சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் அஜித் (28). இவர் நேற்று இரவு வீட்டு வாசலில் தாயுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த இருவர் அரிவாளால் அஜித்தைச் சாரமாரியாக வெட்டிக் கொலை செய்தனர்.
இதைத் தடுக்க முயன்ற அஜித்தின் தாயாருக்கும் வெட்டுக்காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறை அஜித்தின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத் தொடர்ந்து, இந்தக் கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறை முதன்மைக் குற்றம்சாட்டப்பட்டவராக ஹரிஷ் என்பவரைக் கைது செய்திருக்கிறது. மற்றொரு கூட்டாளியான ராஜேஷ் தலைமறைவாக இருக்கிறார். அவரைத் தேடி வருகிறது.

இந்தக் கொலை தொடர்பாக முதற்கட்ட விசாரணையில், முன் விரோதம் காரணமாகக் கொலை நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. மற்றொருபுறம் போதைப் பொருள் விற்பனை தொடர்பாக ஏற்பட்ட மோதலால் கொலை நடந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஏற்கெனவே மதுராந்தகம் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “தமிழ்நாட்டில் இந்த 5 மாதங்களில் 500 கொலைகள் நடந்ததுதான் தவெகவின் சாதனை. அண்ணன், தம்பி, தாய்மாமன், பெண்களுக்கு பாதுகாவலன் எனப் பேசும் முதல்வர், பெண்களுக்கு என்ன பாதுகாப்பு கொடுத்தார்” எனச் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது எனக் குற்றம்சாட்டியிருந்தார். எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து இதேக் கேள்வியை எழுப்பி வருகின்றன.
இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் அஜித் என்ற இளைஞர், வீட்டு வாசலில் பெற்றோரின் கண்முன்பே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டில் உணவுப் பொருட்களின் விலையும், கொலையும்தான் அன்றாடம் போட்டி போட்டுக்கொண்டு உயர்ந்து கொண்டிருக்கின்றன.
முதலமைச்சர் விஜய் திமுகவை விமர்சிக்க Script-ஐ மனப்பாடம் செய்வதில் காட்டும் அக்கறையைத் தன்வசமுள்ள காவல்துறையைச் செயல்படுத்துவதில் கொஞ்சம் காட்டியிருந்தால் கூட இதுபோன்ற சம்பவங்களைத் தடுத்திருக்கலாம். இனியாவது செய்வாரா?” எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன?
September 30, 2026
கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி
September 30, 2026
துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள்
September 30, 2026
'ரத்தம் தோய்ந்த சட்டை' – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன?
September 30, 2026
பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை – நால்வர் சிக்கிய பின்னணி
September 30, 2026
ஸ்பா.. வருமான வரி.. ரீல்ஸ் அழகி மதுமிதா.. 98 சவரன் கிடைச்சாச்சு, ஆனால் 118 இடிக்குதே? 3 டவுட்
September 30, 2026
'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன?
September 30, 2026
Iran's nuclear program remains shrouded in mystery as the regime debates ditching non-proliferation
September 30, 2026
Regulating AI 'not the right place to start' says Bailey
September 30, 2026
The lawyer of Junaid Hafeez, a Fullbright scholar imprisoned for 13 years in a Pakistani jail, tells DW he is hopeful for his release
September 30, 2026
Manchester City Premier League charges: What do they mean?
September 30, 2026
கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி
September 30, 2026