புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் `லிஃப்ட்’ தருவதாகக் கூறி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, த.வெ.கவின் ஆதரவு பெற்ற உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேரு தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று சட்டப்பேரவையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்.
ஒருகட்டத்தில் சட்டப்பேரவைக்குள் நுழைய முயற்சி செய்த அவர்களை, சட்டப்பேரவைக் காவலர்கள் தடுத்தனர். ஆனால் அதை மீறி சட்டப்பேரவைக்குள் நுழைந்த எம்.எல்.ஏ நேருவும், அவரது ஆதரவாளர்களும், சட்டப்பேரவைப் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவின் அறைக்குச் செல்ல முயற்சித்தனர். அப்போது அங்கிருந்த பாதுகாவலர்கள் தடுத்ததையும் தாண்டி உள்ளே சென்ற எம்.எல்.ஏ நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள், அமைச்சரிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
அப்போது அங்கிருந்த கதவுகள் மீதும் தாக்குதல் நடத்தியதால் அசாதாரண சூழல் ஏற்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்ட அவர்கள், அமைச்சரின் அறைக்கு வெளியில் நின்று, `அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ஒழிக’ என்று கோஷம் எழுப்பினர். அதன் பிறகு மீண்டும் சட்டப்பேரவை படிக்கட்டுகளுக்கு வந்து தர்ணா செய்தனர்.
தகவலறிந்து அங்கு வந்த தற்காலிக சபாநாயகர், “இந்த சட்டப்பேரவைக்கென மாண்புகள் இருக்கின்றன. அதனால் எம்.எல்.ஏவான நீங்களே இப்படி செய்யக் கூடாது” என்று எம்.எல்.ஏ நேருவிடம் கூறினார். அதற்கு, “இந்த சட்டமன்றத்துக்கு மரியாதையும் இல்லை, மாண்பும் இல்லை.
இது ஒரு குட்டிச்சுவர் சட்டமன்றம்” என்று எம்.எல்.ஏ நேரு ஆவேசமாகக் கூறியதால், அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை கைவிட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார் தற்காலிக சபாநாயகர் அன்பழகன். அப்போது, `சபாநாயகர் ஒழிக… சபாநாயகர் ஒழிக…’ என்று எம்.எல்.ஏ நேருவின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ நேரு, “தேர்தல் நன்னடத்தை விதிகளைக் காரணம் காட்டி, குற்றச் சம்பவங்களை மறைக்க முயற்சிக்கிறார்கள்.

கீரை விற்கும் பெண் ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். அந்தக் குற்றவாளி யார்? ஒருவரா அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டவரா என்பது குறித்த எந்தத் தகவலையும் காவல்துறை வெளியிடவில்லை” என்றார்.
அவரது குற்றச்சாட்டு குறித்து பெரியகடை காவல் நிலைய விசாரணை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சம்பவம் நடைபெற்ற சில மணி நேரங்களிலேயே குற்றவாளியைக் கைதுசெய்து, வழக்குப் பதிவு செய்துவிட்டோம். பாதிக்கப்பட்டவர் முன்பு குற்றவாளியின் அடையாள அணிவகுப்பு நடத்தாமல் குற்றவாளியின் புகைப்படம் உள்ளிட்ட விவரங்களை எப்படி பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட முடியும்?” என்றார்.
அதையடுத்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் குவிந்த மீனவ கிராமத்தினர், சட்டப்பேரவை படிக்கட்டுகளில் அமர்ந்து எம்.எல்.ஏ நேருவுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது, “எம்.எல்.ஏ நேரு அவர்கள் சுமார் நூறு குண்டர்களை அழைத்து வந்து போராட்டம் நடத்துவதாகக் கூறி, சட்டப்பேரவைக்கு வந்த பொதுப்பணித்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை முற்றுகையிட்டு தவறான வார்த்தைகளைக் கூறினர்.
அத்துடன் அவரை அச்சுறுத்தும் வகையில், `நான்கு நாள்களில் நீங்கள் இருக்க மாட்டீர்கள்’ என்ற வார்த்தையைக் கூறியிருக்கிறார் எம்.எல்.ஏ நேரு. அவர் குறிப்பிட்ட சம்பவத்துக்கும் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது.

அந்த சம்பவம் குறித்து எம்.எல்.ஏ நேரு பேசியிருக்க வேண்டியது காவல்துறையிடமும், அதன் அமைச்சரான உள்துறை அமைச்சரிடமும்தான். அப்படி இருக்கும்போது அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவை நான்கு நாள்களில் தூக்கிவிடுவேன் என்று எம்.எல்.ஏ நேரு பேசியதற்கு என்ன அர்த்தம் ?
அதனால் அவர் மீது உடனே குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அப்படி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மாநிலம் தழுவிய அளவில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றனர்.
அதையடுத்து, சட்டப்பேரவையின் மார்ஷல் பழனிசாமி மற்றும் சட்டப்பேரவைச் செயலர் தயாளன் ஆகிய இருவரும் பெரியகடை காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அந்தப் புகாரின் அடிப்படையில் எம்.எல்.ஏ நேரு மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது, கொலை மிரட்டல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
இது குறித்து எம்.எல்.ஏ நேருவிடம் கேட்டபோது, “பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதி கேட்டதற்காக காவல்துறை என் மீதும் என்னுடைய ஆதரவாளர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டிருக்கிறார்கள். அங்கு யாரையும் எங்கள் ஆதரவாளர்கள் தாக்கவும் இல்லை, அவர்களை பணி செய்ய விடாமல் தடுக்கவும் இல்லை. ஆனால் பொய்யாக 7 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். மக்களுக்காக இன்னும் எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் எதிர்கொள்வேன்” என்றார்.
விஜய் பக்கம் நிற்கும் திருமாவளவன்.. தவெகவுக்கு எவ்வளவு பலம் தெரியுமா? ஓபனாக பேசிய புஸ்ஸி ஆனந்த்!
October 1, 2026
சைக்கிளில் இருந்து விழுந்த எம்எல்ஏ.. கண்டுகொள்ளாமல் எஸ்கேப்பான புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா?
October 1, 2026
அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு
October 1, 2026
ஜூலை.. ஆகஸ்ட்.. செப்டம்பர்! 3 மாதமாக சரியும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூல்.. இந்த முறை ரூ.482 கோடி சரிவு
October 1, 2026
சோபா அனுப்பியது உண்மை தான்.. விசிக, மதிமுகவுக்கு சோபா கொடுத்தது ஏன் தெரியுமா? ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
October 1, 2026
"விஜய்யிடம் வெளிப்படத்தன்மை இல்லை.. அரசு பதில் சொல்லியே தீரணும்.." சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி
October 1, 2026
Paul McCartney Expands ‘The Boys of Dungeon Lane’ With 3 Unreleased Songs for Special Edition
October 1, 2026
Grammys CEO: Best Asian Pop Music Performance Category to Debut in 2027 Despite Controversy
October 1, 2026
விஜய் பக்கம் நிற்கும் திருமாவளவன்.. தவெகவுக்கு எவ்வளவு பலம் தெரியுமா? ஓபனாக பேசிய புஸ்ஸி ஆனந்த்!
October 1, 2026
சைக்கிளில் இருந்து விழுந்த எம்எல்ஏ.. கண்டுகொள்ளாமல் எஸ்கேப்பான புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா?
October 1, 2026
H1B விசா தொடர்ந்து இந்தியர்களுக்கு அடுத்த வேட்டு வைக்கும் அமெரிக்கா.. EB-5 விசா கட்டணம் 114% உயர்வு!
October 1, 2026
அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு
October 1, 2026