காஞ்சிபுரம் மாவட்டம் சிங்காடிவாக்கத்தில், மர வியாபாரியிடம் வாங்கிய முன்பணத்திற்காக மருத்துவமனைக்கு செல்ல விடாமல் தடுத்ததால், நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும் அவரது சிசுவும் கூடாரத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட வேண்டும் என திருமாவளவன் கோரிக்கை விடுத்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இருளர் சமூகத்தைச் சார்ந்த நிறைமாத கர்ப்பிணி தேன்மொழியும், அவரது பச்சிளம் சிசுவும் பிரசவத்தின்போதே உயிரிழக்கும் பெருந்துயரம் நடந்துள்ளது.

கர்ப்பிணி

இதன் பின்னணியை அறியும்போது நெஞ்சு பதறுகிறது. பழங்குடியினரை இன்னும் கொத்தடிமைகளாக வைத்து அவர்களின் உழைப்பைச்சுரண்டும் கொடுமைகள் இன்னும் தொடர்கிறது என்பது இதன்மூலம் உறுதியாகிறது. இந்தக் குரூரம் நடந்தேறுவதற்கு காரணமாக இருந்த மரவியாபாரி ஆறுமுகம் என்பவரின் மனிதாபிமானமற்ற போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கண்டிக்கிறது.

மரம் வெட்டும் தொழிலாளியான ஆனந்தன் (40) மற்றும் இவரது மனைவி தேன்மொழி (35) ஆகிய இருவரும் காஞ்சிபுரம் அரக்கோணம் சாலையில் உள்ள ‘வெள்ளை கேட்’ பகுதியில் ஆறுமுகம் என்ற விறகு வியாபாரியிடம் மரம் வெட்டும் கூலித் தொழிலாளர்களாகப் பணியாற்றி வந்தனர்.

இவர்கள் ஆறுமுகத்திடம் முன்பணமாக ரூ.20,000 கடன் வாங்கியிருந்ததால், அவர் அமைத்துக் கொடுத்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தங்கி வேலை செய்து வந்துள்ளனர். கடந்த 08/09/2026 அன்று, ஒன்பது மாத நிறைமாத கர்ப்பிணியாக இருந்த தேன்மொழிக்குக் கடுமையான பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கணவர் ஆனந்தன் முயன்றிருக்கிறார். இதனையறிந்த மரக்கிடங்கு உரிமையாளர் ஆறுமுகம் “வாங்கிய முன்பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டுச் செல்ல வேண்டும் அல்லது மரங்களை முழுமையாக வெட்டி முடித்துவிட்டுத்தான் செல்ல வேண்டும்” எனக் கூறி, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவிடாமல் தடுத்துள்ளார்.

மரணம்
மரணம்

இவரது மனிதாபிமானமற்ற இந்த குரூர மனநிலை பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பணம், சாதி போன்றவற்றின் அடிப்படையிலான அவரது ஆதிக்கவெறி உளவியல் இதிலிருந்து வெளிப்படுகிறது. உரிய நேரத்தில் தேவையான மருத்துவ உதவி கிடைக்காத நிலையில், அந்த தார்ப்பாய்க் கூடாரத்திலேயே தேன்மொழிக்கு பிரசவம் நடந்துள்ளது. கடுமையான பிரசவ வலி மற்றும் அதீதமான இரத்தப்போக்கு ஆகியவற்றின் காரணமாக தேன்மொழியும், அவரது பச்சிளம் குழந்தையும் அந்தக் கூடாரத்திலேயே பரிதாபமாகத் துடிதுடித்து உயிரிழந்துள்ளனர்.

இந்தக் கொடூர சம்பவத்தை அறிந்த தோழர் மகேஷ் அவர்களின் தலைமையிலான காஞ்சி மக்கள் மன்றத்தைச் சார்ந்த தோழர்களும் விடுதலைச் சிறுத்தைகளும் 09/09/2026 அன்று பொன்னேரிக்கரை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அதன் பின்னர் காவல்துறையினர் தலையிட்டு பிணக்கூராய்வுக்காக தேன்மொழி உடலை செங்கற்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் முறையிட்ட பின்னரே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்துவதற்கு ஏதுவாக, ‘சிறப்புப் புலனாய்வுக் குழுவை’ அமைத்திட அரசு ஆணையிட வேண்டும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மர வியாபாரி ஆறுமுகத்தின் மனிதாபிமானமற்ற செயலுக்காக அவரைச் சிறைப்படுத்தி வருக்கு உரிய தண்டனை கிடைத்திட சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அத்துடன், பழங்குடியினர், இருளர் மற்றும் விளிம்புநிலை சமூக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உரிய ஆய்வை நடத்தி அவர்கள் கொத்தடிமைத்தனத்தில் சிக்கியுள்ளனரா என்பதைக் கண்டறிய வேண்டுமென்றும்; 2030ல் தமிழ்நாடு ‘கொத்தடிமை முறை இல்லாத மாநிலம்’ என்கிற செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தி, அதனை முற்றாகக் களைவதற்குத் தீவிரமான நடவடிக்கைகள எடுக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுன் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More in TamilNews
நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் September 13, 2026 நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்! நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்! September 13, 2026 திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா? திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா? September 13, 2026 திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை September 13, 2026 பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான் பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான் September 13, 2026 Senthil Balaji: பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி Senthil Balaji: பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி September 13, 2026

See all 820 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *