தமிழ்நாடு அரசியலில் மின்சாரத்துறை ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்கவிருக்கும் செய்தி பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும், தவெக கூட்டணியில் இருக்கும் சிபிஎம் சண்முகம் உள்ளிட்ட பலரும் விமர்சித்திருக்கின்றனர். இந்த நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, “மின் பற்றாக்குறையைச் சமாளிப்பதற்காக நேற்று டெண்டர் கோரப்பட்டிருந்தது. அது குறித்த விளக்கங்கள் ஏற்கனவே அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த டெண்டர் தொடர்பான இறுதி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

நமது ஒட்டுமொத்த மின் தேவையில், மாலை மற்றும் இரவு நேர பீக் ஹவர்ஸ் தேவையைச் சமாளிக்க மட்டும் 1,000 மெகாவாட் அளவுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மின் கொள்முதாலானது வரும் 15-ம் தேதி முதல் 31-ம் தேதி வரையிலான கால கட்டத்திற்கு மட்டுமே. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட கொட்டேஷன்களை பரிசீலித்து, யூனிட் ஒன்றுக்கு ரூ.3.30 முதல் ரூ.3.50 வரையிலான விலையில் மின்சாரம் வாங்கப்பட உள்ளது.
இந்தக் கூடுதல் மின் கொள்முதல் காரணமாக, அரசுக்கு ஒரு நாளைக்குக் கூடுதலாக ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை கூடுதல் செலவினம் ஏற்படும்.
நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்களுக்குப் போவதற்கான முன்னெடுப்புகளையும் மின்சார வாரியம் ஏற்கனவே தொடங்கியுள்ளது. தமிழகத்தில் கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டில்தான் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தம் போடப்பட்டது. இனிவரும் காலங்களில் அதிகபட்சமாக நீண்டகால ஒப்பந்தங்களை மேற்கொண்டு, மாநிலத்தின் மின் தேவைகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்.
மேலும், பேட்டரி சேமிப்புக் கொள்கையை கட்டாயமாக்க திட்டமிட்டுள்ளதால், கடந்த நான்கு மாதங்களாகச் புதிய சோலார் விண்ணப்பங்கள் எதுவும் பெறப்படவில்லை.
தற்போது 3,500 மெகாவாட் மின்சாரத்திற்கான டெண்டர் அறிவிக்கப்பட்டிருந்தாலும், நமது தேவைக்கு ஏற்ப 1,000 மெகாவாட் அளவுக்கு மட்டும் கொள்முதல் செய்துகொள்ளும் வகையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

வரும் தீபாவளிப் பண்டிகை காலங்களில் மின் பற்றாக்குறை ஏற்படும் பட்சத்தில், கூடுதல் மின் கொள்முதல் செய்வது குறித்தான முடிவுகள் இன்னும் முழுமையாக எடுக்கப்படவில்லை. ஒன்று அல்லது இரண்டு நாட்களில் அது குறித்து முடிவெடுக்கப்படும். தேவைப்பட்டால், தீபாவளி பண்டிகையின் அந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் மாலை 6:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை மின் கொள்முதல் செய்யப்படலாம். இதேபோல, கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்திலும் அந்த ஒரு வாரத்திற்கு இத்தகைய ஏற்பாடுகள் தேவைப்படலாம். ஏனெனில், தற்போது நாம் போடும் நீண்டகால மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்திற்குப் பிறகே மின்சாரம் கிடைக்கத் தொடங்கும்.
அதுவரை இதுபோன்ற குறுகிய கால ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. வேறு எந்த மாநிலமும் செய்யாத வகையில், தமிழகம் மட்டுமே முதல்முறையாக திறந்தவெளி டெண்டர் கோரியுள்ளது. பிற மாநிலங்கள் அனைத்தும் நேரடியாக நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி யூனிட் ரூ.30-க்கு மேல் அதிக விலை கொடுத்து கேஸ் மின்சாரத்தை வாங்கி வருகின்றன. சந்தையில் வேறு யாராவது குறைந்த விலைக்கு மின்சாரம் தர முன்வருகிறார்களா என்பதை வெளிப்படையாக அறியவே தமிழக அரசு இந்த டெண்டர் முறையைப் பின்பற்றியுள்ளது. இதில் எந்தவிதமான முறைகேடுகளுக்கும் வாய்ப்பில்லை.

தற்போது நிலவும் கடுமையான மின் தேவையைச் சமாளிக்க முடியாமல் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகாரப்பூர்வ மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவிலும் கடந்த ஒரு வாரமாக மின்தடை அமலில் உள்ளது. ஆனால், தமிழகத்தில் மின்தடை எதுவும் ஏற்படாமல் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்யவே, கூடுதல் செலவானாலும் கேஸ் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. தமிழகத்தின் தற்போதைய மின் தேவை 21,000 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 5,000 மெகாவாட் கூடுதலாகும்.
இதில் 3,000 மெகாவாட் மின்சாரம் குறைந்த விலையிலான பிற ஒப்பந்தங்கள் மூலம் பெறப்படுகிறது. பற்றாக்குறையாக உள்ள 500 முதல் 1,000 மெகாவாட் மின் தேவையை மட்டுமே இந்த அவசரக் கொள்முதல் மூலம் பூர்த்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் வெப்பமின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்போது மின் தேவை அதிகமாக இருந்ததால் முழுமையான பராமரிப்புப் பணிகளைச் செய்ய முடியவில்லை. இருப்பினும், இடைக்காலப் பராமரிப்புப் பணிகள் மூலம் வெப்பமின் நிலையங்களின் உற்பத்தித் திறன் கடந்த ஆண்டில் இருந்த 50%-ல் இருந்து தற்போது 73%-ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த 5 ஆண்டுகளில் புதிய திட்டங்கள் எதுவும் செயல்பாட்டிற்கு வரவில்லை என்றாலும், தற்சமயம் 1,600 மெகாவாட் மின் உற்பத்தியை உடனே கொண்டு வருவதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழக அரசின் சொந்த மின் உற்பத்தித் திறன் (Own Generation) வெறும் 5,300 மெகாவாட் மட்டுமே. எஞ்சிய பெருவாரியான மின் தேவை முழுவதும் சோலார், காற்றாலை, மத்திய தொகுப்பு (Central Grid) மற்றும் அதானி போன்ற தனியார் நிறுவனங்களிடம் இருந்தே கொள்முதல் செய்யப்பட்டு பூர்த்தி செய்யப்படுகிறது. எனவே, சொந்த மின் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கிலும், தடையற்ற மின்சாரத்தை வழங்கும் நோக்கிலும் இந்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
மின்வெட்டை அமல்படுத்தினால் அரசின் கூடுதல் செலவு மிச்சமாகும் என்றாலும், தொழில் துறை, வர்த்தகம் மற்றும் எம்.எஸ்.எம்.இ (MSME) துறைகள் கடுமையாகப் பாதிக்கப்படும். சில மணிநேர மின்வெட்டால் பல நூறு கோடி ரூபாய் வர்த்தக இழப்பு ஏற்படும். எனவே, தொழில் துறையினரையும் பொதுமக்களையும் பாதுகாப்பதற்காகவே கூடுதல் செலவானாலும் மின்சாரத்தைக் கொள்முதல் செய்யும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முந்தைய ஆட்சிக் காலத்தில் லெட்டர் பேட் நிறுவனங்களுக்கு டெண்டர் கொடுத்து, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்து 30-40 ஆண்டுகள் பழமையானதை புதுப்பித்து தரமற்ற டிரான்ஸ்பார்மர்களைக் கொண்டுவந்து பொறுத்தியுள்ளனர்.

இதில் மிகப்பெரிய முறைகேடு மற்றும் குவாலிட்டி காம்ப்ரமைஸ் நடந்துள்ளதால், இது குறித்த சிபிஐ விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. முந்தைய ஆட்சியில் 1 மெகாவாட்டிற்கு ₹25 முதல் ₹30 லட்சம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைப்படுத்தாமல் சோலார்/காற்றாலை அனுமதிகளை வழங்கியுள்ளனர். என்.எல்.சி (NLC) மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. அதேபோல, அதானி குழுமத்திடமிருந்து வர வேண்டிய 2,000 மெகாவாட்டில் 1,500 மெகாவாட் மட்டுமே வருகிறது. 2013-ல் போடப்பட்ட நீண்டகால ஒப்பந்தம் 2028 வரை அமலில் இருக்கும் என்றாலும், புதிய நீண்டகால ஒப்பந்தங்கள் இந்த மாத இறுதிக்குள் கோரப்படும்.
எதிர்க்கட்சியினர் அடிப்படை விவரங்கள் தெரியாமல் அல்லது தெரிந்துகொண்டே பொய்யான குற்றச்சாட்டுகளைக் கூறி வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பியுள்ள லீகல் நோட்டீஸிற்குச் சட்டப்பூர்வமாகப் பதில் அளிக்கப்படும். அவர் கட்சிக்கும் தொண்டர்களுக்கும் துரோகம் செய்துவிட்டு, பண பலத்தாலும் டெண்டர் முறையிலும்தான் முதலமைச்சராகவும் பொதுச்செயலாளராகவும் வந்தார் என்று மூத்த தலைவர்களே கூறிய உண்மையையே நானும் சுட்டிக்காட்டினேன்.

சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழை மற்றும் பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. பேரிடர் மீட்புக் குழுக்கள் (Disaster Recovery Teams) தயார் நிலையில் உள்ளன. மெட்டீரியல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, இருமுறை ‘டிரை ரன்’ (Dry Run) நடத்தப்பட்டுள்ளது. அடுத்த வாரம் ஒட்டுமொத்த அளவிலான டிரை ரன் நடத்தப்பட்டு, கஜா புயல் போன்ற மிகப்பெரிய பேரிடர்களையும் எதிர்கொள்ளும் வகையில் முழு தயார்நிலை உறுதி செய்யப்படும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தம் என்றால் என்ன? விஜயின் ஆந்திர பயணம் தமிழ்நாட்டுக்கு பலன் தருமா?
October 14, 2026
'அவரை அடக்குங்க முதல்ல…' – மாநகராட்சி கூட்டத்தில் மோதிய சேகர் பாபு – தவெக எம்.எல்.ஏ தாமு!
October 14, 2026
சௌதி அரேபியா மீது அடுத்தடுத்து தாக்குதல்கள் நடத்தும் ஹூத்திகள் – அமெரிக்கா உதவாதது ஏன்?
October 14, 2026
சிவாராசா அனோஜன்: மரண தண்டனை ரத்தானது பற்றி இலங்கை அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?
October 14, 2026
'ரூ.80க்கு விற்ற சாப்பாடு தற்போது ரூ.120' – அதிகரிக்கும் பணவீக்கம் தமிழக மக்களை எப்படி பாதிக்கிறது?
October 14, 2026
'ரசிகர் மன்றம் டு நற்பணி இயக்கம்; புதிய கொடி அறிமுகம்!' – கோவையில் தனுஷின் அடுத்த மூவ்!
October 14, 2026
Vijay launches ₹3,108-cr. ring main pipeline project for equitable drinking water supply
October 14, 2026
Man killed as lorry rams two-wheeler in Tiruvannamalai
October 14, 2026
Two held for cheating in Vellore
October 14, 2026
VIT to install 65 LED streetlights on Sathuvachari-VIT High Road in Vellore town to prevent accidents
October 14, 2026
Sudden showers in Vellore, nearby districts
October 14, 2026
Microsoft Announces Xbox Nano Controller, a Tiny New Gamepad That Fits in Your Pocket
October 14, 2026