தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, அக்டோபர் 2 அன்று, டெல்லி சன்சத் மார்க் காவல் நிலையம் எதிரே பெரிய அளவில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஏசிபி விவேக் பகத்திடம் பெண் பத்திரிகையாளர் ஒருவர், பெண் காவலர்களின் இருப்பு குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதிலளித்த அதிகாரி, தம்மிடம் தவறாக நடந்துகொண்டதாகவும் தள்ளிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. மொத்தம் மூன்று பெண்கள் அளித்த புகாரின் பேரில், குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

யார் இந்த விவேக் பகத்?
டெல்லி பொறியியல் கல்லூரியில் சிவில் இன்ஜினியரிங் முடித்த விவேக் பகத், 2017-ம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் 967-வது தரவரிசை பெற்று, 2018-ல் ‘டானிப்ஸ்’ (DANIPS) அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். 2022 குடியரசு தின விழாவில் டெல்லி காவல்துறையின் அணிவகுப்பை முன்னின்று நடத்திய இவர், மத்திய பாதுகாப்புச் செயலர் மற்றும் காவல் ஆணையரின் பல முதன்மைச் சான்றிதழ்களைப் பெற்றுள்ளார்.
முன்னதாக, அலிபூர் மற்றும் பவானா பகுதிகளில் பணியாற்றிய போது, ரவுடிக் கும்பல் மோதல்கள் மற்றும் பவானாவில் நடந்த சிறுமி கொலை வழக்கு உட்படப் பல முக்கிய வழக்குகளைத் துரிதமாக விசாரித்துத் தீர்வு கண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூன் 2026-ல் ஜந்தர் மந்தர் மற்றும் கன்னாட் பிளேஸ் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, வன்முறைக் கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டுப் பலத்த காயமடைந்த விவேக் பகத், சில வார மருத்துவ சிகிச்சைக்குப் பின் மீண்டும் கன்னாட் பிளேஸ் வட்டார ஏசிபி-யாகப் பொறுப்பேற்றுச் சட்ட ஒழுங்கைப் பராமரித்து வந்தார்.

இதனிடையே, அக்டோபர் 5 அன்று டெல்லி அரசு வெளியிட்ட உத்தரவில், 2017 மற்றும் 2018-ம் ஆண்டு டானிப்ஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் துணை ஆணையர் (Addl DCP) பதவி வழங்கப்பட்ட பட்டியலில் விவேக் பகத்தின் பெயரும் இடம்பெற்றது. புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், இவருக்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டது குறித்துப் பல தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டன. சர்ச்சைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, தன் மீதான விசாரணை முடியும் வரை இந்தப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என விவேக் பகத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, அவரது கூடுதல் துணை ஆணையர் பதவி நியமனம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
17,000 அடி உயரத்தில் நேர்ந்த கதி.. இண்டிகோ விமானத்தை திடீரென தாக்கிய மின்னல்.. 110 பேர் திக்திக்
October 7, 2026
வி.எஸ்.பாபு உடல்நலம் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை! இது அரசுக்கு அழகல்ல! – கிருஷ்ணசாமி
October 7, 2026
மோடியை திடீரென புகழ்ந்த கமல்ஹாசன்.. மக்களின் நம்பிக்கையை பெற்ற பிரதமருக்கு வாழ்த்தாம்.. பின்னணி
October 7, 2026
பெரிய பஞ்சம் வரப்போகுது! விஜய் அரசுக்கு காத்திருக்கும் நெருக்கடி! டெல்டாவிலிருந்து நேரடி ரிப்போர்ட்!
October 7, 2026
மஞ்சள் ஜெர்சியில் களமிறங்கும் பொல்லார்ட்.. இனி நீங்க சூப்பர் கிங்ஸ் பட்டறை சார்! புலம்பும் பல்தான்ஸ்
October 7, 2026
கண்ணாடிய திருப்பினா எப்படி ஆட்டோ ஓடும்? போராட்டத்தை தடுக்க டெல்லி போலீஸ் செய்யும் வேலையை பாருங்க!
October 7, 2026
Android’s physical navigation buttons are back on Googlebooks, but not the way you think
October 7, 2026
We found some great October Prime Day deals under $50
October 7, 2026
Roku’s OLED TVs are up to $400 off during Prime Day, starting at $700
October 7, 2026
SA20 auction: JSK sign Pollard, Rowles; MICT pick Hetmyer and Boult
October 7, 2026
ChatGPT’s ‘Intelligent UI’ update fills its responses with pictures, charts, and buttons
October 7, 2026
The first Nvidia RTX Spark laptops cost up to $7,000
October 7, 2026