தவெக ஆட்சி அமைத்ததற்குப் பிறகு அ.தி.மு.க-வின் எம்.எல்.ஏ-க்கள் சிலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெக-வில் இணைந்தனர். அதைத் தொடர்ந்து, அந்தத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன் முதற்கட்டமாக மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த இடைத்தேர்தலுக்கான பிரசாரமும் தொடங்கிவிட்டது. இந்த நிலையில், தவெக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள தவெக தரப்பிலிருந்து நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல் வெளியாகியிருந்தது.

இடைத்தேர்தல்

அந்தப் பட்டியலுக்கு எதிராக பா.ஜ.க தலைவர் கராத்தே தியாகராஜன் தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை வைத்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “தமிழகத்தில் நடைபெற உள்ள மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் பிரச்சாரம் செய்வதற்காக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN, வெளியிட்டுள்ளது.

இந்த நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் தமிழக வெற்றிக்கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக தமிழக முதல்வர் திரு ஜோசப் விஜய் அவர்களுடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் வைகோ, துரை வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காதர் மொகிதீன், விசிக கட்சியைச் சார்ந்த ரவிகுமார் MP, வன்னியரசு மற்றும் சிந்தனை செல்வன் போன்ற பிற கட்சிகளின் தலைவர்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

நட்சத்திர பேச்சாளர்களை பொறுத்தவரை அந்தந்த கட்சியை சார்ந்த தலைவர்களை மட்டுமே நட்சத்திர பேச்சாளர்களாக அறிவிக்க முடியும் என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தினுடைய பிரிவு 77 ல் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக மாநில தேர்தல் ஆணையம்

இப்படி சட்டத்தினுடைய பிரிவு தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்போது, தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN, தவெக கொடுத்துள்ள 40 பேர் கொண்ட நட்சத்திர வேட்பாளர் பட்டியலில் பிற கட்சிகளின் தலைவர்கள் அடங்கிய பேர்களைக் கொண்ட அந்த பட்டியலை தமிழக வெற்றி கழகத்தினுடைய நட்சத்திர பேச்சாளர்களாக அங்கீகரித்துள்ளது. இது தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN மற்றும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை கேலிக்கூத்தாக்கும் செயலாக உள்ளது.

சட்டத்தின்படி நடக்க வேண்டிய தேர்தல் ஆணையத்தையும், சட்டத்தையும் கேலிக்கூத்தாக்கி, ஆளும் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக செயல்படுகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழகத்தில் நடைபெறக்கூடிய மதுராந்தகம் தாராபுரம் இடைத்தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடைபெறுமா என்ற கேள்விக்குறியை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே இதே போன்று ஆம் ஆத்மி கட்சி அதன் உறுப்பினர் அல்லாதவரை நட்சத்திர வேட்பாளராக அறிவித்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்து, பிறகு கட்சியின் உறுப்பினர் அல்லாதவர் நட்சத்திர பேச்சாளராக இருக்க முடியாது என்ற நிலை உருவானது.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்

எனவே உடனடியாக தமிழக தேர்தல் ஆணையம் – CEO TN தமிழக வெற்றி கழகத்திற்கு 2026 மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்காக தமிழக வெற்றிக்கழகத்திற்கு அங்கீகரித்துள்ள நட்சத்திர பேச்சாளர் பட்டியலை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More in TamilNews
`3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை…' – அமைச்சர் தமிழன் பார்த்திபன் `3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை…' – அமைச்சர் தமிழன் பார்த்திபன் September 20, 2026 "ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? "ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? September 20, 2026 `பிரதமர் மோடியை கிண்டல் செய்த ராகுல் காந்தி' பாஜக தலைவர்கள் கண்டனம்! – என்ன நடந்தது? September 20, 2026 “முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்…”- அன்புமணி காட்டம்! “முதல்வர், மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் மீண்டும்…”- அன்புமணி காட்டம்! September 20, 2026 தவெக: “ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" – முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு தவெக: “ரெட்டி கேங் துணையோடு ஆட்சி..!" – முதல்வர் விஜய்யை விமர்சிக்கும் அப்பாவு September 20, 2026 'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன் 'உங்களிடம் மன்றாடிக் கேட்கிறேன்!'- நா தழுதழுக்க பேசி ஸ்டாலினிடம் கையெடுத்துக் கும்பிட்ட துரைமுருகன் September 20, 2026

See all 898 in TamilNews →

Latest News
அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் சிங்கமாகவும், வெளிநாட்டில் பூனையாகவும் இருக்க கூடாது- சந்தீப் அபிஷேக், வைபவ் சூர்யவன்ஷி இந்தியாவில் சிங்கமாகவும், வெளிநாட்டில் பூனையாகவும் இருக்க கூடாது- சந்தீப் September 20, 2026 Asian Games: பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி.. செமி பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது Asian Games: பதக்கத்தை உறுதி செய்த இந்திய மகளிர் அணி.. செமி பைனலில் வங்கதேசத்தை வீழ்த்தியது September 20, 2026 "ஐபிஎல்-இல் கூட வாய்ப்பு இல்லாதவருக்கு இந்திய அணி தொப்பியை கொடுப்பீங்களா?" ஸ்ரீகாந்த் ஆவேசம் "ஐபிஎல்-இல் கூட வாய்ப்பு இல்லாதவருக்கு இந்திய அணி தொப்பியை கொடுப்பீங்களா?" ஸ்ரீகாந்த் ஆவேசம் September 20, 2026 சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில் சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து ருதுராஜ் நீக்கமா? சஞ்சு சாம்சன் போட்டி.. பத்ரிநாத் அதிரடி பதில் September 20, 2026 ரோஹித், விவிஎஸ் லக்ஷ்மனுடன் தேவையில்லாத மோதல்.. அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. உள்ளே நடந்தது என்ன? ரோஹித், விவிஎஸ் லக்ஷ்மனுடன் தேவையில்லாத மோதல்.. அஜித் அகர்கர் பதவிக்கு வேட்டு.. உள்ளே நடந்தது என்ன? September 20, 2026 49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா 49 பந்தில் சதம்.. ஷபாலி வர்மா உலக சாதனை.. ஆசிய விளையாட்டில் வங்கதேசத்தை நொறுக்கிய இந்தியா September 20, 2026

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *