நேற்று மாலை முதல் சென்னையில் அதிகனமழை பொழிந்திருந்தது. குறிப்பாக, வடசென்னை பகுதிகளில் குறுகிய நேரத்தில் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு அதிக கனமழை பொழிந்திருக்கிறது. இந்நிலையில், சென்னையின் கடந்த 24 மணி மழைப்பொழிவு ரிப்போர்ட்டை மாநகராட்சி ஆணையர் சமீரன் வெளியிட்டிருக்கிறார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், ‘சென்னையில் 20 செ.மீக்கும் அதிகமாக அதிகனமழை 6 இடங்களில் பதிவாகியிருக்கிறது. அதேமாதிரி, 11.5 செ.மீக்கும் அதிகமாக மிகக் கனமழை 12 இடங்களில் பதிவாகியிருக்கிறது. அதிகபட்சமாக பாரிஸில் 36.3 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது’ எனக் கூறியிருக்கிறார். இது நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு ஆகும்.
வானிலை மையம் கனமழை எச்சரிக்கை விடுத்திருந்தாலும் இவ்வளவு பெரிய மழையை எதிர்பார்க்கவில்லை என மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னதாக கூறியிருந்தார்.

மாநகராட்சி ஆணையர் வெளியிட்டிருக்கும் புள்ளிவிவரங்களின்படி சென்னையில் அதிகளவில் மழைப்பொழிவை பெற்றிருக்கும் டாப் 10 இடங்கள் இங்கே.
* Z 05 பாரிஸ் (வார்டு 60) – 36.34 செ.மீ
* Z 01 கத்திவாக்கம் – 34.44 செ.மீ
* Z 12 மீனம் பாக்கம் – 28.58 செ.மீ
* Z 05 சென்னை சென்ட்ரல் – 27.45 செ.மீ
* Z 01 திருவொற்றியூர் – 22.44 செ.மீ
* Z 01 எண்ணூர் (வார்டு 03) – 21.58 செ.மீ
* Z 01 கார்கில் நகர் – 19.24 செ.மீ
* Z 05 செமட்ரி ரோடு (பிரிவு 51) – 17.94 செ.மீ
* Z 10 சைதாப்பேட்டை (வார்டு 139) – 17.02 செ.மீ
* Z 04 தண்டையார்பேட்டை – 16.65 செ.மீ
மழை பாதிப்புகளை பற்றி மக்கள் புகாரளிக்க 1913 என்ற எண்ணை அழைக்கலாம் என்றும் மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டிருக்கிறது.
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம்
October 18, 2026
அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி
October 18, 2026
காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு
October 18, 2026
சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்?
October 18, 2026
"தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன?
October 18, 2026
'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள்
October 18, 2026
Several dead or injured in major fire at Canada military base
October 18, 2026
காக்கி சட்டையில் மாஸ் காட்டும் பிரபாஸ்.. புது போஸ்டருடன் வெளியான ஸ்பிரிட் படத்தின் ரிலீஸ் தேதி!
October 18, 2026
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம்
October 18, 2026
அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி
October 18, 2026
அவ்வளவு ஈகோவா.. தேவா மறைவுக்கு இரங்கல் அறிக்கை கூட இல்லையா? அஜித்தை கிழித்தெறியும் ரசிகர்கள்
October 18, 2026
காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு
October 18, 2026