திண்டுக்கல் மாவட்டம் பழநி நகரின் முக்கியப் பகுதியான பூங்கா சாலையில் அருள்மிகு தண்டபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துக்கள் மற்றும் நிலங்கள் உள்ளன.
இந்நிலையில், இந்த மடத்திற்குச் சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை, போலி ஆவணங்கள் தயார் செய்து முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்து நில அபகரிப்பு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.
இச்சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி (CBCID) போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இவ்வழக்கில் ஏற்கனவே தீவிர விசாரணை நடத்திய சிபிசிஐடி அதிகாரிகள், விழுப்புரத்தைச் சேர்ந்த அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், முறைகேடாக நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளத்தைச் சேர்ந்த வெள்ளத்துரை, பழநி புதூரைச் சேர்ந்த சேதுபதி, போலி பத்திரம் தயாரித்துக் கொடுத்த வழக்கறிஞர், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நில மோசடிக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் ஜெயபிரகாஷ் ஆகிய 6 பேரை ஏற்கனவே கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், இவ்வழக்கின் அடுத்தகட்ட விசாரணையில் மோசடி பத்திரப்பதிவுக்கு உடந்தையாக இருந்த மேலும் முக்கியப் புள்ளிகள் சிக்கியுள்ளனர்.

பழநி சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகப் பணியாற்றி, தற்போது பணி இடைநீக்கம் (Suspension) செய்யப்பட்டுள்ள சிவசங்கரி என்ற பெண்ணை சிபிசிஐடி போலீசார் இன்று கைது செய்தனர்.
மேலும், இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான இடைத்தரகர் ஜெயபிரகாசுடன் கூட்டுச் சேர்ந்து சட்டவிரோத ஆவணப் பணிகளுக்கு உடந்தையாகச் செயல்பட்ட வழக்கறிஞர் சிவக்குமார் என்பவரையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண் ஊழியர் சிவசங்கரி, வழக்கறிஞர் சிவக்குமார் ஆகிய இருவரிடமும் இந்த ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழநியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மடத்து நில மோசடி வழக்கில் அரசு ஊழியர் பெண் உட்பட மேலும் இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
என்ன தான் நடக்குது தாராபுரத்தில்.. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதம்
October 9, 2026
தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மெகா சொதப்பல்.. கொந்தளித்த முகவர்கள்.. அதிகாரிகளால் அப்செட்
October 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. தபால் வாக்குகளில் தவெக முன்னிலை.. நெருங்கி வரும் திமுக!
October 9, 2026
Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!
October 9, 2026
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர்
October 9, 2026
இரவு உறவு.. காலையில் செய்த செயல்.. முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு! வாஹிதா வெளியிட்ட புதிய ஸ்டோரி!
October 9, 2026
Samsung-க்கு கும்பிடு.. ரூ.8,200 ஆஃபரில் 55 இன்ச் டிவி.. Mini LED எச்டிஆர்.. 4K அப்ஸ்கேலிங்.. எந்த மாடல்?
October 9, 2026
அமேசானில் ஆர்டர் அள்ள போகுது.. ரூ.7,999 பட்ஜெட்ல 4K ப்ரொஜெக்டர்.. 200 இன்ச்.. ஆட்டோ கீஸ்டோன்.. எந்த மாடல்?
October 9, 2026
22 பில்லியன் டாலர் 'விசா மோசடி'.. அமெரிக்க அரசு அதிரடி.. இந்திய ஐடி நிறுவனங்களுக்குத் தொடர்பா..?
October 9, 2026
இந்தியர்கள் கொத்தடிமைகளா? அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸுக்கு தக்க பதிலடி தந்த மத்திய அரசு..!!
October 9, 2026
JSW Combat to debut on December 3
October 9, 2026