கு அவ்வப்போது பழிக்குப் பழி என எதிர் தாக்குதல்கள் நடத்திகொள்வது. அதுதான் தற்போது நடந்துகொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் இரு நாடுகளுமே பேச்சுவார்த்தைக்கும் முயலாது… ஆபத்தான போரை நோக்கியும் நகராது.

மூன்றாவது, ஹார்முஸ் நீர்ச்சந்தியை முழுவதுமான அமெரிக்காவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவது. இதன் மூலம், ஈரான் அந்த நீர்ச்சந்தியைக் கட்டுப்படுத்துவதை முழுவதுமாகத் தடுக்க முடியும்” என்று பேசியிருக்கிறார் லியோன் பனேட்டா.

More in TamilNews
கார் திருட்டு போகக்கூடாதாம்.. 2வது மாடியில் ஸ்கார்பியோவை தூக்கி வைத்த நபர்.. வினோதம்! கார் திருட்டு போகக்கூடாதாம்.. 2வது மாடியில் ஸ்கார்பியோவை தூக்கி வைத்த நபர்.. வினோதம்! September 8, 2026 திமுக We miss you! சீக்கிரம் வாங்க சண்டை போடலாம்! சட்டசபை கடைசி நாளில் ஆதவ் அர்ஜுனா பேச்சு திமுக We miss you! சீக்கிரம் வாங்க சண்டை போடலாம்! சட்டசபை கடைசி நாளில் ஆதவ் அர்ஜுனா பேச்சு September 8, 2026 பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ்வேயில்.. இப்படி ஒரு ராட்சச பகுதியா? பார்க்கவே வியப்பா இருக்கே! பெங்களூர்- சென்னை எக்ஸ்பிரஸ்வேயில்.. இப்படி ஒரு ராட்சச பகுதியா? பார்க்கவே வியப்பா இருக்கே! September 8, 2026 தாய் மாமன் தங்க மோதிரம்.. சென்னை, கோவைக்கு 89,955 மோதிரங்கள் பேக்கிங்.. யாருக்கு எப்போது கிடைக்கும்? தாய் மாமன் தங்க மோதிரம்.. சென்னை, கோவைக்கு 89,955 மோதிரங்கள் பேக்கிங்.. யாருக்கு எப்போது கிடைக்கும்? September 8, 2026 விஜய் சட்டப்பேரவையில் அனல் பறக்க பேச.. மகன் ஜேசன் வெளியிட்ட கூல் போஸ்ட்.. என்ன ஒரு டைமிங்! விஜய் சட்டப்பேரவையில் அனல் பறக்க பேச.. மகன் ஜேசன் வெளியிட்ட கூல் போஸ்ட்.. என்ன ஒரு டைமிங்! September 8, 2026 நெல்லை, ராமேசுவரம் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் நெல்லை, ராமேசுவரம் பாசஞ்சர் ரயில்கள் உள்ளிட்ட தென்மாவட்ட ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம் September 8, 2026

See all 752 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *