ஒரு Engineering மாணவர், பாடப்புத்தகத்தில் படிக்கும் விஷயங்களை practical-ஆக செய்து பார்க்கும்போதுதான் அந்தக் கல்வி முழுமை பெறுகிறது. அதிலும் வேகமாக வளர்ந்து வரும் Electric Vehicle போன்ற துறைகளில், Industry-யில் பயன்படுத்தப்படும் technology-யை நேரடியாகப் புரிந்துகொள்வது மாணவர்களுக்கு மிகப்பெரிய advantage.
1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட Rajalakshmi Engineering College, கல்வியுடன் Industry தேவைகளையும் இணைத்து மாணவர்களைத் தயார்படுத்துவதில் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக பல்வேறு துறைகளில் Centre of Excellence-களை உருவாக்கி வரும் கல்லூரி, தற்போது Electric Mobility துறையிலும் ஒரு முக்கியமான முயற்சியை முன்னெடுத்துள்ளது.
RAPTEE நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள Centre of Excellence for Electric Mobility, EV technology-யை மாணவர்கள் நேரடியாகக் கற்றுக்கொள்ளும் practical learning space-ஆக உருவாகியுள்ளது.
Battery-யில் இருந்து Bike வரை! வெளியில் இருந்து பார்க்கும்போது Electric Bike என்பது ஒரு Battery, Motor, Accelerator என எளிமையாகத் தெரிந்தாலும், அதன் பின்னால் பல்வேறு technologies இணைந்து செயல்படுகின்றன. இந்த Centre of Excellence-ல் Battery, Battery Management System, Motor, Motor Controller, Inverter, Wiring உள்ளிட்ட EV-யின் முக்கியமான பகுதிகளை மாணவர்கள் நேரடியாகப் புரிந்துகொள்ளும் வசதி உள்ளது.
ஒரு புதிய காம்போனென்ட் அல்லது டெக்னாலஜியை உருவாக்கும்போது, அதை முதலில் simulation மூலம் test செய்து பார்க்கலாம். அதன்பிறகு அதே டெக்னாலஜியை லேபில் practical-ஆக test செய்து, எதிர்பார்த்த ரிசல்ட் கிடைக்கிறதா என்பதை validate செய்ய முடியும்.

இதனால் ஒவ்வொரு மாற்றத்திற்காகவும் vehicle-ஐ road-க்கு எடுத்துச் சென்று test செய்ய வேண்டிய அவசியம் குறைகிறது. Development process-ம் வேகமாகிறது. Digital Twin… ஒரு Virtual Vehicle! இந்த lab-ல் மாணவர்களுக்கு அறிமுகமாகும் முக்கியமான technology-களில் ஒன்று Digital Twin.
ஒரு actual electric vehicle எப்படி வெவ்வேறு சூழ்நிலைகளில் செயல்படும் என்பதை digital environment-ல் simulate செய்து பார்க்கும் technology இது. Battery-யை தொடர்ந்து charge மற்றும் discharge செய்தால் அதன் செயல்பாட்டு நிலை எப்படி மாறும்? ஒரு battery cell சரியாக இயங்கவில்லை என்றால் system அதை எப்படி கையாளும்? போன்ற வெவ்வேறு சூழ்நிலைகளை உருவகப்படுத்துதல் மூலம் மாணவர்கள் ஆய்வு செய்ய முடியும்.
இதன் மூலம் ஒரு EV-யை ஓட்டிப் பார்ப்பதைத் தாண்டி, அதன் பின்னால் இயங்கும் டெக்னாலஜியையும் புரிந்துகொள்ள முடிகிறது. Students-க்கு Industry Experience! இந்த Centre of Excellence-ன் முக்கியமான நோக்கம், Industry மற்றும் Academia-வை இணைப்பது.
Rajalakshmi Engineering College மாணவர்கள் உருவாக்கும் electric vehicle projects மற்றும் competitions-க்கான vehicles-ஐ test செய்வதற்கும் இந்த facility பயன்படுகிறது. Battery performance, charging-discharging, Motor performance உள்ளிட்டவற்றை மாணவர்கள் நேரடியாகச் சோதிக்க முடிகிறது.

மேலும், RAPTEE electric bike-ஐ students மற்றும் faculty members test drive செய்து, அதன் வெவ்வேறு riding modes, speed மற்றும் performance-ஐ நேரடியாக அனுபவிக்கவும் வாய்ப்பு கிடைக்கிறது. இதன் மூலம் ஒரு project-ஐ Component level-ல் test செய்வது, System level-ல் validate செய்வது, Vehicle-ல் implement செய்வது என முழுமையான development cycle-ஐ மாணவர்கள் அனுபவிக்கிறார்கள்.
Engineering education என்பது புத்தகத்தில் இருக்கும் theory-யை மட்டும் கற்றுக்கொள்வது அல்ல. அதை வைத்து என்ன உருவாக்க முடியும் என்பதையும் தெரிந்துகொள்வதுதான் அடுத்த கட்டம். அந்த வகையில், Rajalakshmi Engineering College – RAPTEE Centre of Excellence for Electric Mobility, மாணவர்களுக்கு EV technology-யை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், அதைத் தொட்டு, test செய்து, புரிந்துகொண்டு உருவாக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.
Classroom-ல் தொடங்கும் learning… Industry-க்குள் தொடரும் experience!
"2032-க்குள் ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம்" – விபத்தை குறைக்க மத்திய அமைச்சகம் திட்டம் | In-Depth
October 24, 2026
ரூ.1.60 லட்சத்தில் புதிய அப்டேட்களுடன் பஜாஜ் பல்சர் NS200 அறிமுகம்! ஏகப்பட்ட வசதிகள்!
October 23, 2026
இதுதான் பிசினஸ் க்ளாஸா, ஸ்பெஷல் எடிசன் கார்களை பார்த்து வாங்குங்க?
October 23, 2026
எர்டிகா, இன்னோவா நெருக்கடியா இருக்கா? பெரிய குடும்பத்துக்கு டெம்போ டிராவலர் Own Board வாங்கலாமா?
October 23, 2026
கார்களில் தானியங்கி பிரேக் சிஸ்டத்தை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டம்!
October 23, 2026
டெஸ்லா ரோட்ஸ்டருக்கு ரூ.2.5 கோடி அட்வான்ஸ்?… வித்தையைக் காட்டி கல்லாக்கட்டும் எலான் மஸ்க்!
October 23, 2026
Afghanistan leapfrog England in ODI rankings, reclaim their all-time high position
October 24, 2026
IOA Athletes’ Commission election: 9 sports, 10 seats and uneven representation
October 24, 2026
In Tiger Shroff Assassination Bid, Mumbai Police Detain 11th Suspect From Indore
October 24, 2026
Asian Para Games 2026 conclude in Nagoya: India sign off with record 114 medals
October 24, 2026