சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் நடைதிறப்பு மற்றும் மண்டல-மகரவிளக்கு யாத்திரை காலங்களில் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட பகுதிகளில் தேவஸ்வம் போர்டுக்குச் சொந்தமான உணவகங்கள், சிற்றுண்டி நிலையங்கள், புத்தக நிலையங்கள் உள்ளிட்டவை ஏலம் விடப்படுவது வழக்கம்.
இத்தனை ஆண்டுகளாக சபரிமலை கடைகளுக்கான ஏலம் சுமங்கலி மண்டபத்தில் நேரடியாகவே நடைபெற்று வந்தது. ஆனால், இதில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த ஒப்பந்ததாரர்கள் சிண்டிகேட் அமைத்து, தங்களுக்குள் முன்கூட்டியே பேசி முடிவு செய்து ஏலத்தொகையை மிகக் குறைவாகவே கேட்பது வழக்கமாக இருந்தது.
போர்டு நிர்வாகம் தொகையைக் குறைக்க மறுத்தால், அவர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏலத்தில் பங்கேற்காமல் விலகி நிற்பார்கள். ஏலம் எடுக்க யாரும் முன்வராத நிலையை உருவாக்கி, போர்டை நிர்பந்தித்து முதலில் 10 சதவீதமும், பின்னர் 25 முதல் 50 சதவீதம் வரையிலும் தொகையைக் குறைக்க வைப்பார்கள்.
இந்தக் கூட்டு மோசடிக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவருவதற்காக முதன்முறையாக இந்த ஆண்டு முதல் இ-டெண்டர் மற்றும் இ-ஏல முறையை தேவஸ்வம் போர்டு அமல்படுத்தியது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 23 வரை பெறப்பட்டன. இதற்கிடையே டெண்டர் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு முடிந்த பிறகு, இ-டெண்டரில் கலந்துகொண்ட புதிய ஒப்பந்ததாரர்களின் விவரங்கள் மற்றும் கோப்புகள் மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுக்கப்பட்டு பழைய ஒப்பந்ததாரர்களுக்குக் கசியவிடப்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, புதிய ஒப்பந்ததாரர் ஒருவருக்கு, டெண்டரில் பங்கேற்கக் கூடாது எனவும் சபரிமலைக் கடைகளைப் பல ஆண்டுகளாக நாங்கள்தான் எடுத்து நடத்தி வருகிறோம் என்றும் வெளிப்படையாகவே மிரட்டல் அழைப்பு சென்றுள்ளது. பாதிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் உடனடியாக தேவஸ்வம் போர்டு தலைவரிடம் முறையிட்டதுடன், தேவஸ்வம் விஜிலென்ஸ் பிரிவிடமும் புகார் அளித்தார்.
துறை ரீதியான முதற்கட்ட விசாரணையில் ஊழியர்களின் சதித்திட்டம் அம்பலமானது. இந்த ஏல நடைமுறைகளை தேவஸ்வம் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் சபரிமலைப் பிரிவு கையாண்டு வருகிறது.
இந்நிலையில், ஏலம் சம்பந்தமான தகவல்களை வெளி நபர்களுக்குக் கூறியதாகச் சந்தேகிக்கப்படும் தேவஸ்வம் கமிஷனர் அலுவலகத்தின் சபரிமலைப் பிரிவைச் சேர்ந்த 3 அதிகாரிகள் மற்றும் சபரிமலை செயல் அலுவலர் அலுவலக அதிகாரிகள் தற்போது தேவஸ்வம் விஜிலென்ஸ் பிரிவின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர்.
இவர்களின் தொலைபேசி அழைப்பு விவரங்களை ஆய்வு செய்ய விஜிலென்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதே சமயம், கடைகள் ஏலம் போகாமல் முடங்கினாலும் கூட, நிர்ணயிக்கப்பட்ட டெண்டர் தொகையைக் குறைக்கப் போவதில்லை என்பதில் போர்டு நிர்வாகம் உறுதியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேவஸ்வம் போர்டின் விதிமுறைகளின்படி, கடைகளுக்கான குறைந்தபட்ச அடிப்படைத் தொகை முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பெரிய உணவகங்களுக்குக் குறைந்தபட்சத் தொகையாக இரண்டு கோடியே 41 லட்சத்து 77 ஆயிரத்து 218 ரூபாயும், சிற்றுண்டிச் சாலைகளுக்கு ஒரு கோடியே 15 லட்சத்து 53 ஆயிரத்து 213 ரூபாயும், இதர வணிக ஸ்டால்களுக்கு 4 லட்சம் ரூபாய் முதல் 32.11 லட்சம் ரூபாய் வரையும், புத்தக விற்பனை நிலையங்களுக்கு 8.95 லட்சம் ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டன.
