தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரபாண்டியன், “CPI, CPI(M)0, CPI(ML), SUCI உள்ளிட்ட அனைத்து இடதுசாரி இயக்கங்களும் இணைந்து இப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். உலகிலேயே மிகப்பெரிய நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் கொண்ட நாடு இந்தியா. இத்தனை கோடி மக்களும், பல அரசியல் கட்சிகளும் பங்கேற்கும் இந்த ஜனநாயகச் சிறப்பையே உலக அறிஞர்கள் ‘ஜனநாயகத்தின் திருவிழா’ (Festival of Democracy) என்றும், ‘ஜனநாயகத்தின் நடனம்’ (Dance of Democracy) என்றும் போற்றினர். அத்தகைய சிறப்பியல்பு கொண்ட இந்திய ஜனநாயகத்தின் உயிரை ஒன்றிய அரசு இன்றைக்கு நெரித்துள்ளது.

சதிகளின் மூலம் சுமார் 13 கோடி மக்களின் வாக்களிக்கும் உரிமையைத் தடை செய்து படுகொலை புரிந்துள்ள நிலைக்குத் தார்மீக மற்றும் நேரடிப் பொறுப்பேற்று தலைமை தேர்தல் ஆணையர் உடனடியாகப் பதவி விலக வேண்டும். அவர் பதவி விலகும் வரை இடதுசாரிகளின் இந்தப் போராட்டம் தொடர்ந்து தீவிரமாக நடைபெறும். உலகில் மக்கள் அதிகாரத்தின் குறியீடாக விளங்குவது வாக்குச்சீட்டுதான். செருப்பு தைக்கும் ஏழைத் தொழிலாளி முதல் அம்பானி வரை யார் வாக்களித்தாலும் அதற்கு ஒரே மதிப்புதான்.
நாடாளுமன்ற ஜனநாயகம் மற்றும் அரசியல் சமத்துவத்தின் அடித்தளத்தையே நாட்டின் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாம் கழுத்தறுத்து சிதைத்துவிட்டனர்.
தற்போது நடைபெறவுள்ள தேர்தலில் இடதுசாரிகள் சார்பில் தாராபுரம், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஆனால், இத்தொகுதிகளில் திமுக, அதிமுக, தவெக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த பெரும் வசதி படைத்தவர்கள் முகாமிட்டு, இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது எல்லையைக் குறிக்க தூங்காமல் கணக்கெடுத்த ராட்க்ளிஃப் (Radcliffe) போல, வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்துகின்றனர்.

கொள்கைகளைப் பேசாமல், எந்த வீட்டுக்கு எத்தனை வாக்குகள் இருக்கின்றன, ஒரு வாக்கிற்கு எவ்வளவு பணம் கொடுக்கலாம் என்று கணக்கெழுதும் வேலையிலேயே அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். டாக்டர் அம்பேத்கர் கூறியது போல, வாக்குச்சீட்டு என்பது நீண்ட நெடிய போராட்டத்தின் ரத்தத் திட்டு. ஒரு மனிதன் தனது கதியைத் தானே தீர்மானிக்கும் அதிகாரம் கொண்ட முக்கியக் கருவி. அத்தகைய வாக்குச்சீட்டை விலை பேசுவதும், அதற்கு விலையாவதும் பெரும் குற்றச் செயலாகும்.
இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை வரலாறு நிச்சயமாகக் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தும். கம்யூனிஸ்ட் கட்சியின் தோழர்கள் வீடு வீடாகச் சென்று ஏழை எளிய மக்களின் முகங்களைப் பார்த்து, வாக்குச்சீட்டின் மதிப்பையும் அதன் ஜனநாயகப் பெருமையையும் எடுத்துரைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். மாற்றாக, எதிர்முகாமில் உள்ளவர்கள் கொள்கை அரசியல் பேசத் திராணியின்றி, தனிப்பட்ட விமர்சனங்களிலும் பெண்களைப் பற்றிய கீழ்த்தரமான பேச்சுகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், மகாத்மா காந்தி மற்றும் மார்க்ஸிய கொள்கை வழிநின்று மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்டுகளின் அரசியலைச் சீர்தூக்கிப் பார்த்து, தமிழ்நாட்டு மக்கள் இடதுசாரிகளுக்குச் சட்டமன்றத்தில் வாய்ப்பளித்து நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா? எண்ணெய் ஏற்றுமதி தரவு உணர்த்தும் உண்மை
October 3, 2026
இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை
October 3, 2026
அபிஷேக் வாண வேடிக்கை: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது இந்தியா
October 3, 2026
'சிறு பண்ணைகளில் 45% கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை' – தமிழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
October 3, 2026
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை
October 3, 2026
தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?
October 3, 2026
ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா? எண்ணெய் ஏற்றுமதி தரவு உணர்த்தும் உண்மை
October 3, 2026
இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை
October 3, 2026
அபிஷேக் வாண வேடிக்கை: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது இந்தியா
October 3, 2026
AirPods 5 Review: Getting Surprisingly Close to the Pros
October 3, 2026
ஊழியர்களை 4 வகைகளாகப் பிரிக்கும் AI.. அப்போ நீங்க எந்த வகை..?
October 3, 2026
'சிறு பண்ணைகளில் 45% கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை' – தமிழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
October 3, 2026