எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை தொடங்குவதற்காக முயன்று வருகிறது. 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் உரிமம் பெற்றிருப்பதாகவும், இந்திய அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும் தெரிவிக்கும் எலான் மஸ்க், இந்தியாவில் சேவையைத் தொடங்குவதற்கு இன்னும் ஏன் அனுமதி இல்லை எனக் கேள்வி எழுப்பியிருந்தார். மேலும், இந்தியாவில் சேவை தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு பின்னால் பெருநிறுவனங்களின் தலையீடு இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்த மஸ்க், முகேஷ் அம்பானியின் பெயரை நேரடியாகக் குறிப்பிட்டும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.
எலான் மஸ்கின் குற்றச்சாட்டை நிராகரித்த மத்திய தொலைத்தொடர்புத் துறை,“இந்தியாவின் செயற்கைக்கோள் இணையச் சேவைக்கான விதிமுறைகளோ, அவற்றை நடைமுறைப்படுத்தும் முறையோ எந்த நிறுவனத்துக்கும் சாதகமாகவோ பாதகமாகவோ இல்லை” என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் எலான் மஸ்க் தன் எக்ஸ் பக்கத்தில், “மதிப்பிற்குரிய பிரதமர் அம்பானி அவர்களுக்கு, இந்தியாவின் உண்மையான அதிகாரம் உங்களிடம்தான் இருக்கிறது என்பதைத் தாமதமாகப் புரிந்துகொண்டேன். அதற்காக என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவின் மகத்தான மக்களை உங்கள் ஏகபோக உரிமையால் பயன்படுத்திக்கொள்வதையே நீங்கள் விரும்புவீர்கள் என்பது இயல்புதான். இருப்பினும், ஸ்டார்லிங்க் (Starlink) நிறுவனம் இந்தியாவில் தொழில்போட்டியில் இறங்க நீங்கள் அனுமதிப்பீர்களா? மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவிலும் இணைய வசதியே இல்லாத பல பகுதிகள் இன்னும் இருக்கின்றன.

இதனால் அங்குள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புகளும், சிறு தொழிலதிபர்கள் தங்கள் பொருட்களை உலகச் சந்தையில் விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளும் மறுக்கப்படுகின்றன. ஸ்டார்லிங்க் சேவை அவர்களுக்குக் கிடைத்தால், அது நிச்சயமாக அவர்களின் வாழ்க்கையை நேர்மறையான திசையில் மாற்றி அமைக்கும். நன்றி!” எனப் பதிவிட்டிருக்கிறார். அவரின் பதிவு சமூக ஊடகங்களில் விவாதமாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
சொந்தக்காரர் வீட்டுக்கு போனவருக்கு சோகம்..ஓட ஓட விரட்டி ஆசிரியர் படுகொ*? கழுத்தை அறுத்த கொடூரம்?
October 11, 2026
2 நிமிடத்தில் சர்வ நாசம்.. நேபாளத்தில் மீண்டும் வெள்ளம்! அடித்து செல்லப்பட்ட வீடுகள், பாலங்கள்
October 11, 2026
F-35 விமானத்தின் அருகே கூட விடமாட்டீங்க.. இதுல எங்களுக்கு விற்க போறீங்களா? அமெரிக்காவுக்கு குத்துவிட்ட இந்தியா
October 11, 2026
டி20 கிரிக்கெட் என்பது ஒரு வழிப்பாதை.. ஒன்று அடிக்கணும்.. இல்ல அவுட்டாகணும்.. சஞ்சு சாம்சன் ஷேரிங்ஸ்!
October 11, 2026
டெல்லி சிஜேபி போராட்டக் களத்தில் பிபிசி செய்தியாளர்கள் நேரில் கண்டவை என்ன?
October 11, 2026
சிஜேபி போராட்டத்தில் போலீஸ் நடந்துகொண்ட விதம் குறித்து கவலை தெரிவித்த ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு
October 11, 2026
Madras High Court directs Registry not to number DMK’s ₹1 crore defamation suit against TVK Ministers
October 11, 2026
Sixth POCSO Act case against ‘Gem Granite’ Veeramani
October 11, 2026
IND vs WI: இந்திய அணியில் 2 முக்கிய வீரர்கள் நீக்கம்.. ஸ்ரேயாஸ் ஐயர் அதிரடி.. பிளேயிங் 11 என்ன?
October 11, 2026
Chennai-bound Indigo flight from Delhi diverted to Hyderabad following 'smoke' onboard, lands safely
October 11, 2026
Palaniswami recalls efforts by AIADMK government towards Phase II Chennai Metro Rail project
October 11, 2026
‘Dragon Ball Super: Beerus’: How to Stream the New Anime Today
October 11, 2026