டெல்லியில் நடக்கும் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியாவிற்கு வந்திருக்கிறார் ரஷ்ய அதிபர் புதின்.
இன்று இந்தியப் பிரதமர் மோடி – புதின் சந்திப்பு தனிப்பட்ட முறையில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பு குறித்து மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
“பிஷ்கேக்கில் நாங்கள் இருவரும் சந்தித்திருந்தோம். அடுத்த இரண்டு வாரங்களுக்குள்ளே டெல்லியில் அதிபர் புதினை மீண்டும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி.
இன்றைய சந்திப்பின் போது நாங்கள் கலந்தாலோசித்த முக்கியமான விஷயங்கள்:

> ‘பொருளாதாரக் கூட்டுறவுத் திட்டம் 2030’-ஐ செயல்படுத்துவது உட்பட, இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்துவது,
> கட்டமைப்பு, ஆற்றல் (எனர்ஜி), தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் கலாசாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவது,
> நமது பூமியின் நலனை மேம்படுத்தும் நோக்கில், இந்தியா வகிக்கும் பிரிக்ஸ் தலைமைப் பொறுப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்தும் பேசினோம்”
– என்று மோடி தனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறார்.
புதினுக்கு பரிசு
புதினுக்குத் திருக்குறள் புத்தகத்தைப் பரிசாக வழங்கியிருக்கிறார் மோடி. அது குறித்து, “ரஷ்ய அதிபர் புதினுக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின் திருக்குறள் ரஷ்ய மொழிபெயர்ப்புப் பிரதியைப் பரிசளித்தேன்.
திருக்குறள் தேச எல்லைகள், மொழிகளைக் கடந்த திருவள்ளுவரின் அளப்பரிய ஞானத்தைப் பறைசாற்றுகிறது” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் மோடி.
இங்கெல்லாம் மாட்டுக்கறி சமைக்க கூடாது.. கனடாவில் ஓவராக சத்தம் போட்ட இந்திய பெண் அதிரடி கைது!
September 12, 2026
இந்தியாவை அவமானப்படுத்திய ஜி ஜின்பிங்? கருப்பு உறையால் மூடிய காரில் டெல்லியில் பயணித்தது ஏன்? பின்னணி
September 12, 2026
விருச்சிக ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்.. 66 நாட்களில் நடக்கப்போகும் அதிசயம் என்ன?
September 12, 2026
கனடாவில் 'பீப் பார்பிகியூ' சமைத்ததை தடுத்த இந்திய பெண்.. கடைசியில் எங்கே நிறுத்தியிருக்கு பாருங்க
September 12, 2026
திடீர்னு எப்படி ஈரானுக்கு இவ்வளவு பலம்.. அமெரிக்க ஆய்வில் வெளியான ஷாக் தகவல்! பின்னணியில் சீனா!
September 12, 2026
கணவன் வேண்டாம்.. ஓடிப்போன மனைவியை தேடிப்பிடித்து காதலனுடன் திருமணம் செய்து வைத்த நபர்
September 12, 2026
பணத்திற்காக உடலை விற்பது எவ்ளோ பெரிய வலி? ஆண்கள் கண்ணை பார்த்து பேச மாட்டாங்க.. சரண்யா பகீர் பேட்டி!
September 12, 2026