நிர்ணயிக்கப்பட்ட அடிப்படைத் தொகையை விடக் குறைவாகப் பதிவு செய்யும் ஒப்பந்ததாரர்கள் உடனடியாகத் தகுதிநீக்கம் செய்யப்படுவர் என்றும், அதிகபட்சத் தொகை கோருபவருக்கே ஒப்பந்தம் வழங்கப்படும் என்றும் தெளிவான விதிமுறைகள் வகுக்கப்பட்டிருந்தன.
இந்த நெறிமுறைகளையே அதிகாரிகள் துணையுடன் ஒப்பந்ததாரர்கள் முறியடிக்க முயன்றுள்ளனர். முறைகேடு உறுதியானதைத் தொடர்ந்து, இ-ஏலத்தை அதிரடியாக ரத்து செய்துள்ள தேவஸ்வம் போர்டு நிர்வாகம், உடனடியாகப் புதிய ஏல நடைமுறைகளைத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து தேவஸ்வம் துறை அமைச்சர் கே. முரளீதரன் கூறுகையில், “இ-டெண்டர் விவகாரத்தில் தேவஸ்வம் போர்டு எடுத்துள்ள முடிவு மிகச் சரியானதும், நல்ல நோக்கத்துடன் கூடியதுமாகும். போர்டின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு அரசின் முழு ஆதரவும் உண்டு. நமது அமைப்பிற்குள் இருக்கும் ஒருசில அதிகாரிகள்தான் இதுபோன்ற பிரச்னைகளுக்குக் காரணமாக இருக்கின்றனர்.
இ-டெண்டர் நடைமுறைகளில் அரங்கேறியுள்ள முறைகேடுகள் தொடர்பாகத் தீவிர விசாரணை நடத்த விஜிலென்ஸ் துறைக்குப் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்குள் முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அக்டோபர் 15-ம் தேதிக்குள் மீதமுள்ள அனைத்து ஏல நடைமுறைகளும் முழுமையாக முடிக்கப்படும். டெண்டர் நடைமுறைகளைச் சீர்குலைக்க முயலும் சக்திகள் நமது துறை அமைப்பிற்குள்ளேயே இருக்கின்றன. விரிவான விசாரணை அறிக்கை கிடைத்தவுடன், தவறிழைத்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் மீது சமரசமற்ற கடுமையான நடவடிக்கைகள் பாயும்” என்றார்.
தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன்
September 30, 2026
INDIA BLOC: “நாங்கள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கப் போவதில்லை" – ராகுல் காந்தி
September 30, 2026
'திமுக-வை எதிர்ப்பது நான் மட்டும்தான்' – தாராபுரத்தில் முதலமைச்சர் பேசியதற்கு எதிர்க்கட்சிகளின் பதில் என்ன?
September 30, 2026
INDIA BLOC: “மீண்டும் வாக்குச்சீட்டு தேர்தல் முறையைக் கொண்டுவர வேண்டும்!" – மல்லிகார்ஜுன கார்கே
September 30, 2026
கோவை: குட்டையில் சுத்திகரித்த கழிவு நீரை நிரப்ப விடாமல் கிராம மக்கள் எதிர்ப்பது ஏன்? முழு பின்னணி
September 30, 2026
விஜய்: பேச்சின் இடையே கண்கலங்கிய சத்தியபாமா; ஆறுதல் சொல்லி தேற்றிய முதல்வர் |தேர்தல் பிரசார க்ளிக்ஸ்
September 30, 2026
ஆசிய விளையாட்டுப் போட்டி 13வது நாள்.. கிரிக்கெட், மல்யுத்தத்தில் பதக்க வேட்டை.. அக்டோபர் 1 அட்டவணை
September 30, 2026
The Kyiv Independent Takes Its Journalism Live With An Ambitious London Event
September 30, 2026
The U.S. Navy Continues To Rotate Aircraft Carriers To The Middle East
September 30, 2026
ஒரே நாளில் 4 தங்கம்.. அடித்து தூக்கிய இந்தியா.. ஆசிய விளையாட்டு பதக்கப் பட்டியலில் முன்னேற்றம்
September 30, 2026