மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நாக்பூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு தேர்தல் வாக்குப்பதிவு குறித்தத் தகவல்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

அப்போது அவர், நாக்பூரில் படித்த மக்கள் வாழும் வசதியான பகுதிகளில் தனக்கு 70% முதல் 75% வாக்குகள் கிடைப்பதாகவும், அதே நேரத்தில் குற்றப் பின்னணி மற்றும் சிவப்பு விளக்குப் பகுதிகள் உள்ள இடங்களில் 92% வாக்குகள் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இதுதொடர்பாக பேசிய அவர், “அரசியலில் அனைத்து விதமான அனுபவங்களையும் நான் கடந்துவந்துவிட்டேன். இந்தப் புள்ளிவிவரங்களை வைத்து தனக்கும் குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கும் இடையே தனிப்பட்ட தொடர்போ அல்லது அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவோ இருப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது.

அப்பகுதிகளில் மேம்படுத்தப்பட்ட சாலை வசதிகள், கட்டமைப்புப் பணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத்திட்டங்கள் ஆகியவற்றின் காரணமாகவே அங்கிருந்த வாக்காளர்கள் என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளனர்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

வாக்காளர்கள் மிகவும் விவேகமானவர்கள். அவர்கள் இலவசங்களைப் பெற்றுக்கொண்டாலும், தங்களுக்கு உண்மையாக உழைக்கும் வேட்பாளருக்கே வாக்களிப்பார்கள். கடந்தக்கால தேர்தல் ஒன்றில் வாக்காளர்களுக்குத் தலா 1 கிலோ ஆட்டிறைச்சி வழங்கிப் பிரச்சாரம் செய்த போதிலும், அந்தத் தேர்தலில் நான் தோல்வியைத் தழுவினேன்” என்று பேசியிருக்கிறார்.

More in TamilNews
நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் September 13, 2026 நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்! நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்! September 13, 2026 திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா? திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா? September 13, 2026 திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை September 13, 2026 பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான் பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான் September 13, 2026 Senthil Balaji: பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி Senthil Balaji: பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி September 13, 2026

See all 820 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *