இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று இந்திய கூட்டணி சார்பில் சென்னையில் இன்று (அக்.15) ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் கலந்துகொண்டு பேசிய விசிக தலைவர் தொல். திருமாவளவன், ” தமது அரசியல் எதிரிகளை சொல்லி வைத்தார் போல் பாஜக காலி செய்து வருகிறது.
ஸ்டாலின், மம்தா, கெஜ்ரிவால், பினராயி விஜயன் குறிவைத்து தோற்கடிக்கப்பட்டிருக்கின்றனர்.

தேர்தல் முடிவு வந்தபோது செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்டபோதே சொன்னேன். இவற்றையெல்லாம் பார்க்கும்போது தன் இயல்பாகத் தோற்கடிக்கப்பட்டது போலத் தெரியவில்லை. அவர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள், குறிவைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று சொன்னேன்.
கொளத்தூரில் ஒரு லட்சம் பேரின் பெயர்கள் எஸ்.ஐ.ஆர் மூலம் நீக்கப்பட்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இந்தத் தகவல் கிடைத்து நான் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு கவனத்திற்கு எடுத்து சென்றேன்.
ஒரு பெண்மணி என்னைத் தொடர்புகொண்டு சதி நடக்கிறது, கொளத்தூரில் ஸ்டாலின் வெற்றி பெறுவது கடினம் என்று சொன்னார். பிறகு நான் முன்னாள் முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்தப்போது, ‘அண்ணே கொளத்தூரில் இப்படி ஒரு பிரச்னை இருக்கிறது என்கிறார்கள். நீங்கள் ஏன் தொகுதி மாறி நிற்கக்கூடாது. சேகர்பாபு அண்ணனிடமும் சொல்லியிருக்கிறேன் என்றேன்’.
அதற்கு அவர் ‘அதெல்லாம் ஒன்றுமில்லை. எஸ்.ஐ.ஆரை சரியாகத் தான் செய்துகொண்டிருக்கிறோம்’ என்று சொன்னார்.
தேர்தல் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே இந்த எச்சரிக்கை நமக்கு வந்தது என்பதற்காகத்தான் இதைச் சொல்கிறேன்” என்று பேசியிருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
மதுரை அழகர் திருவிழா முதல்.. ஆயுத பூஜை வரை! தேவாவின் இசைக்கு இத்தனை பெருமைகளா?
October 18, 2026
“ரூ.5,000 டிக்கெட் ரூ.30,000க்கு விற்பனை.." இனி இதெல்லாம் நடக்காது.. கடிவாளம் போடும் மத்திய அரசு
October 18, 2026
சென்னையை மொத்தமாக நனைத்த மழை.. தேங்கி நிற்கும் நீர்! உதவி எண்கள் அறிவிப்பு
October 18, 2026
இரவு திடீரென கொட்டிய மழை.. பறிபோன 19 உயிர்கள்.. துர்கா பூஜையில் நடந்தது என்ன? பகீர் பின்னணி
October 18, 2026
இசையமைப்பாளர் தேவாவின் இறுதி சடங்கு இன்று எங்கே, எப்போது நடக்கிறது? ரசிகர்களுக்கான முக்கிய தகவல்
October 18, 2026
"இவ்வளவு மழை இருக்கும்னு நாங்களே எதிர்பார்க்கல.." அடுத்து சென்னை ஆணையர் சொன்ன மிக முக்கிய தகவல்
October 18, 2026
மதுரை அழகர் திருவிழா முதல்.. ஆயுத பூஜை வரை! தேவாவின் இசைக்கு இத்தனை பெருமைகளா?
October 18, 2026
'The swagger is back' – Sammy thrilled with West Indies' T20I surge
October 18, 2026
“ரூ.5,000 டிக்கெட் ரூ.30,000க்கு விற்பனை.." இனி இதெல்லாம் நடக்காது.. கடிவாளம் போடும் மத்திய அரசு
October 18, 2026
சென்னையை மொத்தமாக நனைத்த மழை.. தேங்கி நிற்கும் நீர்! உதவி எண்கள் அறிவிப்பு
October 18, 2026
இரவு திடீரென கொட்டிய மழை.. பறிபோன 19 உயிர்கள்.. துர்கா பூஜையில் நடந்தது என்ன? பகீர் பின்னணி
October 18, 2026