மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்கக் கோரி, சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், “கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் தேர்வான ஆறு எம்.எல்.ஏ.க்கள், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க கட்சியில் இணைந்தனர். தேர்தல் முடிவுகள் வெளியான குறுகிய காலத்திலேயே அரசியல் காரணங்களுக்காக பதவி விலகியதால், மக்கள் வரிப்பணத்தில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.

வாக்கு
வாக்கு

எனவே, இந்தத் தேர்தல் செலவுகளை அந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களிடமே டெபாசிட்டாகப் பெறவும், அவர்கள் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்கவும் வேண்டும். மேலும், வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலுக்கும், த.வெ.க வேட்பாளர்களான மரகதம் குமாரவேல் மற்றும் சத்தியபாமா ஆகியோரின் வேட்புமனு ஏற்புக்கும் தடை விதிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், “மதுராந்தகம் மற்றும் தாராபுரம் எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது கடும் அதிருப்தியளிக்கிறது.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிடுவது ஒரு கேலிக்கூத்தான செயலாகும். ராஜினாமா செய்துவிட்டு அதே தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது வாக்காளர்களை அவமானப்படுத்தும் செயல். ஒரு கட்சியில் வெற்றி பெற்றவர்கள் ராஜினாமா செய்துவிட்டு மற்றொரு கட்சியில் போட்டியிடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இருப்பினும், சட்ட நடைமுறைகளின்படி மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வழி இல்லை. இதுபோன்ற விவகாரங்களில் தேர்தல் ஆணையம் உரிய வழிமுறைகளை வகுக்க ஆய்வு செய்ய வேண்டும்” என அறிவுறுத்தியுள்ளது.

More in TamilNews
கண்ணதாசன் வரிகள்… இளையராஜா இசை… மனதை மயக்கும் ‘சிந்து நதி’! கண்ணதாசன் வரிகள்… இளையராஜா இசை… மனதை மயக்கும் ‘சிந்து நதி’! September 21, 2026 பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை… வெளியான வீடியோவால் பரபரப்பு! பீகாரில் பள்ளி மாணவர்களுக்கு நேர்ந்த கொடுமை… வெளியான வீடியோவால் பரபரப்பு! September 21, 2026 சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது சீனா: சவப்பெட்டிக்குள் கேட்ட முனகல் சத்தம்.. திறந்து பார்த்ததுமே வெலவெலத்த குடும்பம்! என்ன நடந்தது September 21, 2026 முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள் முஸ்லீம் வாக்குகள் யாருக்கு போனாலும் வெல்வது பாஜக தான்.. உபியில் சிக்கலாகும் இஸ்லாமியர் வாக்குகள் September 21, 2026 விஜய் தொடங்கி வைக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்…..உசிலம்பட்டியில் இறங்கிய 1,106 மோதிரங்கள்! விஜய் தொடங்கி வைக்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்…..உசிலம்பட்டியில் இறங்கிய 1,106 மோதிரங்கள்! September 21, 2026 10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது 10ம் வகுப்பு மாணவியிடம் நடுரோட்டில் பாலியல் சீண்டல்! நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம்! 3 பேர் கைது September 21, 2026

See all 836 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *