உத்தரப்பிரதேச மாநிலம், விருந்தாவனத்தில் உள்ளது பிரேமானந்த் மகாராஜா எனும் சாமியாரின் ஆசிரமம். இந்த ஆசிரமத்துக்கு 2023-ம் ஆண்டு கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் சென்றிருந்தார். அப்போது விராட் கோலி இந்த ஆசிரமத்தைப் பிரபலப்படுத்தும் வகையில் முதல் வருகைக்காக ரூ.5 கோடி பெற்றதாக ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா என்பவர் குற்றம்சாட்டினார். இது குறித்த செய்தியகள் சமூக ஊடகங்களில் வைரலான நிலையில், விராட் கோலியின் செய்தித் தொடர்பாளரிடமிருந்து விளக்க அறிக்கை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், “விராட் கோலி குறித்து ஃபலாஹாரி மகாராஜ் தினேஷ் சர்மா கூறியுள்ள தகவல்கள் முற்றிலும் பொய்யானவை, ஆதாரமற்றவை மற்றும் உண்மைக்கு மாறானவை என்பதைத் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மகாராஜ் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கையும் பக்தியுமே கோலியின் ஆசிரம வருகைக்குக் காரணம். பணம் பெற்றதாகக் கூறப்படும் இத்தகைய கூற்றுகளை நாங்கள் கடுமையாக மறுக்கிறோம். இது போன்ற தகவல்களை வெளியிடுவதற்கு அல்லது பரப்புவதற்கு முன்பாக, செய்திகளைச் சரிபார்த்துப் பொறுப்புடன் செய்தி வெளியிடுமாறு ஊடகங்களைக் கேட்டுக் கொள்கிறோம். விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா ஆகியோர் பிரேமானந்த் மகாராஜாவின் தீவிர பக்தர்கள் ஆவர். இவர்கள் விருந்தாவனத்தில் உள்ள அவரது ஆசிரமத்திற்குப் பலமுறை நேரில் சென்று தரிசனம் செய்துள்ளனர்.” எனக் கூறப்பட்டிருக்கிறது.
ஏற்கெனவே, செப்டம்பர் மாதம் பிரேமானந்த் மகாராஜாவின் குரு கிருபா குஞ்ச் ஆசிரம வளாகத்தில் இளம்பெண் ஒருவர் உயிரிழந்தார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாக பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். ஆனால், ஆசிரமம் தரப்பு இளம் பெண் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறுகிறது. எனவே, இந்த மரணம் குறித்து பல்வேறு சர்ச்சைகள் தொடரும் நிலையில், விராட் கோலி தொடர்பான இந்த சர்ச்சையும் பேசுபொருளாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
என்ன தான் நடக்குது தாராபுரத்தில்.. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதம்
October 9, 2026
தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மெகா சொதப்பல்.. கொந்தளித்த முகவர்கள்.. அதிகாரிகளால் அப்செட்
October 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. தபால் வாக்குகளில் தவெக முன்னிலை.. நெருங்கி வரும் திமுக!
October 9, 2026
Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!
October 9, 2026
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர்
October 9, 2026
இரவு உறவு.. காலையில் செய்த செயல்.. முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு! வாஹிதா வெளியிட்ட புதிய ஸ்டோரி!
October 9, 2026
Nvidia-backed AI data centre firm scraps mega stock market listing
October 9, 2026
Adidas sues Australian label White Fox over four stripes design
October 9, 2026
என்ன தான் நடக்குது தாராபுரத்தில்.. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதம்
October 9, 2026
தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மெகா சொதப்பல்.. கொந்தளித்த முகவர்கள்.. அதிகாரிகளால் அப்செட்
October 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. தபால் வாக்குகளில் தவெக முன்னிலை.. நெருங்கி வரும் திமுக!
October 9, 2026
Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!
October 9, 2026