தேமுதிக-வின் 22-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது, “2005-ம் ஆண்டு கேப்டன் விஜயகாந்த் அவர்களால் மதுரையில் 28 லட்சத்திற்கும் அதிகமான தொண்டர்கள் சூழத் தொடங்கப்பட்ட தேமுதிக, இன்று 22-வது ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் எங்களது நிர்வாகிகள் ‘இயன்றதைச் செய்வோம் இல்லாதவர்க்கே’ என்ற தலைவரின் உயரிய வழிகாட்டலின்படி நலத்திட்ட உதவிகளை வழங்கி இத்தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றனர்.

அரசியலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தனிப்பட்ட நிலைப்பாடு உண்டு. இடதுசாரி கட்சிகள் தனித்து போட்டியிடுவது அவர்களுடைய முடிவு. ஆனால், எங்களைப் பொறுத்தவரை தே.மு.தி.க அங்க வகிக்கும் தி.மு.க கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும்.

பிரேமலதா
பிரேமலதா

மதுராந்தகம் தொகுதி வேட்பாளர் பரந்தாமன் மற்றும் தாராபுரம் தொகுதி வேட்பாளர் சுகன்யா ஆகியோரை அறிவிக்கும் முன்பே அண்ணன் ஸ்டாலின் என்னை தொலைபேசியில் தொடர்புகொண்டு ஆலோசனை நடத்தினார்.

அதற்கு தே.மு.தி.க-வின் 100 சதவீத முழு ஒத்துழைப்பும் ஆதரவும் இருக்கும் என்று நான் உறுதியளித்தேன். தி.மு.க வேட்பாளர்கள் தலைமைக் கழகத்திற்கு நேரில் வந்தும் வாழ்த்துப் பெற்றனர். முதலமைச்சரும் பிரசாரத்திற்கு அழைத்துள்ளதால், நிச்சயம் தி.மு.க வேட்பாளர்களை ஆதரித்துத் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன்.

பரந்தூர் முதல் பட்டினப்பாக்கம் தலைமைச் செயலகம் வரை, அரசு கொண்டு வரும் எந்தவொரு திட்டமும் மக்களுக்காகவே கொண்டு வரப்படுகிறது. ஒட்டுமொத்த மக்களும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே எந்தவொரு திட்டமும் முழுமையான வெற்றியடையும்.

மக்கள் விரும்பும் திட்டங்களையே அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதை சட்டமன்றத்திலும் நான் பதியவைத்துள்ளேன். முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம் வெற்றிபெற எங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்றார்.

More in TamilNews
திருமாவளவன் பேச்சு பற்றி மடக்கி மடக்கி கேட்ட "ஒன்இந்தியா.." வீரபாண்டியன் பதில் என்ன தெரியுமா? திருமாவளவன் பேச்சு பற்றி மடக்கி மடக்கி கேட்ட "ஒன்இந்தியா.." வீரபாண்டியன் பதில் என்ன தெரியுமா? September 17, 2026 தமிழன்டா! டாடா குழுமத்தில் திருப்பம்.. என். சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு! தமிழன்டா! டாடா குழுமத்தில் திருப்பம்.. என். சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு! September 17, 2026 மோடியை வாழ்த்தாத அண்ணாமலை.. முதல் ஆளாக புகழ்ந்து பாராட்டிய விஜய்.. கடுப்பான காங்கிரஸ்! ட்விஸ்ட் மோடியை வாழ்த்தாத அண்ணாமலை.. முதல் ஆளாக புகழ்ந்து பாராட்டிய விஜய்.. கடுப்பான காங்கிரஸ்! ட்விஸ்ட் September 17, 2026 ஒத்திவைக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா.. நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு! ஒத்திவைக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா.. நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு! September 17, 2026 "அறங்காவலர்களை ஓரம் கட்டிவிட்டு அராஜகம்!" – மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடி.. பிடிஆர் சுளீர் "அறங்காவலர்களை ஓரம் கட்டிவிட்டு அராஜகம்!" – மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடி.. பிடிஆர் சுளீர் September 17, 2026 மதுரை மீனாட்சிய பார்க்கணும்! 10 நிமிஷம்தான் டைமு! Gate-ஐ உடைச்சிடுவோம்! கொந்தளிக்கும் பெண் பக்தர்கள் மதுரை மீனாட்சிய பார்க்கணும்! 10 நிமிஷம்தான் டைமு! Gate-ஐ உடைச்சிடுவோம்! கொந்தளிக்கும் பெண் பக்தர்கள் September 17, 2026

See all 886 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *