காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வதேராவின் மகனும் புகைப்படக் கலைஞருமான ரையான் வதேராவின் ‘நோ ஐடியா இஸ் ஃபைனல்’ (No Idea Is Final) என்ற புகைப்படக் கண்காட்சி, டெல்லியில் உள்ள பிகானேர் ஹவுஸில் நேற்று நடைபெறவிருந்தது. கண்காட்சி தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக, அதில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான புகைப்படங்களை அகற்றுமாறு ராஜஸ்தான் மாநில அரசால் நிர்வகிக்கப்படும் பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் வற்புறுத்தியதாக ரையான் வதேரா குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, “சமீபத்தில் தலைநகரில் நடந்த இளைஞர்களின் போராட்டங்களை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 105 புகைப்படங்களில் 75 புகைப்படங்களை உடனடியாக அகற்ற வேண்டும்.
இல்லையெனில் கண்காட்சிக்கான அனுமதி ரத்து செய்யப்படும் என்று நிர்வாகம் தெரிவித்திருக்கிறது. அகற்றச் சொல்லப்பட்ட படங்களில் இந்திய தேசியக் கொடி இடம்பெற்ற இரண்டு படங்களும் அடங்கும். அதில் ஒரு படத்தை நான் இல்லாத நேரத்தில் நிர்வாகத்தினர் வலுக்கட்டாயமாக அகற்றிய நிலையில், இறுதியில் மொத்தம் 74 புகைப்படங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருக்கின்றன. நாட்டைச் சுற்றி நடக்கும் மக்கள் இயக்கங்களையும், மக்கள் ஒன்றாக இணையும் போது உருவாகும் கவிதையையும் தாளத்தையும் கலை ரீதியாகப் பதிவு செய்வதே எமது நோக்கம்.
ஆனால், நேரமும் சூழலும் சரியில்லை. அதனால், இந்த புகைப்படங்களின் உள்ளடக்கம் ‘ஆட்சேபனைக்குரியது’ எனக் கூறி துணை மற்றும் முதன்மை குடியிருப்பு ஆணையர்கள் கூறினர். கலை வெளிப்பாட்டுச் சுதந்திரம் யாருக்கும் பறிக்கப்படக் கூடாது.” எனத் தெரிவித்திருக்கிறார். இந்தச் சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ரையானின் தாயாருமான பிரியங்கா காந்தி, “நாட்டின் இளைஞர்களின் குரலை நசுக்க நினைக்கிறார்கள். புகைப்படங்களில் எந்தவித அவதூறான கருத்துக்களோ அல்லது நபர்களைக் காயப்படுத்தும் விஷயங்களோ இல்லை. போராட்டத்தின் நேரடிப் பதிவுகள் மட்டுமே உள்ளன.
அதை நீக்கச் சொல்வதன் மூலம் நாட்டில் ஜனநாயகம் இல்லை என்பது தெளிவாகிறது. அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் கருத்துச் சுதந்திரத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள்.” எனக் குறிப்பிட்டிருந்தார்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா இது குறித்துத் தெரிவிக்கையில், “தேசியக் கொடியின் படத்தைக் கூட அனுமதிக்க மறுக்கும் அளவுக்கு தணிக்கை செய்வது கலையின் பிழையல்ல, இந்த ஆட்சியின் பிழை. இந்த அரசு கருத்துக்களுக்கும் புகைப்படங்களுக்கும் எந்த அளவிற்கு பயப்படுகிறது என்பதையே இது காட்டுகிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
ராஜஸ்தான் பா.ஜ.க அரசின் கீழ் இயங்கும் பிகானேர் ஹவுஸ் நிர்வாகம் தரப்பில் இது குறித்து அதிகாரபூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
WPL AUCTION : 15 வயதிலேயே புதிய வரலாறு! கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த சிறுமி!
October 28, 2026
SIR விவகாரம்: நவம்பர் 1 -ல் ஒன்றினையும் INDIA BLOC's – CJP ! எகிறும் எதிர்பார்ப்பு !
October 28, 2026
RATHAVETTAI EPISODE 12 :ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் ஆற்காடு சுரேஷின் ரத்த சரித்திரம் !
October 28, 2026
“தேவையற்ற வதந்திகள்.. "- கொளத்தூர் எம்.எல்.ஏ வி.எஸ் பாபு உடல்நிலை குறித்து அமைச்சர் மரிய வில்சன்
October 28, 2026
அனிருத் – காவ்யா மாறன் வரவேற்பு INVITATION விலை தெரியுமா? டிசைன் செய்யவே இத்தன மாசமா !
October 28, 2026
இனிக்க இனிக்க காதல் சொல்லும்….என்னை தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி!
October 28, 2026
Persons with disabilities can now travel for free in government buses with UDID card
October 28, 2026
Elderly man dies after being pushed down by two persons
October 28, 2026
Babydoll singer says life will 'never be the same again' after UK number one
October 28, 2026
Sam Fender pre-sale moved after 'bot attack'
October 28, 2026
இஸ்ரேல் தேர்தலை களவாடிய அரபு கட்சிகள்.. அழுது புலம்பும் பெஞ்சமின் நெதன்யாகு..!
October 28, 2026
World Wrestling C'ships: India script history as Neelam, Kajal settle for silver
October 28, 2026