சிபிஐஎம் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் விழுப்புரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, “நாங்கள் அமைச்சரவையில் சேரவில்லை. எங்களைப் பொறுத்தவரையில் நாங்கள் மிகத் தெளிவான முடிவை எடுத்திருக்கிறோம். எந்தச் சூழ்நிலையிலும் நாங்கள் அமைச்சரவையில் சேர மாட்டோம். அன்றிருந்த சூழ்நிலையில் ஆட்சி அமையாமல் போய்விடக் கூடாது என்பதற்காகவும், தவெக-வைத் தவிர வேறு யாருக்கும் ஆட்சி அமைக்க வாய்ப்பில்லை என்பதற்காகவும்தான் நாங்கள் ஆதரவு அளித்தோம்.

 முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மற்றபடி நாங்கள் அமைச்சரவையில் சேரவோ அல்லது அவர்களின் கூட்டணி சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்கவோ மாட்டோம். நாங்கள் அந்த கூட்டணியில் இல்லை, எனவே அவர்களின் கூட்டங்களுக்கும் போகப் போவதில்லை என்பதில் தெளிவான முடிவை ஏற்கனவே கூறிவிட்டோம். கடந்த மாதம் தவெக கூட்டணிக் கட்சிகள் கூடிய கூட்டத்திற்கே நாங்கள் செல்லவில்லை.

எங்களைப் பொறுத்தவரையில், இன்று நாங்கள் திமுக கூட்டணியிலோ அல்லது வேறு எந்தக் கூட்டணியிலோ இல்லை. இடதுசாரி கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படத் தொடங்கியுள்ளோம். அடுத்த மாதம் திருச்சியில் இடதுசாரி கட்சிகள் சார்பில் பெரிய பேரணி உள்ளிட்ட நிகழ்வுகளை நடத்தவுள்ளோம்.

உதயநிதி ஸ்டாலின்
உதயநிதி ஸ்டாலின்

அந்தப் பயணத்தை நாங்கள் தொடர்ந்து முன்னெடுப்போம். இடைத்தேர்தல் அறிவிப்பு நேற்றுதான் வெளியாகியுள்ளது. இனிமேல் தான் எங்கள் கட்சியில் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க முடியும். தேர்தலில் யாருக்காவது ஆதரவு அளிப்பதா, அளிக்காமல் இருப்பதா அல்லது யாருக்கு ஆதரவு அளிப்பது போன்ற அனைத்துக் கேள்விகளுக்கும் இனிமேல் தான் பேசி முடிவெடுக்க வேண்டும்.” என்றார்.

More in TamilNews
முதல்வர் விஜய் AI டீப்பேக் வீடியோ.. பல லட்சம் மோசடி? ராஜஸ்தானில் 28 வயது இளைஞர் கைது முதல்வர் விஜய் AI டீப்பேக் வீடியோ.. பல லட்சம் மோசடி? ராஜஸ்தானில் 28 வயது இளைஞர் கைது September 14, 2026 "ஒரு தலைவர் என்பவர்.." விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? பிக்பாஸ் சர்ச்சை.. விஜய் டிவி விளக்கம் "ஒரு தலைவர் என்பவர்.." விஜய்யை விமர்சித்தாரா விஜய் சேதுபதி? பிக்பாஸ் சர்ச்சை.. விஜய் டிவி விளக்கம் September 14, 2026 நெல்லை டூ ஓசூர் வரை திடீரென வெளுத்து கட்டிய மழை! ஜில்லென மாறிய கிளைமேட்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு நெல்லை டூ ஓசூர் வரை திடீரென வெளுத்து கட்டிய மழை! ஜில்லென மாறிய கிளைமேட்.. மக்கள் நிம்மதி பெருமூச்சு September 14, 2026 ஹோட்டலில் ரூ.230.. ஸ்விக்கியில் ரூ.436! ஒரே உணவுக்கு கிட்டத்தட்ட டபுள் விலை! கொந்தளித்த நெட்டிசன்கள் ஹோட்டலில் ரூ.230.. ஸ்விக்கியில் ரூ.436! ஒரே உணவுக்கு கிட்டத்தட்ட டபுள் விலை! கொந்தளித்த நெட்டிசன்கள் September 14, 2026 விஜய் சேதுபதியின் கருத்தை எப்படி பாக்குறீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன் விஜய் சேதுபதியின் கருத்தை எப்படி பாக்குறீங்க.. எடப்பாடி பழனிசாமி கொடுத்த ரியாக்‌ஷன் September 14, 2026 திணறும் சென்னை புறநகர்.. சிங்கபெருமாள் கோவில் அருகே 2 கி.மீ. தூரத்திற்கு உச்சத்தில் டிராபிக் நெரிசல் திணறும் சென்னை புறநகர்.. சிங்கபெருமாள் கோவில் அருகே 2 கி.மீ. தூரத்திற்கு உச்சத்தில் டிராபிக் நெரிசல் September 14, 2026

See all 781 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *