அமெரிக்காவும், இஸ்ரேலும் நவீன ஆயுதங்கள், தொழில்நுட்பம் மிகுந்த ஏவுகணைகளை வைத்து, ஈரானை வழிக்குக் கொண்டுவர நினைத்தது.
ஆனால், ஈரானோ ஒரே ஒரு நீர்ச்சந்தியை மூடி அமெரிக்காவிற்கு, இஸ்ரேலுக்கு மட்டும் ஆட்டம் காட்டாமல், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்துக்கே நெருக்கடியை ஏற்படுத்திவிட்டது… இன்னும் செய்து வருகிறது.
ஈரான் போர் உச்சத்தில் இருந்தபோது, ஹார்முஸ் நீர்ச்சந்தி மூடப்பட்டு எண்ணெய் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. இன்னும் அதன் பாதிப்புகள் முழுமையாகத் தீரவில்லை.
ஹார்முஸ் நீர்சந்தி தற்போதும் முழுமையாகத் திறக்கப்படவில்லை. ஆனால், முன்பு போல இல்லாமல், இப்போது உலக நாடுகள் இந்தச் சூழலைச் சமாளிக்கக் கற்றுக்கொண்டுள்ளன.

அது எப்படி?
> ஆகஸ்ட் 30-ம் தேதிதான், ஹார்முஸ் நீர்ச்சந்தியில் கடுமையான தாக்குதல்கள் மீண்டும் தொடங்கின. ஆனால், அதற்குள் அந்த வாரத்தில் ஒரு நாளைக்கு 8-9 மில்லியன் பேரல் எண்ணெய்கள் கடந்துவிட்டன. இது உலக நாடுகளுக்குத் தற்போது உதவி வருகிறது.
மேலும், அதன்பிறகும், ஈரான் அனுமதித்த கப்பல்கள் அவ்வப்போது நாளுக்கு 2 மில்லியன் பேரல் எண்ணெய் என்று ஹார்முஸைக் கடந்திருக்கிறது. ஆனால், இப்போதும் இந்தப் போக்குவரத்து நடக்கிறதா என்பதற்கு எந்தத் தரவுகளும் இல்லை.
> மத்திய கிழக்கு நாடுகளுக்கு எண்ணெய் வர்த்தக வருமானம் பிரதான வருமானங்களில் ஒன்று. இதனால், இந்த வர்த்தகம் பாதிக்கப்படுவதை அந்த நாடுகள் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருக்காது அல்லவா?
அதனால், அவை ஹார்முஸைத் தாண்டி வேறு ரூட்டுகளில் எண்ணெய் ஏற்றுமதியைத் தொடங்கியிருக்கின்றன.
உதாரணத்திற்கு, சவூதி அராம்கோ ஆகஸ்ட் மாதத்திலிருந்து வளைகுடாப் பகுதியிலுள்ள ராஸ் தனுரா துறைமுகத்திலிருந்து எண்ணெயை ஏற்றுமதி செய்து வருகிறது.
இப்படிப் புதிய ஏற்றுமதி தளங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றன மத்திய கிழக்கு நாடுகள்.

> OPEC அமைப்பு நாடுகளிடமிருந்துதான் உலகமெங்கும் பெரும்பான்மையாக எண்ணெய் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. இப்போது அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளும் எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியையும் அதிகரித்துள்ளன.
அமெரிக்காவிடம் வெனிசுலா எண்ணெய் வேறு இருக்கிறது. அதையும் அமெரிக்கா ஏற்றுமதி செய்யப் பிளான் போடும் என்பது குறிப்பிடத்தக்கது.
> சில தரவுகளின்படி, எண்ணெய் பிரச்னை சூழலால், உலக நாடுகள் எண்ணெய் பயன்பாட்டைக் குறைத்து, மாற்றுப் பாதைகளுக்குச் சென்றுள்ளன. இதனால், சந்தையில் எண்ணெய் டிமாண்டும் குறைந்துள்ளது என்று தரவுகள் கூறுகின்றன.
> சில நாடுகள் ஹார்முஸ் நீர்ச்சந்தியை எண்ணெய் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தாத நாடுகளிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்றன.
இதற்கு நல்ல உதாரணம் நாம்தான். ஆம்… இந்தியா ரஷ்யாவிடமிருந்து தொடர்ந்து எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறது.
மிசா கைது.. விஜய் செய்த செயல்.. நடுவில் புகுந்த அமைச்சர் ஸ்ரீநாத்! கடைசியாக செங்கோட்டையன் தந்த பதில்
September 10, 2026
மீண்டும் முதலில் இருந்து.. சிஎஸ்கே பயிற்சியாளராகும் ஹேமங் பதானி? முடிவில் பிடிவாதமாக இருக்கும் தோனி!
September 10, 2026
பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து ஆடைகளை களைவது பலாத்காரம் இல்லை! உயர்நீதிமன்றம் தீர்ப்பு
September 10, 2026
டென்ஷனாகும் தாலிபான்கள்.. திடீரென ஆப்கானிஸ்தான் மாணவர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்.. ஷாக் பின்னணி
September 10, 2026
ஹனிமூனுக்கு கிளம்பிட்டாரா? 72 வயது மலேசிய லெஜெண்ட் அப்தா அலிஃப்.. அப்ப அந்த 20 வயது பெண் யார்?
September 10, 2026
கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கிறது? MGM வெளியிட்ட மருத்துவ அறிக்கை
September 10, 2026
Bending Spoons to buy collaboration tools maker Miro for $1.36B, 90% less than its 2022 valuation
September 10, 2026
மிசா கைது.. விஜய் செய்த செயல்.. நடுவில் புகுந்த அமைச்சர் ஸ்ரீநாத்! கடைசியாக செங்கோட்டையன் தந்த பதில்
September 10, 2026
Maven Robotics wants to steal your robot deployment deal
September 10, 2026
Google signs its biggest rice-methane carbon credit deal with Indian startup Mitti Labs
September 10, 2026
ID verification giant IDScan confirms data breach with more than 150 million driver’s licenses stolen
September 10, 2026
Top 10 most affordable ICE cars with ADAS
September 10, 2026