“ஜெம் நிறுவனர் வீரமணி மீதான வழக்கில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்” என்று பாஜக முன்னாள் மகளிர் தேசிய அணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியிருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “தொழிலதிபர் ஜெம் கிரானைட்ஸ் வீரமணி மீதான சிறுமிகள் பாலியல் வன்கொடுமை தொடர்பான குற்றச்சாட்டுகளும், விசாரணையில் அடுத்தடுத்து வெளிவரும் பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன.

 வீரமணி
வீரமணி

கல்வி உதவித் தொகை வழங்குவதாகக் கூறி பல ஏழைச் சிறுமிகளிடம் அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி தவறான முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படும் இத்தகைய சம்பவங்களுக்கு அளிக்கப்படும் கடுமையான தண்டனைகளே பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயத்தினை வழங்கும்.

குறிப்பாக, இந்த போக்சோ வழக்கை முடித்து வைக்க காவல்துறை ஏற்கெனவே முயன்றதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகே மீண்டும் விசாரணை தீவிரமடைந்திருப்பது பல கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.

இவ்வளவு தீவிரமான குற்றச்சாட்டுகள் கொண்ட வழக்கில் உண்மைகள் முழுமையாக வெளிவர வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெற்றதாகக் கூறப்படும் காலகட்டத்தில் அவர்களுக்கு உதவியவர்கள், உண்மைகளை மறைக்க அல்லது விசாரணையைத் திசைதிருப்ப முயன்றவர்கள் என யாரேனும் இருந்தால், அவர்களது பங்கும் பாரபட்சமின்றி விசாரிக்கப்பட வேண்டும். மேலும் FIR -ல் பெயர் சேர்க்காமல் இருக்க பல கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது திடுக்கிட வைக்கிறது.

இவ்வழக்கில் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பாதுகாப்பையும் தனியுரிமையையும் உறுதி செய்து, அவர்கள் அச்சமின்றி சாட்சியமளிக்கத் தேவையான அனைத்து பாதுகாப்பையும் தமிழக அரசு வழங்க வேண்டும்.

வானதி சீனிவாசன்
வானதி சீனிவாசன்

மேலும் இவ்விவகாரத்தில் திமுக-வும், ஆளுங்கட்சியான தவெக-வும் ஒருவருக்கொருவர் வாதிட்டுக் கொண்டு காலந்தாழ்த்தாமல், அரசியல் தலையீடோ, அதிகாரம் மற்றும் செல்வாக்கின் அடிப்படையிலான பாரபட்சமோ ஒருபோதும் இல்லாமல் இவ்வழக்கு நேர்மையான முறையில் நடைபெற வேண்டும்.

இவ்வழக்கில் தமிழக அரசு துரிதமாகவும் வெளிப்படையாகவும் விசாரணையை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், அனைத்து உண்மைகளையும் வெளிக்கொணர வேண்டும். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரிய செல்வாக்கு படைத்தவர்களாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

More in TamilNews
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட தடை வேண்டும்! முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு! எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட தடை வேண்டும்! முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு! September 24, 2026 ஹைதராபாத்தில் சிரிச்சிட்டே பேசிய ஐடி ஊழியர் திஷா.. அந்தரங்க விஷயத்தை பேசிய வக்கீல்.. என்னாது 5 கோடி? ஹைதராபாத்தில் சிரிச்சிட்டே பேசிய ஐடி ஊழியர் திஷா.. அந்தரங்க விஷயத்தை பேசிய வக்கீல்.. என்னாது 5 கோடி? September 24, 2026 பவர்கட் பஞ்சாயத்து இனி இல்லை.. தமிழகத்தில் பேட்டரி ’எனர்ஜி ஸ்டோரேஜ்’ திட்டம்! அமைச்சர் குட் நியூஸ்! பவர்கட் பஞ்சாயத்து இனி இல்லை.. தமிழகத்தில் பேட்டரி ’எனர்ஜி ஸ்டோரேஜ்’ திட்டம்! அமைச்சர் குட் நியூஸ்! September 24, 2026 அதிகாலையில் கோர விபத்து.. ஆம்னி கார் மோதி 4 பேர் பலி.. திருமணம் முடித்து சென்னை திரும்பியபோது சோகம்! அதிகாலையில் கோர விபத்து.. ஆம்னி கார் மோதி 4 பேர் பலி.. திருமணம் முடித்து சென்னை திரும்பியபோது சோகம்! September 24, 2026 வெயிலுக்கு கெட் அவுட்டு..மழைக்கு கட் அவுட்டு! 5 மாவட்டங்களில் சம்பவம் செய்ய போகும் மழை! மெட் அப்டேட் வெயிலுக்கு கெட் அவுட்டு..மழைக்கு கட் அவுட்டு! 5 மாவட்டங்களில் சம்பவம் செய்ய போகும் மழை! மெட் அப்டேட் September 24, 2026 "பணம் தந்தால் மட்டுமே பதவி.." மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர் "பணம் தந்தால் மட்டுமே பதவி.." மன உளைச்சலில் தவெக நிர்வாகி தற்கொலை.. மனைவி கண்ணீர் September 24, 2026

See all 772 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *