சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க புறநகர் மாவட்ட அலுவலகத்தில் அக்கட்சியின் ஊராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு 55- வது ஆண்டு விழாவை முன்னிட்டு நடைபெறும் பொதுக் கூட்டத்திற்கான ஆலோசனைகளை மேற்கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ” அ.தி.மு.க- வில் இருந்து 2000 கிளைச் செயலாளர்களும் 1400 ஒன்றிய செயலாளர்களும் தமிழக வெற்றி கழகத்தில் இணையுள்ளதாக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறி வருகிறார்.

எடப்பாடி பழனிசாமி

அது கனவிலும் நடக்காது. நிர்வாகிகளின் பல ஆண்டுகால உழைப்பில் உருவான இயக்கம் இது. அ.தி.மு.க- வை குறைத்து எடை போடுவது சரியல்ல. பொதுப்பணித்துறை அமைச்சர் பதவிக்கு நிகரானது அ.தி.மு.க கிளைச் செயலாளர் பதவி. சட்டமன்றத்தில் குதிரை பேரத்தில் ஈடுபட்டதில் தொடங்கி தற்போது கிளைச் செயலாளர் வரை தமிழக வெற்றி கழகம் வந்துவிட்டது. சினிமா கவர்ச்சியில் வாக்குகளைப் பெற்று தப்பி தவறி ஆட்சிக்கு வந்துவிட்ட தமிழக வெற்றி கழகத்திற்கு கிளை மற்றும் ஒன்றிய அமைப்புகளில் ஆட்கள் யாரும் இல்லை. அவர்கள் கட்சியில் ஆட்கள் இல்லை என்பதற்காக அடுத்த கட்சிக்காரரை அழைத்து இணைப்பது கேவலமான ஒன்றாகும். தமிழக வெற்றிக் கழகத்தில் யாரும் இல்லை என்பதற்காகவே மற்றவர்களை கூவி கூவி அழைக்கிறார்கள். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் இருவரும் பல கட்சிகளில் இருந்த பின்னரே தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். அவர்கள் பல ஆண்டுகளாக விஜய் ரசிகராகவோ விஜய் ரசிகர் மன்றத்திலோ இல்லை. அ.தி.மு.க பற்றி பேசினால் அவருடைய கட்சியில் கவனம் கிடைக்கும் என்பதற்காகவே தொடர்ந்து இதுபோல பேசி வருகின்றனர்” என்றார்.

More in TamilNews
திமுக ட்விஸ்ட் – உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் – 'துரோகி…' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார் திமுக ட்விஸ்ட் – உஷாராகும் இலைக்கட்சி புள்ளிகள் – 'துரோகி…' முழங்கத் தயாராகும் தி.மு.க!| கழுகார் October 15, 2026 கோட்டைவிட்ட நிர்மல் குமார்: TVK அரசுக்கு நெருக்கடி; என்ன செய்யப்போகிறார் விஜய்! கோட்டைவிட்ட நிர்மல் குமார்: TVK அரசுக்கு நெருக்கடி; என்ன செய்யப்போகிறார் விஜய்! October 15, 2026 சிறுமியின் பின்புறத்தை பிடித்து அத்துமீறியதாக கூறப்படும் ரோபோ பறிமுதல் – இயக்கியது யார்? சிறுமியின் பின்புறத்தை பிடித்து அத்துமீறியதாக கூறப்படும் ரோபோ பறிமுதல் – இயக்கியது யார்? October 15, 2026 'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' – CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர் 'ஏன் நாட்டை சீரழிக்கிறீர்கள்?' – CJP தலைவர் அபிஜித்துடன் வாக்குவாதம் செய்த மர்மநபர் October 15, 2026 "உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" – ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை "உக்ரைனை புதின் தாக்கினால், ரஷ்யாவை ட்ரம்ப் தாக்க வேண்டும்" – ஜெலன்ஸ்கியின் 'பாதுகாப்பு' கோரிக்கை October 15, 2026 வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கொன்று டிரம்மில் மறைத்த மனைவி, காதலனுக்கு மரண தண்டனை வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை கொன்று டிரம்மில் மறைத்த மனைவி, காதலனுக்கு மரண தண்டனை October 15, 2026

See all 714 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *