காக்ரோச் ஜனதா கட்சியினர் டெல்லியில் தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமார் பதவி விலகவேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தினர். இதையடுத்து டெல்லியில் போராட்டம் நடந்த ஜந்தர் மந்தர் பகுதியை போராட்டம் நடைபெறும் இடம் என்பதில் இருந்து டெல்லி போலீஸார் நீக்கிவிட்டனர். அதோடு அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜந்தர் மந்தருக்கு செல்லும் வழியில் இருந்த இரும்பு கேட்டில் ஏறி குதித்த காக்ரோச் ஜனதா கட்சி தலைவர்கள் சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா மற்றும் அஜிங்க்யா ஷிண்டே ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து காக்ரோச் ஜனதா கட்சி தலைவர் அபிஜித் திப்கே விமானத்தில் டெல்லி சென்றார். விமான நிலையத்தில் அவருடன் மர்ம நபர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அபிஜித் விமான நிலையம் வழியாகச் செல்லும்போது மக்கள் அவரை பார்த்து கூச்சலிட்டனர். ஒருவர் “சகோதரா ஏன் நாட்டைக் சீரழிக்கிறாய், ஏன் நாட்டைக் கெடுக்கிறாய்?” என்று அபிஜித்திடம் திரும்பத் திரும்பக் கேட்டார். அதோடு கூட்டத்தில் நின்ற சிலர் “திருடன், திருடன்” என்று கூச்சலிட்டனர்.

அதே நேரத்தில் ஒரு அபிஜித் செல்லவேண்டிய காரை சுற்றி ஏராளமானோர் கூடி நின்றனர். அவர்கள் யார் என்பது குறித்து அடையாளம் காணமுடியவில்லை. இந்த சம்பவங்கள் தொடர்பான காணொலி சமூக ஊடகங்களில் வைரலாகி இருக்கிறது. இந்நிலையில் தேசியக் கொடியை ஏற்றுவதற்காக நாளை டெல்லியில் உள்ள கன்னாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் கூடும்படி தனது ஆதரவாளர்களுக்கு அபிஜித் திப்கே அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் தேசபக்தர்கள் மற்றும் தேசியக் கொடியை விரும்பும் மக்கள் அக்டோபர் 16 அன்று மாலை 5 மணிக்கு பூங்காவில் ஒன்றுகூடவேண்டும். மூவர்ணக் கொடியை ஏற்றியதற்காக சௌரப் மற்றும் ஆஷூ ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எனவே, மூவர்ணக் கொடியை விரும்பும் அனைவருக்கும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கொனாட் பிளேஸில் உள்ள சென்ட்ரல் பூங்காவில் கொடியுடன் திரளுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன். மூவர்ணக் கொடியை அசைப்பது குற்றம் இல்லை என்பதை நிரூபிப்போம்,” என்று அவர் கூறினார்.
திமுக ட்விஸ்ட் – உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் – 'துரோகி…' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்
October 15, 2026
கோட்டைவிட்ட நிர்மல் குமார்: TVK அரசுக்கு நெருக்கடி; என்ன செய்யப்போகிறார் விஜய்!
October 15, 2026
சிறுமியின் பின்புறத்தை பிடித்து அத்துமீறியதாக கூறப்படும் ரோபோ பறிமுதல் – இயக்கியது யார்?
October 15, 2026
'பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அதிமுக கிளைச் செயலாளர் பதவி' – எடப்பாடி பழனிசாமி பதிலடி
October 15, 2026
"உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" – ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை
October 15, 2026
வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கொன்று டிரம்மில் மறைத்த மனைவி, காதலனுக்கு மரண தண்டனை
October 15, 2026
திமுக ட்விஸ்ட் – உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் – 'துரோகி…' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார்
October 15, 2026
PF பணம் எடுப்பவர்களுக்கு முக்கிய தகவல்.. மருத்துவம், கல்வி, திருமணம்.. புது ரூல்ஸ்.. இதோ முழு விவரம்..
October 15, 2026
India news: Supreme Court likely to hear Rahul Gandhi's Election Commission plea
October 15, 2026
கோட்டைவிட்ட நிர்மல் குமார்: TVK அரசுக்கு நெருக்கடி; என்ன செய்யப்போகிறார் விஜய்!
October 15, 2026
நவ.9 கடைசி.. இனிமே ரூ.1-க்கு ரீசார்ஜ்.. Jio, Airtel, Vi கனவுல கிடைக்காது.. 24 நாட்களுக்கு அன்லிமிடெட் வாய்ஸ்!
October 15, 2026
சிறுமியின் பின்புறத்தை பிடித்து அத்துமீறியதாக கூறப்படும் ரோபோ பறிமுதல் – இயக்கியது யார்?
October 15, 2026