தமிழக அரசியலில் ஐ.யூ.எம்.எல் கட்சியும், மனிதநேய ஜனநாயகக் கட்சியும் பெரும்பாலும் ஒரே அணியில் இடம்பெற்று பரஸ்பரம் நட்புடன் பயணித்து வந்தனர். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு, த.வெ.க கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் கட்சியும் தி.மு.க கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சியும் இடம்பெற்றது. ஐ.யூ.எம்.எல் நிர்வாகிகள் தொடர்ச்சியாக தி.மு.க-வைத் தாக்கி வரும் நிலையில், அதற்கு ம.ம.க நிர்வாகிகள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.
ஒருகட்டத்தில், ‘த.வெ.க கூட்டணியில் ஐ.யூ.எம்.எல் இடம்பெற சோஃபா காரணம்’ என்கிற ரீதியில் பேசிவிட்டார் மனிதநேய ஜனநாயகக் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா. இதைத்தொடர்ந்து, ‘தி.மு.க கூட்டணியில் இருப்பதால் பெரியவர் காதர் முகைதீனை அசிங்கப்படுத்துவதா…’ என உட்கட்சியிலேயே கொந்தளிப்பு ஏற்பட்டுவிட்டதாம். ‘ம.ஜ.க-விலிருந்து ஆட்களை தூக்க வேண்டும்..’ என திட்டமிடுகிறதாம் ஐ.யூ.எம்.எல். ‘இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் வெடிக்கும் சூழல் நல்லதல்ல’ என எச்சரிக்கிறார்களாம் சமூகப் புள்ளிகள்.
போக்ஸோ வழக்கில் கைதான ஜெம் வீரமணி வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்துக் கொண்டே இருக்கிறது. அதனால், வீரமணியால் நிச்சயம் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள் சிறப்பு புலனாய்வு குழுவிலிருக்கும் அதிகாரிகள். விசாரணை ஒரு பக்கம் நடந்துக் கொண்டிருக்கும்போதே கிடைத்திருக்கும் ஆதாரங்கள், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் அடிப்படையில் முதல் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸ் டீம் தயாராகி விட்டது.

அதே நேரத்தில், வீரமணியிடம் பணம் வாங்கிவிட்டு அவரை கைது செய்யாமல் தப்பிக்க வைத்த போலீஸ் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை பாயத் தொடங்கியிருப்பதால், குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கிலியிலிருக்கிறார்களாம். விரைவிலேயே முக்கிய ஐ.பி.எஸ் அதிகாரியை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிடுகிறதாம் புலனாய்வு குழு!
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் தேர்தல் அறிவிக்கும் முன்பே களப்பணிகளை தொடங்கியிருந்தால் வெற்றியை தேர்தலுக்கு முன்பு உறுதிப்படுத்தியிருக்கலாம் என நினைக்கிறார்களாம் அ.தி.மு.க தலைமை கழக நிர்வாகிகள். எனவே, அடுத்தடுத்து வரவுள்ள இடைத்தேர்தலை அசால்ட்டாக கையாளக் கூடாது என முடிவெடுத்துகிறார்கள் ரத்தத்தின் ரத்தங்கள். இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிந்தவுடனேயே கழகப் பேச்சாளர்களை இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளில் களமிறக்கி தெருமுனைக் கூட்டம் நடத்தும் திட்டத்தில் இருக்கிறார்களாம்.

தாராபுரத்தில் சத்தியபாமாவுக்கு தொகுதி முழுக்க எதிர்ப்பு கிளம்பியதுபோல கரூர், விராலிமலை, பெருந்துறை, அம்பாசமுத்திரம் தொகுதிகளிலும் த.வெ.க வேட்பாளாராக இருக்கும் புள்ளிகளுக்கு எதிரான பிரசாரங்களை கூர்மைப்படுத்துகிறார்களாம். ‘நீதி கேட்டு நெடும் பயணம்’ என்ற தலைப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை வைத்து பிரசார பொதுக்கூட்டங்கள் நடத்தவும் ப்ளான் இருக்கிறதாம் அ.தி.மு.க. இடைத்தேர்தல்களில் தோற்றாலும் பரவாயில்லை எதிர்க்கட்சிக்கான இடத்தை பிடித்துவிட வேண்டுமென கணக்குப் போடுகிறார்களாம்!
‘தி.மு.க-வை வெற்றிப் பாதைக்கு திருப்புவேன்’ என சபதமேற்றிருக்கும் தி.மு.க தலைவர் மு.க ஸ்டாலின், கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்க ஆணையிட்டிருந்தார். ஆனால், மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் அறிவிப்பால் மறுசீரமைப்பு பணிகளில் பாதிலேயே நிறுத்தப்பட்டன. அடுத்தடுத்து இடைத்தேர்தல்களும் வரவிருப்பதை காரணம்காட்டி மறுசீரமைப்பு நடவடிக்கைகளை கிடப்பில்போட திட்டமிடுகிறார்கள் சீனியர்கள் சிலர்.

அதாவது, ‘சீனியர்களை ஓரம்கட்டினால் எதிர்வரும் இடைதேர்தலில் பெரும் சிக்கலை சந்திக்க வேண்டிவரும். எனவே இடைத்தேர்தல்களை மொத்தமாக முடித்துவிட்டு பிறகு மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தொடங்கலாம்’ என தலைமையின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார்களாம் கட்சியிலுள்ள முக்கிய நிர்வாகிகள். இடைத்தேர்தல் முடிவுகள் தி.மு.க-வுக்கு சாதகமாக இருக்காது என ரிப்போர்ட் வந்திருப்பதால் தலைமையும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை தள்ளிப்போடலாமா என சிந்திக்கிறதாம்!
தாராபுரம் இடைத்தேர்தல் களத்தில் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த அ.தி.மு.க நிர்வாகிகளை தேடித் தேடி கைது செய்தது காவல்துறை. தாராபுரம் தேர்தல் பிரசாரத்துக்கு எடப்பாடி பழனிசாமி வந்திருந்த சூழலில் 8 அ.தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தது காவல்துறை. அதையெல்லாம் வெறுமனே கண்டனத்தோடு கடந்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

கடந்த அக்.3-ம் தேதி அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செல்வராஜ் கைதான போது, தாராபுரம் பிரசாரத்துக்கு வந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தாராபுரம் காவல் நிலையத்துக்கே சென்று முறையிட்டார். ‘அ.தி.மு.க-வினர் கைதாகும்போது எடப்பாடியே ஒதுங்கி நின்றபோது டிடிவி தினகரன் ஓடோடி வந்தாரே…’ என்ற பேச்சு கொங்கு மண்டலத்தில் ஒலிக்கிறது. இதை எடப்பாடி ஆதரவாளர்கள் ரசிக்கவில்லையாம்!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
என்ன தான் நடக்குது தாராபுரத்தில்.. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதம்
October 9, 2026
தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மெகா சொதப்பல்.. கொந்தளித்த முகவர்கள்.. அதிகாரிகளால் அப்செட்
October 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. தபால் வாக்குகளில் தவெக முன்னிலை.. நெருங்கி வரும் திமுக!
October 9, 2026
Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!
October 9, 2026
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர்
October 9, 2026
இரவு உறவு.. காலையில் செய்த செயல்.. முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு! வாஹிதா வெளியிட்ட புதிய ஸ்டோரி!
October 9, 2026
Militsioner Preview: Flirting with a Colossal Policeman to Beat the Allegations
October 9, 2026
Why Bangladesh replaced Pakistan at the last minute in Asian Champions Trophy hockey
October 9, 2026
First Look: Andy Weir Teases New Sci Fi Audio Project Exoplanet
October 9, 2026
Top-order collapse costs India A as Australia A seal series with game to spare
October 9, 2026
'Rashid congratulated me': The bond Patekar shared with Pak cricketer nicknamed 'Nana'
October 9, 2026
Polanski challenged over whether he thinks Israel has right to exist
October 9, 2026