1200 கோடி ரூபாயில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் கட்ட தமிழக அரசு திட்டமிட்டது. ஆனால், பட்டினப்பாக்கம் மீனவ கிராமத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவே பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டலாம் என அரசு முடிவெடுத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. நிலவரத்தை அறிய தலைமைச் செயலகத்தில் முதல்வருக்கு நெருக்கமாக இருக்கும் சில அதிகாரிகளிடம் பேச்சுக் கொடுத்தோம்.

கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது முதல்வர் விஜய் சட்டமன்றத்திலேயே புதிய தலைமைச் செயலக திட்டம் குறித்து அறிவித்திருந்தார். அடுத்த சில நாட்களிலேயே பட்டினப்பாக்கத்தில் உள்ள முதல்வரின் அலுவலகத்துக்கு எதிரே கடலை பார்த்தபடிக்கு ஒரு இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் தலைமைச் செயலகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையையும் அரசு கேட்டது.
பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட அரசு மும்மரம் காட்டுவதை அறிந்த மீனவ கிராமத்தினர் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மீனவ கிராமத்தினர் ஒன்று கூடி அரசுக்கு எதிராக போராட்டமும் நடத்தினர். முதல்வர் மீனவர்களின் பக்கம்தான் நிற்பார் என அமைச்சர்கள் பேசினாலும், அந்த புதிய தலைமைச் செயலகத் திட்டத்தை கைவிடுவதற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகமலே இருந்தது.

இந்நிலையில்தான் பல்லவன் டிப்போ அமைந்திருக்கும் இடத்தில் தலைமைச் செயலகத்தை கட்ட அரசு முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியானது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பல்லவன் இல்லத்தில் தலைமைச் செயலகம் அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக நம்மிடம் பேசிய முதல்வருக்கு நெருக்கமான சில சீனியர் அதிகாரிகள், ‘கிண்டி, பல்லவன் இல்லம், பட்டினப்பாக்கம் என இந்த இடங்கள் எல்லாமே ஆரம்பத்திலேயே எங்களின் பரிசீலனையில் இருந்ததுதான். இப்போது பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்போகிறோம் என்கிற தகவலில் உண்மையில்லை. இந்த சமயத்தில் அதைப் பற்றி எந்த ஆலோசனையும் நடைபெறவில்லை. பட்டினப்பாக்கம் திட்டத்தையும் இன்னமும் முழுமையாக கைவிடவில்லை. எல்லாமே பரிசீலனையில்தான் இருக்கிறது’ என்றனர்.
தமிழகத்தில் மழை ஆட்டம் ஆரம்பம்! 17 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை… சென்னையில் எப்படி?
October 22, 2026
தலையெழுத்தையே மாற்றும் பிரம்மா… திருப்பட்டூர் கோயிலின் மகிமை தெரியுமா?
October 22, 2026
இன்றைய பலன்: அதிர்ஷ்டம் தேடி வரும் ராசிகள்… இன்று யார் கவனமாக இருக்க வேண்டும்?
October 22, 2026
தசரா விழாவில் மிரண்டு ஓடிய யானை! நடு வழியில் நிறுத்தப்பட்ட ஊர்வலம்.. பதைபதைத்த கர்நாடகா
October 21, 2026
அமைச்சர்கள் கார் வாங்க ரூ.26 லட்சம், எம்எல்ஏ-வுக்கு ரூ.15 லட்சம்.. உச்சவரம்பு நிர்ணயித்த தமிழக அரசு!
October 21, 2026
செஞ்சி சிறுமி எங்கே? 10-வது நாளாக தேடும் போலீசார்.. வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவு
October 21, 2026
Who is Marine Le Pen? Why are betting markets bullish on her winning 2027 French presidency amid unrest in France
October 22, 2026
Heavy rain triggers minor landslips; Bilaspur-Tirunelveli Superfast Express loco derails at Parassala in Keralam
October 22, 2026
GRAP 1 in Delhi: Impact on NCR schools? Open or closed? Know about restrictions and bans – Allowed vs not allowed today
October 22, 2026
GRAP 1 in Delhi: Impact on NCR offices? WFH or work as usual? Know about restrictions and bans today
October 22, 2026
Schools closed in five Tamil Nadu districts after overnight rain
October 22, 2026
3 முறை ஐபிஎல் ஹாட்ரிக் எடுத்த வீரரை தூக்கிய கங்குலி.. DC அணியின் புதிய ஸ்பின் கோச் ஆன அமித் மிஸ்ரா
October 22, 2026