கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், “தி.மு.க கொள்கைக் கட்சி என்று கூறிக்கொண்டு, தற்போது வரை ஒரு கொள்கை ரீதியான பிரசாரத்தை முன்னெடுத்ததில்லை. தேர்தல் வரும்போது அவதூறுகளையும், பெண்களை மையப்படுத்திய ஆபாச பிரசாரங்களையும் உருவாக்குகிறார்கள். 

எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தவரை எந்தத் தேர்தலிலும் தி.மு.க வெற்றி பெற்றது கிடையாது. தற்போது உதயநிதி ஸ்டாலின் பெண்களை நோக்கிய, தனிப்பட்ட வாழ்க்கையை நோக்கிய பிரசாரங்களை மட்டுமே முன்னெடுத்து வருகிறார். இதுபோன்ற ஆபாசமான பேச்சுக்களை மக்களும், குறிப்பாக கொங்கு மண்டல மகளிரும் தூக்கி எறிவார்கள்.

எடப்பாடி பழனிசாமியும் முதலமைச்சர் விஜய் குறித்து தனிப்பட்ட வாழ்க்கையை மையப்படுத்தி தி.மு.க-வுடன் இணைந்து பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இன்று உள்ள அ.தி.மு.க எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க கிடையாது. ஜெயலலிதாவிடம் விசுவாசமாக இருந்த அமைச்சர்கள் அனைவரும் அ.தி.மு.க-விலிருந்து வெளியேறி விட்டனர்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

பா.ம.க இல்லையென்றால் தற்போது வெற்றி பெற்ற தொகுதிகளில்கூட அ.தி.மு.க-வால் வெற்றி பெற்றிருக்க முடியாது. பா.ம.க இல்லையென்றால் எடப்பாடி தொகுதியில்கூட ஜெயித்திருக்க முடியாது. எங்களுடைய வேட்பாளரை யார் விலை கொடுத்து வாங்கியது? எந்தக் காசு கொடுத்து மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்த்தார்கள்?

தற்போது அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியும், அவரது மகன் மிதுனும் மட்டும்தான் இருக்கிறார்கள். மிதுன் அ.தி.மு.க-வை வழிநடத்துவதால்தான், அங்கு இருக்கக்கூடிய முக்கியமானவர்கள் அனைவரும் வெளியேறுகின்றனர். நடந்து முடிந்த தேர்தலில் த.வெ.க கொங்கு மண்டலத்தில் 25 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற்றது.

அ.தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் ஆதரவைப் பெற்று வெறும் 15 தொகுதிகளை மட்டுமே கொங்கு மண்டலத்தில் பெற்றது. மக்கள் அ.தி.மு.க-வைப் புறக்கணித்து விட்டார்கள். த.வெ.க இல்லை என்றால் தி.மு.க கொங்கு மண்டலத்தில் வெற்றி பெற்றிருக்கும். அப்படி வெற்றி பெற்றிருந்தால் இங்கு இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் தொழில் செய்திருக்க முடியுமா?.

அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் சேர்ந்துதான் களத்தில் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். எங்களுடைய தலைவர் பிரசாரம் மேற்கொள்ளும்போது மிதுன் அ.தி.மு.க என்பது உடைக்கப்படும். எம்.ஜி.ஆருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தி.மு.க பிரசாரம் செய்தது, அதே பிரசாரத்தைத்தான் எடப்பாடி பழனிசாமி எங்களுடைய தலைவரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மேற்கொண்டு வருகிறார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

இதுபோன்ற இழிவான பிரசாரத்தை தமிழக மக்களும், கொங்கு மண்டல மக்களும் தூக்கி எறிவார்கள். தி.மு.க-வின் பிரசாரத்தைத்தான் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு வருகிறார்.

தி.மு.க-வின் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க-வின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மதுராந்தகம், தாராபுரத்தில் தி.மு.க, அ.தி.மு.க-விற்கு வாக்கு கேட்கிறது. அ.தி.மு.க, தி.மு.க-விற்கு வாக்கு கேட்கிறது.

ஜெயலலிதாவின் சொத்தைக் கைப்பற்றுவதற்காக எடப்பாடி பழனிசாமி, அவரது மகன் மிதுனைக் கொண்டு வருவதற்காக, திமுக உடன் சேர்ந்துள்ளார். எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் ஏன் ஒதுக்கப்பட்டனர்? அதிமுகவை மறைமுகமாக வழிநடத்துபவர் யார்?

மிதுன்தான் வேட்பாளர்களை நேர்காணல் செய்தார், அவர்தான் பிரசாரத்தை உருவாக்கினார். எடப்பாடி பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை செங்கோட்டையனின் இல்லத்தில் இருந்துதான் தொடங்கியது. ஆனால் அவரையே கட்சியிலிருந்து நீக்கி விட்டார்.

ஆனால், செங்கோட்டையனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதை தங்களுடைய முதலமைச்சர் புரிந்துகொண்டு, தொகுதிகளில் காசு கொடுக்காமல் வெற்றி பெற்றுள்ளோம். விஜயகாந்த் என்ன பேசியிருக்கிறார் என்பதை பிரேமலதா விஜயகாந்த்துக்கு நாங்கள் மீண்டும் எடுத்துக்காட்டுகிறோம். எந்தக் கட்சி விஜயகாந்தைத் தூக்கி எறிந்ததோ, அந்தக் கட்சியுடனேயே பிரேமலதா விஜயகாந்த் இணைந்துள்ளார். இதனை விஜயகாந்த்தின் ஆன்மா மன்னிக்காது” என்றார்.

More in TamilNews
'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன? 'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன? September 30, 2026 கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி September 30, 2026 துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் September 30, 2026 'ரத்தம் தோய்ந்த சட்டை' – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன? 'ரத்தம் தோய்ந்த சட்டை' – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன? September 30, 2026 பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை – நால்வர் சிக்கிய பின்னணி பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை – நால்வர் சிக்கிய பின்னணி September 30, 2026 ஸ்பா.. வருமான வரி.. ரீல்ஸ் அழகி மதுமிதா.. 98 சவரன் கிடைச்சாச்சு, ஆனால் 118 இடிக்குதே? 3 டவுட் ஸ்பா.. வருமான வரி.. ரீல்ஸ் அழகி மதுமிதா.. 98 சவரன் கிடைச்சாச்சு, ஆனால் 118 இடிக்குதே? 3 டவுட் September 30, 2026

See all 767 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *