தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு கலகத்தை உண்டாக்கியிருக்கிறது.
கடந்த மே மாதத்தில், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உருவான சி.வி.சண்முகம், வேலுமணி அணி மீண்டும் களத்தில் இறங்கியிருக்கிறது.
முதற்கட்டமாக நிர்வாகிகள் சந்திப்பை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அ.தி.மு.க-வின் தலைமைப் பொறுப்புக்கு எடப்பாடி பழனிசாமி வந்த பிறகு, ஒவ்வொரு தேர்தல் முடிவின்போதும் கட்சிக்குள் சிறு சிறு சலசலப்புகள் எழுவது வாடிக்கை. ஆனால், அப்போதெல்லாம் பெரும் பிரச்னையாக அது வெடித்ததில்லை.
ஆனால், 2026 தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க-வுக்குள் மிகப்பெரிய கலகத்தையே உண்டாக்கியது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் தலைமையில் 25 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி உயர்த்தினர்.
சட்டமன்றத்திலும் முதல்வர் விஜய்யை ஆதரித்து வாக்களித்தனர். தொடர்ந்து, விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஆறு எம்.எல்.ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.கவில் இணைந்தனர். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டவர்கள் மன்னிப்புக் கடிதம் கொடுத்து மீண்டும் இணைந்தாலும் கட்சியில் அவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை.
உதாரணமாக, அவர்கள் வகித்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பறித்த எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதை வழங்கவில்லை. இதனால், அதிருப்தியில் இருந்தவர்கள் கட்சி நிகழ்வுகளில் இருந்து ஒதுங்கி இருந்ததோடு, அவ்வப்போது எடப்பாடி பழனிசாமிக்கு கடிதங்களையும் எழுதி வந்தனர். சி.வி.சண்முகம் வெளிப்படையாகவே எடப்பாடி பழனிசாமியைக் காட்டமாக விமர்சித்து வந்தார்.
இந்தச் சூழலில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதும் இந்த விவகாரம் கொஞ்சம் அடங்கியது. ஆனால், இரண்டு தொகுதிகளிலும் அ.தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கும் சூழலில் மீண்டும் வேலுமணி, சி.வி.சண்முகம் டீம் களத்தில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விவரமறிந்தவர்கள் பேசும்போது, “2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே த.வெ.க-வுடன் கூட்டணி அமைக்க வேலுமணி, விஜயபாஸ்கர், சண்முகம் உள்ளிட்டவர்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தனர்.

ஆனால், அவர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு த.வெ.க அரசை ஆதரிக்கலாம் என மீண்டும் பேசிப் பார்த்தனர். அதற்கும் எடப்பாடி பழனிசாமி ஓகே சொல்லவில்லை. தொடர்ந்துதான், முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களோடு தனி அணியாகச் செயல்படத் தொடங்கினர். த.வெ.க ஆட்சியில் அமைச்சராகவும் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
ஆனால், ஆரம்பத்தில் 32 பேர் இருந்த சூழலில் சட்டமன்றத்தில் வாக்களிக்கும்போது 25 பேர் மட்டுமே வாக்களித்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்.எல்.ஏக்கள் இல்லாத சூழல் அந்தத் திட்டத்தைக் கைவிட்டனர். ஆறு பேர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அப்போதே எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பொதுச் செயலாளர் பதவியைப் பறிக்கவும் திட்டமிட்டனர்.
ஆனால், அதற்கான சூழல்கள் அமையவில்லை. தொடர்ந்து, சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களை கட்சிக்குள் கொண்டு வரவும் முயற்சி செய்தனர். ஆனால், அதற்கும் எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொள்ளவில்லை. இப்போது அதற்கான சூழல்கள் அமைந்திருக்கிறது” என்றவர்கள், அதுகுறித்தும் விரிவாகப் பேசினார்,
“தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலில் எப்படியாவது தாராபுரத்தில் மட்டுமாவது வெற்றிபெற்று தன் ஆளுமையை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி முயற்சி செய்தார். அதனால்தான், எஸ்.பி.வேலுமணிக்கு வெறும் நான்கு வார்டுகளை மட்டுமே ஒதுக்கி தன் ஆளுமையின் மூலமாக வெற்றி கிடைத்ததாகப் பதிவு செய்ய நினைத்தார்.
ஆனால், இந்த இரண்டு தொகுதியிலும் அ.தி.மு.க வெற்றி பெறக்கூடாது என்பதில் வேலுமணி டீம் கண்ணும் கருத்துமாக இருந்தது. அதற்கான உள்ளடி வேலைகளையும் பார்த்தனர். தற்போது, இரண்டு தொகுதியிலும் மூன்றாவது இடத்துக்கு வந்திருப்பதால் இதுதான் சரியான் தருணம் என முடிவெடுத்திருக்கின்றனர்.

முதற்கட்டமாக நாளை சென்னை சி.வி.சண்முகம் வீட்டில் எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொள்ளவிருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கும் எம்.எல்.ஏக்கள் சிலருக்கும் அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
தற்போதைய சூழலில், அ.தி.மு.கவில் 41 எம்.எல்.ஏக்கள் இருக்கும் சூழலில் 28 எம்.எல்.ஏக்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. பழைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கான காய் நகர்த்தல்களை தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தொடங்கிவிட்டனர். டெல்லி செல்லும் திட்டமும் இருக்கிறது” என்கிறார்கள்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ பயணிகளே உஷார்! 7 ஸ்டேஷன்களில் ரயில் நிற்காது… ஏன் தெரியுமா?
October 12, 2026
மக்களே நகை வாங்க ரெடியா?…இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
October 12, 2026
"பதவிகள் ஒரு பொருட்டல்ல.. கூட்டணியில் இருந்து வெளியேறுவோம்"- வன்னி அரசு ஆவேசம்!
October 12, 2026
TN Weather: எந்தெந்த மாவட்டங்களில் மழை வெளுக்கும்… வெளியான வானிலை அப்டேட்!
October 12, 2026
பலம் தரும் நரசிம்மர்…நலம் தரும் சரபேஸ்வரர்!
October 12, 2026
தொழில், நிதி மற்றும் ஆரோக்கியம்.. இன்றைய ராசிபலன் (அக்.12)
October 12, 2026
Campaigners claim minister attempting to undermine 'Holiday Hunger Bill'
October 12, 2026
Jantar Mantar de-notified as protest venue, Delhi Police circular says | All you need to know
October 12, 2026
Gyanesh Kumar, you have done a crime, but 'not the main criminal': What LoP wants to tell Supreme Court about CEC
October 12, 2026
Healey faces £35bn Budget challenge to meet spending pledges, says think tank
October 12, 2026
No ‘adjudication’ on new Form 6 while hearing Bihar SIR: Supreme Court
October 12, 2026
இங்கிலீஷில் கேள்வி கேட்டு வெளுத்த கார்த்திக்.. அலறியடித்து ஓடிய மாயா.. கார்த்திகை தீபம்!
October 12, 2026