பாலிவுட் நடிகர் இம்ரான் கான் சமீபத்தில் மும்பையில் காக்ரோச் ஜனதா கட்சியினர் தலைமை தேர்தல் கமிஷனர் பதவி விலகவேண்டும் என்று கோரி நடத்திய போராட்டத்தில் தனது காதலியுடன் கலந்து கொண்டார். இதையடுத்து இம்ரான் கானும், அவரது காதலியும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இம்ரான் கானுக்கு அமெரிக்க குடியுரிமை மற்றும் வெளிநாட்டு இந்தியர் அடையாள அட்டையும் இருக்கிறது. அவர் முழுமையான இந்தியர் என்ற அடையாளம் கிடையாது. ஆமீர் கானின் உறவினரான இம்ரான் கான் மும்பை போராட்டத்தில் தனக்கு காயம் ஏற்பட்டதையும் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் காக்ரோச் ஜனதா போராட்டத்தில் பங்கேற்றதற்காக வரும் 28ம் தேதிக்குள் இந்தியாவை விட்டு வெளியேறும்படி மும்பை போலீஸார் இம்ரான் கானுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

இது குறித்து மும்பை போலீஸார் வெளியிட்டுள்ள செய்தியில்,”இந்தியக் குடிமகனாக இல்லாத நிலையிலும் போராட்டத்தில் பங்கேற்றதற்காக, இமிகிரேசன் சட்டத்தின் தொடர்புடைய பிரிவின் கீழ் இம்ரான் கான் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தனர்.

குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டம், 2025′-ன் விதிகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 7 வது பிரிவு இந்தியாவில் வெளிநாட்டவர்களின் வருகை, வெளியேற்றம், இருப்பு அல்லது நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவோ, வரையறுக்கவோ அல்லது தடைசெய்யவோ தேவையான உத்தரவுகளையோ, வழிகாட்டுதல்களையோ அல்லது அறிவுறுத்தல்களையோ பிறப்பிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்குகிறது.

முன்னதாக மும்பை பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான கிரீத் சோமையா மும்பை போலீஸாரிடம் கொடுத்திருந்த புகாரில் இம்ரான் கான் சட்டவிரோதமான அரசியல் போராட்டத்தில் பங்கேற்றதாகவும், வெளிநாட்டு வாழ் இந்தியர் சட்ட விதிமுறைகளையும் விசா நிபந்தனைகளையும் மீறியுள்ளதாகவும் குறிப்பிட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி இருந்தார்.

மும்பை போராட்டத்தில் பங்கேற்றது குறித்து இம்ரான் கான் அளித்த பேட்டியில், தான் மும்பையின் ஒரு குடிமகனாகவே இந்த இடத்திற்கு வந்ததாகவும், எந்தவொரு குறிப்பிட்ட கோரிக்கையுடனும் வரவில்லை என்றும் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,” எனக்கு எந்தக் கோரிக்கைகளும் இல்லை. நான் ஒரு குடிமகனாக, இந்த நகரத்தில் வசிக்கும் ஒரு நபராகத்தான் இங்கே வந்திருக்கிறேன். மக்களின் நடமாட்ட சுதந்திரம் ஏன் கட்டுப்படுத்தப்படுகிறது? மக்களின் குரல்கள் ஏன் ஒடுக்கப்படுகின்றன? இதைப் புரிந்துகொள்ளவே நான் இங்கே வந்திருக்கிறேன்,” என்று கூறினார்.

More in TamilNews
ராகு கேது பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு வரும் பிரம்மாண்ட மாற்றம்.. இனி ஏறுமுகம் தான் ராகு கேது பெயர்ச்சி 2026: மேஷ ராசிக்கு வரும் பிரம்மாண்ட மாற்றம்.. இனி ஏறுமுகம் தான் October 17, 2026 இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார்! மாரடைப்பால் உயிர் பிரிந்தது! இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா காலமானார்! மாரடைப்பால் உயிர் பிரிந்தது! October 17, 2026 தேவாவின் எவர்கிரீன் ஹிட்ஸ் பாடல்கள்.. மறக்க முடியுமா அந்த நினைவுகளை? காலத்துக்கும் அழியாத காவியம் தேவாவின் எவர்கிரீன் ஹிட்ஸ் பாடல்கள்.. மறக்க முடியுமா அந்த நினைவுகளை? காலத்துக்கும் அழியாத காவியம் October 17, 2026 இது தேவா பாட்டு சார்..இளையராஜா – ஏஆர் ரஹ்மானை தாண்டி ஜொலித்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா! மறக்க முடியுமா? இது தேவா பாட்டு சார்..இளையராஜா – ஏஆர் ரஹ்மானை தாண்டி ஜொலித்த ‘தேனிசைத் தென்றல்’ தேவா! மறக்க முடியுமா? October 17, 2026 கால்களை நீட்ட முடியல.. குறுகலான சீட்.. நீண்ட தூர அரசு பஸ் பயணிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா? கால்களை நீட்ட முடியல.. குறுகலான சீட்.. நீண்ட தூர அரசு பஸ் பயணிகளுக்கு விடிவுகாலம் பிறக்குமா? October 17, 2026 டாப்சிலிப், முதுமலை போக வேண்டாம்.. கோவையிலேயே யானைகளை பார்க்கலாம்.. சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு டாப்சிலிப், முதுமலை போக வேண்டாம்.. கோவையிலேயே யானைகளை பார்க்கலாம்.. சாடிவயல் யானைகள் முகாம் திறப்பு October 17, 2026

See all 744 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *