கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமிக்கும் தமிழ்நாட்டை சேர்ந்த 17 வயது சிறுவனுக்குமிடையே பேஸ்புக் மூலமாக பழக்கமாகி நாளடைவில் காதலாகி மாறியுள்ளது. இதையடுத்து காதலியை நேரில் சந்திப்பதற்காக கடந்த செப்டம்பர் 10ஆம் தேதி இலங்கைக்கு செல்ல திட்டமிட்ட சிறுவன் தான் அணிந்திருந்த தங்க சங்கிலியை படகோட்டியிடம் கொடுத்து கள்ளதனமாக இங்கிருந்து இலங்கைக்கு சென்றுள்ளார்.
படகில் இலங்கைக்கு சென்று சிறுவனை, மன்னார் தம்மன்னா கடற்படை முகாமிற்குட்பட்ட ஆதாமின் பாலம் பகுதியில் உள்ள 6-வது மணல் திட்டில் தனியாக இறக்கிவிட்டு, படகோட்டி மீண்டும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றதாகத் கூறப்படுகிறது.
வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர், மணல் திட்டில் தனியாக நின்றிருந்த சிறுவனை கண்டு சந்தேகமடைந்து அவரை கைது செய்து, மேலதிக விசாரணைக்காக மன்னார் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகமாகும் நபர்களை நேரில் சந்திக்கும் போது, குறிப்பாக சிறார்களின் பாதுகாப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் பாதுகாவலர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை இச்சம்பவம் எடுத்துக்காட்டுகிறது.

மேலும், உரிய ஆவணங்கள் மற்றும் சட்டபூர்வமான நடைமுறைகள் இன்றி கடல் வழியாக எல்லை தாண்டி பயணம் செய்வது ஆபத்தானது என்பதால், இத்தகைய நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.
குழந்தை வடிவில் அருளும் அன்னை….ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியின் மகிமை!
September 18, 2026
இதுக்கும் திமுக தான் காரணம்… மீனாட்சியம்மன் கோயில் விஐபி பாஸ் விவகாரத்தில் அமைச்சர் விளக்கம்!
September 18, 2026
Bigg Boss 10 Tamil : ஐயோ இவரா ? ரசிகர்கள் எதிர்பார்க்காத முதல் எவிக்ஷன் !
September 18, 2026
அஜித் அகர்கர் காலம் ஓவர்.. அந்த இடத்திற்கு வரும் பார்த்திவ் படேல்.. பிசிசிஐ தலைமை எடுத்த முடிவு!
September 18, 2026
இனி திரிணாமுல் காங்கிரஸ் கிடையாது.. மம்தா பானர்ஜி கட்சிக்கு புதிய பெயர் – சின்னம் ஒதுக்கீடு
September 18, 2026
மும்மொழிக் கட்டாயம் ? சி.பி.எஸ்.இ.- க்கு உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட் !
September 18, 2026
How run clubs are getting the city moving
September 18, 2026
Sehwag shines, Dravid goes ballistic as India beat Australia by seven runs
September 18, 2026
The Dark Heaven Review: அமானுஷ்யம், மர்மப் புத்தகம், துப்பறியும் களம் – ஆனாலும் சொதப்புவது எங்கே?
September 18, 2026
Justin Bieber’s Surprise Album Debuts — And Brings The Singer To New Chart Lows
September 18, 2026
L.L.Bean Opens ‘Rebooted’ Flagship, Moving The Brand Forward Into The Next Century
September 18, 2026
100 years of BCCI! Indian cricket board to form committee for year-long celebrations
September 18, 2026