டெல்லியில் இன்று (30-ம் தேதி) நடைபெற்ற ‘இந்தியா கூட்டணி’ தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி, சிபிஐ, சிபிஐ(எம்), என்சிபி (சரத் பவார்), சிவசேனா (யுபிடி) உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் தலைவர்கள், பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட பல முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.

INDIA alliance
INDIA alliance

அப்போது பேசிய ராகுல் காந்தி, “இந்தியா கூட்டணியின் இக்கூட்டத்தில் மிகச்சிறப்பான விவாதங்கள் நடைபெற்றன. இதில் ‘வாக்குத் திருட்டு’ என்பதே முதன்மைப் பிரச்னையாக இருந்தது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆகியோரால் இந்தியாவின் ஜனநாயக அமைப்புத் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஒரே மாதிரியான கருத்துடையவையாக இருக்கின்றன.

நாங்கள் இதை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை. அவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்க வழிசெய்வோம். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் இந்திய அரசியலமைப்பின் கூட்டுப் பாதுகாவலர்கள் என்பதை நான் அவர்களிடம் நினைவூட்டினேன். நாம் அனைவரும் இணைந்து பணியாற்றுவது நமக்குக் கிடைத்த பெருமையாகும். வரும் சில மாதங்களில் நாட்டின் சூழலில் கடுமையான மாற்றங்களை நாம் கொண்டு வருவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்.

More in TamilNews
தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன் தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன் September 30, 2026 'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன? 'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன? September 30, 2026 INDIA BLOC: “மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும்!" – மல்லிகார்ஜுன கார்கே September 30, 2026 கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி September 30, 2026 விஜய்: பேச்சின் இடையே கண்கலங்கிய சத்தியபாமா; ஆறுதல் சொல்லி தேற்றிய முதல்வர் |தேர்தல் பிரசார க்ளிக்ஸ் விஜய்: பேச்சின் இடையே கண்கலங்கிய சத்தியபாமா; ஆறுதல் சொல்லி தேற்றிய முதல்வர் |தேர்தல் பிரசார க்ளிக்ஸ் September 30, 2026 துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் துபை – இஸ்ரேல் விமானத்தில் நடுவானில் விமானிகள் மோதல் – இதுவரை கிடைத்த தகவல்கள் மற்றும் தெளிவாகாத விஷயங்கள் September 30, 2026

See all 787 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *