முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் நாகர்கோவிலில் உள்ள பா.ஜ.க அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது பொன்.ராதாகிருஷ்ணன் கூறுகையில், “நாடு முழுவதும் எஸ்.ஐ.ஆர். தொடர்பாக‌ பூதாகரமான பிரச்னைகளை உருவாக்க காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் பொய்யான பிரசாரங்களைக் கூறி வருகின்றனர். நம் நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை 13 எஸ்.ஐ.ஆர்-கள் நடந்துள்ளன.

அப்போது எந்த விதமான பிரச்னைகளும் ஏற்பட்டது கிடையாது. ஆனால் தற்போது எஸ்.ஐ.ஆர். முறையைக் கொச்சைப்படுத்தும் பல முயற்சிகளை இவர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். தேர்தல் கமிஷனுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்து கொண்டிருக்கிறது என்ற குற்றச்சாட்டைக் கூறுகிறார்கள். 

தேர்தல் ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்று நினைப்பது போல தேர்தல் கமிஷனுக்குள் இருக்கக்கூடிய விவாதங்களும் நடந்து கொண்டுதான் இருக்கும். மேற்கு வங்காளத்தில் 20 சட்டமன்றத் தொகுதிகளில் ஏராளமான வாக்காளர்களை நீக்கிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு நியாயமற்றது.

நீக்க வேண்டியவர்களை நீக்கித்தான் ஆக வேண்டும். வாக்குரிமை இல்லையென்றால் குடியுரிமை இல்லை என்று தவறாகக் கூறுகிறார்கள். வாக்குரிமை என்பது வேறு. குடியுரிமை என்பது வேறு. இதற்கு அடுத்த கட்டமாக நேபாளம், வங்கதேசம் மற்றும் இலங்கையில் செய்தது போல ஏதாவது செய்ய முடியுமா என்ற முயற்சியில் இறங்கலாம். 

என்னைப் பொறுத்தவரை கரப்பான் பூச்சி கட்சி கட்டாயமாக காங்கிரஸைக் கொல்லாமல் விடாது. அவர்களுடைய முதல் எதிரி காங்கிரஸாகத்தான் இருக்க முடியும். ஏன் எனில் அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டு என்றால்  ஜனநாயகத்தினுடைய விரோதியாக இருக்கும் ராகுல் காந்தியை ஒரு காலமும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கரப்பான் பூச்சி கட்சியினர் தலைமைத் தேர்தல் ஆணையரை மாற்ற வலியுறுத்தி இருக்கிறார்கள். அவருடைய பணிக்காலம்‌ முடியும்போது கட்டாயமாக அவர் மாறுவார். அதே சமயம் மத்திய கல்வி அமைச்சரை மாற்றி இருப்பதாகக் கூறுகிறீர்கள். தேர்தல் சம்பந்தமான விஷயங்கள் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் உள்ளது. அதில் இருக்கும் தவறுகளைச் சரி செய்ய அவர்களால் முடியும்.

தேவையெனில் உங்களுடைய ஆலோசனைகளைச் சொல்லுங்கள். ஆலோசனையைக் கேட்கவில்லை என்றால் எதில் நியாயம் இருக்கிறதோ அந்த நியாயத்திற்குச் செவிசாய்க்கப்படும். 

நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்
நாகர்கோவிலில் செய்தியாளர்களை சந்தித்தார் பொன்.ராதாகிருஷ்ணன்

முந்தைய தேர்தல் அதிகாரி ராஜினாமா செய்ததற்கு அவருடைய சூழ்நிலைகள், உடல் ஆரோக்கியம் எனப் பல விஷயங்கள் இருக்கலாம். ராஜினாமா செய்ய அவர் நிர்பந்திக்கப்படவில்லை. ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியே தள்ளுவார்கள் என்று நான்  நினைக்கிறேன்.

இதனால் 4-வது அணி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஊழல் இல்லாத ஆட்சி என்று முதலமைச்சர் விஜய் கூறியுள்ளார். அரசு வக்கீல்கள் நியமனத்திற்கு லஞ்சம் கேட்டதாகப் புகார் வந்த நிலையில் அதை விசாரிக்கும்படி கோர்ட் கூறியுள்ளது. ஊழல் செய்யாமல் இருக்க வேண்டும் என்று விஜய் நினைக்கலாம். அதை அவருடன் கைகோர்த்து நிற்பவர்கள் நினைக்கிறார்களா என்பது கேள்விக்குறி.

அவர்களுக்கு நிறைய கை இருப்பதால் நிறைய பை தைத்து போட்டுள்ளார்கள்.  பல விஷயங்களில் தவறு நடக்கிறது. விஜய் விழித்துக் கொண்டார் என்றால் பிழைத்துக் கொள்வார். காவல்துறை முறையாக இல்லை. தினமும் 10 கொலையாவது நடக்கிறது. அவர்கள் தவறை நோக்கித் தவழ்ந்து செல்லவில்லை. 100 மீட்டர் பந்தயத்தில் ஓடுவது போல ஓடுகிறார்கள்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குப் பதிவு செய்தால் மட்டும் போதாது. கைதும் செய்ய வேண்டும். ஜெம் வீரமணி விவகாரம் ஒரு முதலமைச்சருடைய காலத்தில் நடந்த விஷயம் அல்ல. எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே ஆரம்பித்துள்ளார்.

இப்போது கோர்ட்டு கூறியதால் நடவடிக்கை எடுத்துள்ளனர். நிதி பற்றாக்குறை இருக்கின்ற இந்த நேரத்தில்தான் தலைமைச் செயலகக் கட்டிடம் தேவையா? என்று கேட்கிறீர்கள். த.வெ.க. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இன்றைய தேவை.

தமிழ்நாட்டுக்கு ஒரு நல்ல விமான நிலையம் வேண்டும். அது, பரந்தூர் விமான நிலையம் என்று இல்லை. எங்கு வேண்டுமானாலும் கொண்டு வரலாம். தி.மு.க. ஆட்சிக்கும், த.வெ.க. ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்கிறீர்கள். அந்த அரசில் ஊழல்கள் இருந்திருக்கலாம். தவறுகள் இருந்திருக்கலாம். அந்த அரசாங்கத்தை ஒரு காலமும் நாம் போற்ற முடியாது. ஆனால், காமெடி சீன் நடத்திட்டு ஒரு அரசாங்கம் நடத்தக்கூடாது.

கழகங்கள் இல்லாத தமிழகம் என்பது என்னுடைய லட்சியம். தற்போது த.வெ.க.வுக்குச் செல்ல வாய்ப்பு உள்ளாதா என்று கேட்கிறீர்கள். அதுவும் ஒரு கழகம்தான். தமிழக முதலமைச்சர் அடுத்த பிரதமர் வேட்பாளர் என்று சொல்கிறார்கள். நான் ஒரு காலத்தில் ஒரு சினிமா பார்த்தேன். அந்தக் காமெடி சீனில் அமெரிக்க ஜனாதிபதி வாழ்க என்று கூறுவார்கள். 4 மாநில முதல் அமைச்சர்கள் தோல்விக்கு எஸ்.ஐ.ஆர். காரணம் இல்லை. அவர்கள் செய்த வினைதான் காரணம்” என்றார்.

More in TamilNews
நீங்க வந்து நடிங்க.. மக்கள் தேடட்டும்னு தம்பி சிவகார்த்திகேயன் சொன்னாப்ல.. சீமான் கூறிய விஷயம்! நீங்க வந்து நடிங்க.. மக்கள் தேடட்டும்னு தம்பி சிவகார்த்திகேயன் சொன்னாப்ல.. சீமான் கூறிய விஷயம்! September 30, 2026 எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க.. விஜய்யிடம் ஆதரவு கேட்க இருந்தோம்.. டிடிவி தினகரன் சொன்ன பாய்ண்ட்! எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க.. விஜய்யிடம் ஆதரவு கேட்க இருந்தோம்.. டிடிவி தினகரன் சொன்ன பாய்ண்ட்! September 30, 2026 180 பயணிகளை கொல்ல நடந்த முயற்சி இது.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொன்ன ஷாக் தகவல்! 180 பயணிகளை கொல்ல நடந்த முயற்சி இது.. இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சொன்ன ஷாக் தகவல்! September 30, 2026 பாமக உள்ளே வந்தால்.. தவெக கூட்டணியில் விசிக இருக்காது.. ஒன் இந்தியா தமிழுக்கு எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி! பாமக உள்ளே வந்தால்.. தவெக கூட்டணியில் விசிக இருக்காது.. ஒன் இந்தியா தமிழுக்கு எஸ்.எஸ்.பாலாஜி பேட்டி! September 30, 2026 நவீன ’இல்லுமினாட்டிகளை’ நம்பி ஏமாந்து போன கவினின் அப்பன்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டம்! நவீன ’இல்லுமினாட்டிகளை’ நம்பி ஏமாந்து போன கவினின் அப்பன்! புதிய தமிழகம் கிருஷ்ணசாமி காட்டம்! September 30, 2026 தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன் தேர்தல் ஆணையம்: “இதுவே தவறு நடந்திருக்கிறது என்பதற்கான சான்று" – திருமாவளவன் September 30, 2026

See all 832 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *