விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி, கடந்த 11-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடினார். அதன் பிறகு இரவு தன்னுடைய பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த அவர், மறுநாள் 12-ம் தேதி அதிகாலையில் மாயமானார். பெற்றோர் மற்றும் நண்பர்களுடன் முதல் நாள் மகிழ்ச்சியாக பிறந்தநாளைக் கொண்டாடிய சிறுமி மறுநாளே காணாமல் போனதால், அதிர்ச்சியில் உறைந்தது கிராமம். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த சத்தியமங்கலம் போலீஸார், சிறுமியைத் தேட ஆரம்பித்தனர்.

செஞ்சி சிறுமி வீட்டில் விசாரணையை துவக்கிய சி.பி.சி.ஐ.டி

ஆனால் முதல் நாள், இரண்டாவது நாள் என அடுத்தடுத்த நாள்களிலும் சிறுமி மாயமான விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், அலர்ட் ஆனது விழுப்புரம் மாவட்டக் காவல்துறை. அதையடுத்து நான்கு டி.எஸ்.பி-க்கள் தலைமையில் சுமார் 300 போலீஸார் கொண்ட 8 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டது.

கடந்த 11-ம் தேதி இரவு 11 மணி முதல் 12-ம் தேதி அதிகாலை 3 மணி வரை அந்தப் பகுதியில் இருக்கும் செல்போன் டவர்களில் பதிவான சுமார் 500-க்கும் மேற்பட்ட அழைப்புகள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. அதேபோல கோட்டக்குப்பம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் உதவியுடன், அந்த கிராமங்களைச் சுற்றியிருக்கும் கிணறு உள்ளிட்ட நீர் நிலைகளில் சிறுமி சிக்கியிருக்கிறாரா என்று ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் டிரோன்கள் மூலம் அந்த கிராமம் மற்றும் அதைச் சுற்றியிருந்த கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளிலும், மோப்ப நாய்கள் உதவியுடன் கிராமத்தின் அனைத்து வீடுகளிலும் சோதனை செய்யப்பட்டது. ஆனால் சிறுமி குறித்த எந்தத் தகவலும் கிடைக்காமல் திணறியது காவல்துறை.

இதற்கிடையில் சிறுமியைத் தேடும் பணியில் காவல்துறை மெத்தனம் காட்டுவதாகக் குற்றம்சுமத்திய தி.மு.க, அதைக் கண்டித்து அக்டோபர் 22-ம் தேதி (இன்று) போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தது. அதேபோல உள்ளூர் போலீஸாரின் விசாரணையில் முன்னேற்றம் இல்லை என்பதால், வழக்கை சி.பி.சி.ஐ.டிக்கு மாற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது.

மாயமான செஞ்சி சிறுமி வீட்டில் போலீஸார்

அதன்படி வழக்கை சி.பி.சி.ஐ.டி பிரிவுக்கு மாற்றி நேற்று இரவு உத்தரவிட்டார் காவல்துறை டி.ஜி.பி. அதையடுத்து சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி கீதா, இன்ஸ்பெக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் இன்று ஆலம்பூண்டி கிராமத்துக்குச் சென்று, சிறுமியின் வீட்டிலிருந்து விசாரணையைத் துவக்கியிருக்கின்றனர். 11 நாள்களாகியும் சிறுமி வழக்கில் எந்தவித முன்னேற்றமும் இல்லாததால், பதற்றத்தில் இருக்கிறது ஆலம்பூண்டி கிராமம்.

More in TamilNews
நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது – காவல்துறை கூறுவது என்ன? நிதி ஆலோசனை வழங்கிய ஹரிஷ் தற்கொலை: யூட்யூபர் ஜேசன் சாமுவேல் கைது – காவல்துறை கூறுவது என்ன? October 22, 2026 சுப்மன் கில்லின் சாதனையைத் தகர்த்தார் ஹாரி ப்ரூக்: அதிவேக இரட்டை சதம் விளாசி புதிய வரலாறு! சுப்மன் கில்லின் சாதனையைத் தகர்த்தார் ஹாரி ப்ரூக்: அதிவேக இரட்டை சதம் விளாசி புதிய வரலாறு! October 22, 2026 வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கும் அண்ணாமலை.. கொதிக்கும் பாஜக.. விஜய் மீது சாப்ட் கார்னர் ஏன் வரம் கொடுத்தவர்கள் தலையிலேயே கை வைக்கும் அண்ணாமலை.. கொதிக்கும் பாஜக.. விஜய் மீது சாப்ட் கார்னர் ஏன் October 22, 2026 எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில்.. TVS Emerald Avalon வழங்கும் வீடுகள்.. வெறும் ரூ.99 லட்சம் முதல்! எல்லாமே கைக்கெட்டும் தூரத்தில்.. TVS Emerald Avalon வழங்கும் வீடுகள்.. வெறும் ரூ.99 லட்சம் முதல்! October 22, 2026 IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் – 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி IND vs NZ: நம்பிக்கை நட்சத்திரமாக மாறிய நமன்தீர் – 226 ரன்களை சேஸ் செய்து இந்தியா சாதனை வெற்றி October 22, 2026 சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு சொகுசு கப்பலை தாக்கிய சவுதி.. நடுக்கடலில் தவித்த 14 இந்தியர்களை மீட்டுள்ளோம் – ஹவுதிகள் அறிவிப்பு October 22, 2026

See all 603 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *