திருச்சியில் அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, தமிழ்நாடு முதல்வரின் வெளிநாட்டுப் பயணம், தொழில் முதலீடுகள், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் விமர்சனங்கள் மற்றும் மாநிலத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், “முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்து எதிர்க்கட்சிகள் எழுப்பும் விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியான மற்றும் கருத்தியல் ரீதியான கேள்விகளுக்கு மட்டுமே பதில் சொல்ல வேண்டிய அவசியம் உள்ளது.

வீட்டில் சும்மா உட்கார்ந்துகொண்டு வாய்க்கு வந்ததைப் பேசுபவர்களுக்கெல்லாம் பதில் அளிக்கத் தேவையில்லை. ஆக்கப்பூர்வமான அரசியல் செய்யத் தெரியாதவர்கள் விமர்சனத்துக்காக மட்டுமே எதையாவது பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அதனால்தான் இன்று அவர்கள் எதிர்க்கட்சியாகக்கூட அமர முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

முதல்வர் விஜய்யைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவது ஜனநாயக உரிமை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அந்த ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இடங்களில், அவதூறாகப் பேசுவது, ஆபாசமான கருத்துகளைத் தெரிவிப்பது மற்றும் கீழ்த்தரமாக விமர்சிப்பது போன்ற செயல்களைத்தான் நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம்.

உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசுவதுதான் தி.மு.க-வின் உண்மையான அடையாளம். அதை அவர்கள் செய்யாமல் இருந்தால்தான் ஆச்சரியப்பட வேண்டிய விஷயம்.

அது தி.மு.க-வின் அரசியல் DNA-விலும், வளர்ப்பிலும் ஊறிப்போன ஒன்று. அந்தக் கட்சித் தலைவரின் சொந்த மகனின் பேச்சுகளே அதற்குப் மிகப்பெரிய சான்று. தனது சொந்த மகனையே இத்தகைய அரசியல் பண்பாட்டோடு வளர்த்திருக்கும் ஒருவர், தனது கட்சியை எப்படிப்பட்ட வழியில் வளர்த்திருப்பார் என்பதை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.

அறநிலையத்துறை அமைச்சராக இருந்து நிர்வகித்த ஒருவரின் பேச்சிலேயே ‘அறம்’ இல்லை என்றால், அவர் எந்தத் தகுதியில் அந்தத் துறையை நிர்வகித்தார் என்று பொதுமக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலமைச்சரையோ, பெண்களையோ அல்லது பொதுமக்களையோ யார் இழிவாகவும் தரக்குறைவாகவும் பேசினாலும், அவர்கள் மீது சட்டப்பூர்வமான கடுமையான நடவடிக்கைகள் நிச்சயமாக எடுக்கப்படும்.

விஜய்
விஜய்

தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில்தான் பெண்களுக்கு எதிரான குற்றங்களும் சட்ட ஒழுங்குப் பிரச்னைகளும் அதிகரித்துவிட்டதா? மழை நின்றாலும் தூவானம் விடாது என்ற பழமொழிக்கு ஏற்ப, முந்தைய ஆட்சியில் செய்யப்பட்ட தவறுகளையும் சீர்கேடுகளையும் தற்போதைய அரசு தீவிரமாகச் சரிசெய்து வருகிறது.
பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்யவும் போதைப்பொருட்களை முழுமையாக ஒழிக்கவும் முதலமைச்சர் அவர்கள் உடனடி நடவடிக்கையாக ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படை மற்றும் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போன்ற கட்டமைப்பு நடவடிக்கைகளை உருவாக்கியுள்ளார்.

காவல்துறையினருக்குத் தீவிர உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விரைவாகப் பெற்றுத்தரப்பட்டு வருகிறது” என்றார்.

More in TamilNews
திருமாவளவன் பேச்சு பற்றி மடக்கி மடக்கி கேட்ட "ஒன்இந்தியா.." வீரபாண்டியன் பதில் என்ன தெரியுமா? திருமாவளவன் பேச்சு பற்றி மடக்கி மடக்கி கேட்ட "ஒன்இந்தியா.." வீரபாண்டியன் பதில் என்ன தெரியுமா? September 17, 2026 தமிழன்டா! டாடா குழுமத்தில் திருப்பம்.. என். சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு! தமிழன்டா! டாடா குழுமத்தில் திருப்பம்.. என். சந்திரசேகரனுக்கு மீண்டும் 5 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு! September 17, 2026 மோடியை வாழ்த்தாத அண்ணாமலை.. முதல் ஆளாக புகழ்ந்து பாராட்டிய விஜய்.. கடுப்பான காங்கிரஸ்! ட்விஸ்ட் மோடியை வாழ்த்தாத அண்ணாமலை.. முதல் ஆளாக புகழ்ந்து பாராட்டிய விஜய்.. கடுப்பான காங்கிரஸ்! ட்விஸ்ட் September 17, 2026 ஒத்திவைக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா.. நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு! ஒத்திவைக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா.. நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிப்பு! September 17, 2026 "அறங்காவலர்களை ஓரம் கட்டிவிட்டு அராஜகம்!" – மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடி.. பிடிஆர் சுளீர் "அறங்காவலர்களை ஓரம் கட்டிவிட்டு அராஜகம்!" – மீனாட்சியம்மன் கும்பாபிஷேகக் குளறுபடி.. பிடிஆர் சுளீர் September 17, 2026 மதுரை மீனாட்சிய பார்க்கணும்! 10 நிமிஷம்தான் டைமு! Gate-ஐ உடைச்சிடுவோம்! கொந்தளிக்கும் பெண் பக்தர்கள் மதுரை மீனாட்சிய பார்க்கணும்! 10 நிமிஷம்தான் டைமு! Gate-ஐ உடைச்சிடுவோம்! கொந்தளிக்கும் பெண் பக்தர்கள் September 17, 2026

See all 886 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *