தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராடி வந்தனர். மாலை நேரத்தை கடந்தும் போராட்டம் தொடந்ததால் போலீசார் அவர்களை குண்டுக்கட்டாக கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே இன்று காலை முதல் போராடி வந்தனர். தங்களின் கோரிக்கைகளை அரசு மதித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரி வந்தனர். முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜூம் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று மாலை செவிலியர்களின் பிரதிநிதிகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு கூட்டி செல்லாமல் காவல்துறை அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக செவிலியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்து சென்றவர்களை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என செவிலியர்கள் கூறவே, காவல்துறை போராட்ட இடத்தின் மின் இணைப்பை துண்டித்து பந்தல்களை அகற்றியது. தொடர்ந்து கலைந்து செல்லாவிடில் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர்.

செவிலியர்கள் போராட்டம்
செவிலியர்கள் போராட்டம்

இதைத்தொடர்ந்து இரவு 8:30 மணியளவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக செவிலியர்களை கைது செய்து பேருந்தில் அடைக்க தொடங்கினர். ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் இருந்ததால் கைது செய்ய வந்த பேருந்துகளை மறித்து மற்ற செவிலியர்கள் சாலையில் அமர்ந்துவிட்டனர். இதனால் போலீஸூக்கும் செவிலியர் குழுவுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. காவல்துறையினரால் போராடிய செவிலியர்களை கட்டுப்படுத்த முடியாததால் கைது நடவடிக்கையை கைவிட்டனர். இப்போது செவிலியர்கள் அத்தனை பேரும் ராஜரத்தினம் ஸ்டேடியத்துக்கு வெளியே சாலையை மறித்து அமர்ந்திருக்கின்றனர்.

More in TamilNews
17,000 அடி உயரத்தில் நேர்ந்த கதி.. இண்டிகோ விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்.. 110 பேர் திக்திக் 17,000 அடி உயரத்தில் நேர்ந்த கதி.. இண்டிகோ விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்.. 110 பேர் திக்திக் October 7, 2026 வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை! இது அரசுக்கு அழகல்ல! – கிருஷ்ணசாமி வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை! இது அரசுக்கு அழகல்ல! – கிருஷ்ணசாமி October 7, 2026 மோடியை திடீரென புகழ்ந்த கமல்ஹாசன்.. மக்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமருக்கு வாழ்த்தாம்.. பின்னணி மோடியை திடீரென புகழ்ந்த கமல்ஹாசன்.. மக்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமருக்கு வாழ்த்தாம்.. பின்னணி October 7, 2026 பெரிய பஞ்சம் வரப்போகுது! விஜய் அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி! டெல்டாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்! பெரிய பஞ்சம் வரப்போகுது! விஜய் அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி! டெல்டாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்! October 7, 2026 மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கும் பொல்லார்ட்.. இனி நீங்க சூப்பர் கிங்ஸ் பட்டறை சார்! புலம்பும் பல்தான்ஸ் மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கும் பொல்லார்ட்.. இனி நீங்க சூப்பர் கிங்ஸ் பட்டறை சார்! புலம்பும் பல்தான்ஸ் October 7, 2026 ஜந்தர் மந்தர்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்? ஜந்தர் மந்தர்: பெண் பத்திரிகையாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட ஏசிபி? யார் இந்த விவேக் பகத்? October 7, 2026

See all 672 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *