வீடுகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் பணியில் தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என மின்வாரியம் பிறப்பித்திருக்கும் உத்தரவு, மின்வாரிய ஊழியர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிடிவி தினகரன் உள்ளிட்ட தலைவர்கள் ஏற்கெனவே கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகப் பணியிடங்களை நிரப்பாமல், பணியாளர் பற்றாக்குறையைக் காரணம் காட்டி மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியாரிடம் ஒப்படைக்க தவெக அரசு முடிவெடுத்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. மின்சாரம் என்பது வெறும் வணிகப்பொருள் மட்டுமல்ல; மக்களின் அன்றாட வாழ்வோடு நேரடியாகப் பிணைந்துள்ள அடிப்படைத் தேவையாகும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அதன் பயன்பாட்டைக் கணக்கிடும் மிக முக்கிய பணியைத் தனியாரிடம் தாரைவார்ப்பது எவ்வகையில் நியாயமாகும்? மின்வாரியத்தில் போதிய பணியாளர்கள் இல்லை என்றால், அந்த காலிப்பணியிடங்களை இத்தனை மாதங்களாக ஏன் அரசு நிரப்பவில்லை? மின்துறையில் போதிய பணியாளர்களை நியமிக்காதது யாருடைய தவறு? அரசின் நிர்வாகத் தவறுக்கு, அரசுப் பணியைத் தனியாரிடம் ஒப்படைப்பது எப்படி தீர்வாகும்? அரசு வேலைக்காக இலட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் காத்திருக்கையில், அவர்களுக்கு நிரந்தரப் பணியை வழங்காமல், இருக்கின்ற பணிகளையே ஒப்பந்த முறையில் தனியாரிடம் ஒப்படைப்பதுதான் தவெக அரசின் வேலைவாய்ப்புக் கொள்கையா? இதுதான் மக்களுக்கான மாற்றமா?

தவெக ஆட்சியில் அனுபவமிக்க மின்வாரிய பணியாளர்கள் எடுத்த கணக்கீடுகளிலேயே இலட்சக்கணக்கான வீடுகளில் குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், அனுபவமற்ற தனியார் ஒப்பந்தப் பணியாளர்கள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கும்போது, தவறான கணக்கீடு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பேற்பது? மின் கணக்கீடு தாமதமாகி அதனால் மக்களுக்கு மேலும் அதிக கட்டணம் செலுத்த நேரிடாதா? அதிகப்படியான மின் கட்டணம் விதிக்கப்பட்டால் மக்கள் யாரிடம் முறையிட வேண்டும்? தனியார் நிறுவனத்திடமா? தவெக அரசிடமா? ஒப்பந்த நிறுவனம் தவறு செய்தால் அதன் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும்? தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் பொதுமக்களின் நுகர்வு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் எப்படி பாதுகாக்கப்படும்? இதுதான் தவெக அரசின் தொலைநோக்கு சிந்தனையா? இதற்கு பெயர்தான் தூய ஆட்சியா? வெட்கக்கேடு!

சீமான்
சீமான்

பணியாளர்கள் பற்றாக்குறை என்றால், அதற்கான தீர்வு பணியாளர்களை நியமிப்பதுதானே தவிர தனியார்மயம் அல்ல என்பதை அரசு எப்போது உணரப்போகிறது? இன்றைக்கு மின் கணக்கீட்டுப் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்படுகிறது. நாளை மின்வாரியமே தனியாரிடம் ஒப்படைக்கப்படாது என்பது என்ன நிச்சயம்? வானூர்தி நிலையம் முதல் மின்வாரியப் பணிகள் வரை எல்லாவற்றையும் தனியாரிடம் கொடுத்துவிட்டு, அரசு எதை நிர்வாகம் செய்யப்போகிறது? வாடகைக்கு விடும் வேலையையா? இதற்கு எதற்கு ஆட்சி? அரசு? அமைச்சரவை? முதலமைச்சர்? அவற்றையும் தனியாரிடம் கொடுத்தால் வீண்செலவு குறையுமே! பல்லாயிரம் கோடி மக்களின் வரிப்பணம் மிச்சமாகுமே! தமிழ்நாட்டில் உள்ள 3.5 கோடி குறைந்த மின்னழுத்த இணைப்புகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகளாக உள்ளன.

கோடிக்கணக்கான மக்களுடன் நேரடித் தொடர்புடைய பணியை மேற்கொள்ள போதிய நிரந்தரப் பணியாளர்களை நியமிப்பதற்கு பதிலாக, தற்காலிக ஒப்பந்த முறையைத் தேர்வு செய்வது மிகமோசமான நிர்வாக நடவடிக்கையாகும். எனவே, மின் கணக்கீட்டுப் பணிகளைத் தனியார் ஒப்பந்தப் பணியாளர்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு உடனடியாகக் கைவிட வேண்டும். மின் கணக்கீட்டாளர் உள்ளிட்ட மின்வாரியத்தின் காலிப்பணியிடங்கள் அனைத்தையும் வெளிப்படையான தேர்வு முறையின் மூலம் தகுதியுடைய தமிழ்நாட்டு இளைஞர்களைக் கொண்டு நிரந்தரமாக நிரப்ப வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன? 'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன? September 30, 2026 கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி September 30, 2026 துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் September 30, 2026 'ரத்தம் தோய்ந்த சட்டை' – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன? 'ரத்தம் தோய்ந்த சட்டை' – இஸ்ரேல் சென்ற விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல், சௌதியில் திடீர் தரையிறக்கம் – நேரில் கண்ட பயணிகள் கூறுவது என்ன? September 30, 2026 பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை – நால்வர் சிக்கிய பின்னணி பெண் யூட்யூபரின் 'வீடியோக்களால்' ஒரு கோடி மதிப்புள்ள நகை கொள்ளை – நால்வர் சிக்கிய பின்னணி September 30, 2026 ஸ்பா.. வருமான வரி.. ரீல்ஸ் அழகி மதுமிதா.. 98 சவரன் கிடைச்சாச்சு, ஆனால் 118 இடிக்குதே? 3 டவுட் ஸ்பா.. வருமான வரி.. ரீல்ஸ் அழகி மதுமிதா.. 98 சவரன் கிடைச்சாச்சு, ஆனால் 118 இடிக்குதே? 3 டவுட் September 30, 2026

See all 765 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *